நினைத்தாலே இனிக்கும்
Jump to navigation
Jump to search
நினைத்தாலே இனிக்கும் | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | ஆர். வெங்கட்ராமன் (பிரேமாலயா) |
கதை | சுஜாதா |
திரைக்கதை | கே. பாலச்சந்தர் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | கமல்ஹாசன் ஜெயபிரதா ரஜினிகாந்த் |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
வெளியீடு | 14 ஏப்ரல் 1979(தமிழ்) 19 ஏப்ரல் 1979 (தெலுங்கு) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நினைத்தாலே இனிக்கும் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயபிரதா, ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். தெலுங்கில் 'அந்தமானிய அனுபவம்' எனும் பெயரில் 1979 ஏப்ரல் 19ல் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் பெரும்பகுதி சிங்கப்பூர் நாட்டில் படமாக்கப்பட்டது.[1]
நடிகர்கள்[தொகு]
- கமல்ஹாசன் - சந்துரு
- ஜெயபிரதா - சோணா
- ரஜினிகாந்த் - தீபக்
- கீதா - மீனா
- ஜெயசுதா - காமினி
- சரத் பாபு (சிறப்பு தோற்றம்)
- நாராயண ராவ் (சிறப்பு தோற்றம்)
- எஸ். வி. சேகர் (சிறப்பு தோற்றம்)
பாடல்கள்[தொகு]
எம். எஸ். விஸ்வநாதன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் கண்ணதாசன் அவர்களால் அனைத்து பாடல் வரிகளும் எழுதப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "மறக்க முடியுமா? - நினைத்தாலே இனிக்கும்". தினமலர் (22 மே 2020). பார்த்த நாள் 22 அக்டோபர் 2020.