காவியத் தலைவி
காவியத் தலைவி | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | சௌகார் ஜானகி செல்வி பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் சௌகார் ஜானகி |
வெளியீடு | அக்டோபர் 1, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 4561 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காவியத் தலைவி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
கதை[தொகு]
தேவியும் சுரேஷும் காதலித்தனர். சுரேஷ் பாரிஸ்டர் படிப்பிற்கு வெளிநாட்டு சென்றார். தேவியின் தந்தை அந்த நேரத்தில் கடன் தொல்லையால் அவதிப்பட்டார். கடன் கொடுத்த பரந்தாமன் 'பணத்தை திருப்பி கொடு அல்லது உன் மகளை கொடு' கேட்டான். பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் தேவி பரந்தாமனை மணந்தாள். குதிரை சூதாட்டத்தில் ஆர்வம் கொண்ட பரந்தாமன் தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் இழந்தான். பணத்திற்காக மனைவியை விற்கமுற்பட்டான். அங்கிருந்து தப்பி ஓடி வந்து ஒரு ரயிலில் ஏறுகிறாள் தேவி.
நடிகர்கள்[தொகு]
- ஜெமினி கணேசன் - சுரேஷ்
- சௌகார் ஜானகி - தேவி (மீரா பாய்) & கிரிஷ்னா
- ரவிச்சந்திரன்
- வி.எஸ். ராகவன்
- எம். ஆர். ஆர். வாசு
- எஸ். வரலட்சுமி
பாடல்கள்[தொகு]
எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
பாடல் | பாடியோர் |
---|---|
ஆரம்பம் இன்றே ஆகட்டும் | எஸ். பி. பாலசுப்ரமணியம், எல். ஆர். ஈஸ்வரி |
என் வானத்தில் ஆயிரம் | பி. சுசீலா |
ஒரு நாள் இரவு | பி. சுசீலா, எஸ். வரலட்சுமி |
கையோடு கை சேர்க்கும் | பி. சுசீலா |
பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு | பி. சுசீலா |
நேரான நெடுஞ்சாலை ஓரிடத்தில் | எம். எஸ். விஸ்வநாதன் |