சரத் பாபு
Jump to navigation
Jump to search
சரத் பாபு | |
---|---|
![]() | |
பிறப்பு | சரத் பாபு 31 சூலை 1951 ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
மற்ற பெயர்கள் | சத்யம் பாபு |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1973–தற்போது |
வாழ்க்கைத் துணை | ரமா பிரபா (1981–1988 விவாகரத்து)[1] சினேகா நம்பியார் (1990–2011 விவாகரத்து) |
சரத் பாபு (தெலுங்கு: శరత్ బాబు) இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.
நடித்த திரைப்படங்கள்[தொகு]
தமிழ் திரைப்படங்கள்
- பட்டினப்பிரவேசம் (1977)
- நிழல் நிஜமாகிறது (1978)
- முள்ளும் மலரும் (1978)
- நினைத்தாலே இனிக்கும் / அந்தமைன அனுபவம் (1979)
- உதிரிப்பூக்கள் (1979)
- சரணம் ஐயப்பா (1980)
- நெற்றிக்கண் (1981)
- 47 நாட்கள் / 47 ரோஜூலு (1981)
- சட்டம் (1983)
- மனக்கணக்கு (1986)
- அண்ணாமலை (1992)
- முத்து (1995)
- லவ் பேர்ட்ஸ் (1996)
- ஆளவந்தான் (2001)
- பாபா (2002)
- பாரிஜாதம்
- வெள்ளித்திரை (2008)
- மாசாணி (2013)
தெலுங்கு திரைப்படங்கள்
- இதி கத காடு (1979)
- குப்பெடு மனசு / நூல் வேலி (1979)
- சுருங்கர ராமுடு (1979)
- மூடு முல்ல பந்தம் (1980)
- சாகர சங்கமம் / சலங்கை ஒலி (1983)
- சுவாதி முத்யம் / சிப்பிக்குள் முத்து (1986)
ஆதாரம்[தொகு]
- ↑ "சரத்பாபு ஹீரோவா? வில்லனா? இதில் ஜெமினியை கோர்த்து விடுவது டோலிவுட் போதைக்கு கோலிவுட் ஊறுகாயா?". தினமணி. 6 பிப்ரவரி 2019. 23 செப்டம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்பு[தொகு]