தொகைத் திரைப்படம்
Appearance
தொகைத் திரைப்படம் அல்லது தொகுப்புத் திரைப்படம் (Anthology film) என்பது பல குறும்படங்களைக் கொண்ட ஒரு திரைப்படமாகும். ஒவ்வொரு குறும்படமும் தன்னளவில் முழுமையடைந்து மற்றொன்றிலிருந்து வேறுபட்டு இருக்கும். இருப்பினும் சிலசமயங்களில் ஒரே கருப்பொருள் அல்லது ஒரே எழுத்தாளரின் சிறுகதைகளைக் கொண்ட படைப்பாக இருக்கலாம். சில நேரங்களில் ஒவ்வொறு குறும்படமும் வெவ்வேறு இயக்குநரால் இயக்கப்பட்டவை அல்லது வெவ்வேறு ஆசிரியரால் எழுதப்பட்டவை, அல்லது வெவ்வேறு காலங்களில் அல்லது வெவ்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டவையாகவும் இருக்கலாம். தமிழில் 1939 இல் வெளியான சிரிக்காதே திரைப்படமே தமிழின் முதல் தொகைத் திரைப்படமாக கருதப்படுகிறது.[1]
தமிழில் சில எடுத்துக்காட்டுகள்
[தொகு]- சிரிக்காதே (1939)
- மணி மாலை (1941)
- ஒரு வீடு இரு வாசல் (1990)
- பெஞ்ச் டாக்கிஸ்
- அவியல் (2016)
- 6 அத்தியாயம் (2018)
- சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (2018)
- சில்லுக்கருப்பட்டி (2019)
- புத்தம் புதுக் காலை (2020)
- பாவக் கதைகள் (2020)
- குட்டிஸ்டோரி (2021)
- விக்டிம்