ரவிச்சந்திரன் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரவிச்சந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரவிச்சந்திரன்
பிறப்புபி. எஸ். ராமன்
மார்ச்சு 30, 1942(1942-03-30)
கோலாலம்பூர், மலேசியா
இறப்பு25 சூலை 2011(2011-07-25) (அகவை 74)
பணிநடிகர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1964-2011
வாழ்க்கைத்
துணை
விமலா
சீலா (மணமுறிவு)
பிள்ளைகள்4 (அம்சவர்தன், ஜார்ஜ் விஷ்ணு உட்பட)
உறவினர்கள்தன்யா இரவிச்சந்திரன் (பேர்த்தி)

இரவிச்சந்திரன் (30 மார்ச் 1942 – 25 சூலை 2011) தமிழ்த் திரைப்பட நடிகராவார். 1960கள்-70களில் கதாநாயகனாகவும் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்[1].

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

இரவிச்சந்திரனின் இயற்பெயர் இராமன். திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த 1951ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகு திருச்சியில் உள்ள புனித யோசப் கல்லூரியில் படித்தார். ரவிசந்திரனின் சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வாங்கல் கிராமம். இவரது இளமைக்காலம் மலேசியாவின் கோலாலம்பூரில் கழிந்தது. ரவிச்சந்திரனின் தந்தை பைரோஜி சீனிவாசன். மலேசியாவில் தமிழ் நேசன் என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். கோலாலம்பூர் தமிழ் சங்கம் நடத்திய பள்ளியில் படித்தார். மலேசிய தமிழ் மாணவர்களில் முதல் மாணவராக தேர்வு பெற்ற இரவிச்சந்திரன், மருத்துவம் படிக்க விரும்பி இந்தியா வந்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்[2].

சென்னையில் மருத்துவ படிப்பு படிக்க வந்தபோது இயக்குனர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார். அதன் மூலம் 1964ஆம் ஆண்டு ‘காதலிக்க நேரமில்லை‘ படத்தின் கதாநாயகனானார்.

திரைப்படத் துறை பங்களிப்புகள்[தொகு]

நடிகர்[தொகு]

ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மூலம் இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் 1964-ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இதயக்கமலம், குமரிப் பெண், அதே கண்கள், கௌரி கல்யாணம், மதராஸ் டு பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு, இதயக்கமலம், ஊமை விழிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக நடித்த படம் ஆடுபுலி.

இயக்குனர்[தொகு]

மானசீக காதல், மந்திரன் உள்பட 7 படங்களை இயக்கினார்.

தயாரிப்பாளர்[தொகு]

தமிழ், மலையாளத்தில் சில படங்களை சொந்தமாக தயாரித்தார்.

இறப்பு[தொகு]

இரவிச்சந்திரன் சிறுநீரகக் கோளாறு காரணமாக 2011 சூலை 25 அன்று இரவு 8.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.[3][4]. மலையாள முன்னணி நடிகை ஷீலாவை மணம் புரிந்து பின்னர் விமலா என்பவரை மணம் புரிந்தார். பாலாஜி, அம்சவர்தன் என்ற இரு மகன்களும், இலாவண்யா என்ற மகளும் உள்ளனர். இவருக்கும் ஷீலாவிற்கும் பிறந்த ஜியார்ஜ் திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]