6 அத்தியாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
6 அத்தியாயம்
விளம்பரம்
தயாரிப்புசங்கர் தியாகராஜன்
கலையகம்ஆஸ்கி மீடியா ஹட்
வெளியீடு23 பிப்ரவரி 2018
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

6 அத்தியாயம் என்பது 2018ஆம் ஆண்டு வெளிவரவுள்ள ஒரு திகில் படத்தொகை ஆகும். இதில் அடங்கியுள்ள ஆறு குறும்படங்களும் வெவ்வேறு இயக்குநர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ளன. இப்படத்தை ஆஸ்கி மீடியா ஹட் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சங்கர் தியாகராஜன் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் எதிர்வரும் 23 பிப்ரவரி 2018 அன்று வெளிவர உள்ளது.

தயாரிப்பும் வெளியீடும்[தொகு]

இப்படத்தை ஆஸ்கி மீடியா ஹட் சார்பாக சங்கர் தியாகராஜன் தயாரித்துள்ளார். இந்நிறுவனத்திற்கு இது முதல் படமாகும். இதில் பணிபுரிந்திருக்கும் இயக்குனர்கள் பலர் திரைத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் எனினும், கேபிள் சங்கர் தவிர மற்றோருக்கு இது அவர்கள் இயக்கும் முதல் படமாகும்.  கேபிள் சங்கர் [[தொட்டால் தொடரும்]] எனும் படத்தை இதற்கு முன் இயக்கியுள்ளார். அதில் நடித்த [[தமன் குமார்]] இப்படத்திலும் நடித்துள்ளார்.

முன்னணி எழுத்தாளர் அஜயன் பாலா இதில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். அவர் இதற்கு முன் சென்னையில் ஒரு நாள், வனயுத்தம், மனிதன் ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தின் இயக்குநர்களின் ஒருவரான லோகேஷ் ராஜேந்திரன், சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். மர்ம தேசம் விடாது கருப்பு தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.

இப்படத்தின் ஒலிப்பேழை வெளியீடு அக்டோபர் 30, 2017 அன்று நடைபெற்றது. அதில் முன்னணி இயக்குநர்கள் சேரன், ஏ. வெங்கடேஷ், பார்த்திபன், வெற்றிமாறன், அறிவழகன், மற்றும் தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.[1]

கலைஞர்கள்[தொகு]

பொது[தொகு]

  • தயாரிப்பாளர்: சங்கர் தியாகராஜன்
  • தயாரிப்பு நிர்வாகர்: கேபிள் சங்கர்
  • இசை (பாடல்): சி.எஸ். சாம்
  • நடனம்: நந்தா
  • காட்சி விளைவுகள்: வீ ஃபோகஸ் டிஜிடல் மீடியா
  • ஒளிப்பதிவு (பாடல்): சி.ஜெ..ராஜ்குமார்

அத்தியாயங்களில்[தொகு]

பங்களிப்பு அத்தியாயங்கள்[2]
அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4 அத்தியாயம் 5 அத்தியாயம் 6
நடிப்பு 
தமன் குமார், எஸ். எஸ். ஸ்டான்லி பாப் சுரேஷ், பேபி சாதன்யா, திவ்யா பசங்க கிஷோர், மதுஶ்ரீ, பிரசன்னா, கதிர், ரான்டில்யா குளிர் சஞ்சீவ், செல்லதுரை, காயத்ரி, கேபிள் சங்கர் விஷ்ணு ஃபிரான்சிஸ், சந்திரகாந்தா, சங்கீதா, ஈஸ்வரி, ஈஸ்வர் வேல், கார்த்திக், செல்வராஜ் வினோத் கிஷன், அரவிந்த் ராஜகோபால், சோமு சுந்தர், சாருலதா ரங்கராஜன், அந்தோணி ஹாட்லீ, சுப்ரமணி, அரவிந்த் பாலாஜி, கார்த்திகேயன், ராமு, சுபு தேஜு,
எழுத்து, இயக்கம் கேபிள் சங்கர்
சங்கர் தியாகராஜன்
அஜயன்பாலா ஈ.ஏ.வி.சுரேஷ் லோகேஷ் ராஜேந்திரன் ஶ்ரீதர் வெங்கடேசன்
ஒளிப்பதிவு சி.ஜெ. ராஜ்குமார் பொன் காசிராஜன்
அருண்மொழி சோழன் அருண்மணி பழனி மனோ ராஜா
பிண்ணணி இசை ஸில்பர்ன் ஜோசுவா தாஜ் நூர் சதீஷ்குமார் ஜோஸ் ஃபிராங்கிளின்
தொகுப்பு விஜய் வேலுக்குட்டி பாலா மணி லோகேஷ் விஜய் ஆன்ட்ரூஸ்
கலை எஸ். எஸ். மூர்த்தி க்ராஃபோர்டு தேவா

திரைப்படத்திற்கான வரவேற்பு[தொகு]

இப்படம் பொதுவாக விமர்சகர்களிடம் நல்ல பெயர் பெற்றுள்ளது. அவர்கள் பலரும் இம்முயற்சியின் புதுமையைப் பாராட்டினாலும் இயக்குநர்களின் திறமையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக திகில் படமாக இருந்தாலும், ஒவ்வொரு படமும் தனி கருத்தை கொண்டுள்ளதையும் இவற்றை இறுதியில் இணைத்திருந்த விதமும் தன்னை கவர்ந்த்தாக இயக்குநர் மீரா கதிரவன் கூறினார். மூத்த இயக்குனர் பாரதிராஜா இப்படம் தன்னை மிரள வைத்ததாகவும் இத்தகைய படங்களே தமிழ் திரைப்படங்களை உலக ரீதியில் கொண்டு செல்லும் என்றும் கூறியுள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. https://www.youtube.com/watch?v=dIPvAK0xGto
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2020-09-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-02-06 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=6_அத்தியாயம்&oldid=3540249" இருந்து மீள்விக்கப்பட்டது