உள்ளடக்கத்துக்குச் செல்

சிரிக்காதே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரிக்காதே
சுவரிதழ்
தயாரிப்புஸ்ரீ ரஞ்சனி பிக்சர்ஸ்
நடிப்புஎன். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், கொத்தமங்கலம் சுப்பு, வி. எம். ஏழுமலை, டி. எஸ். துரைராஜ், எம். எஸ். முருகேசன், பி. எஸ். ஞானம்
விநியோகம்ஜெமினி பிக்சர்ஸ்
வெளியீடு1939
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிரிக்காதே 1939 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் தொகைத் திரைப்படமாகும். ஸ்ரீ ரஞ்சனி டாக்கீஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் இத்திரைப்படம் வெளிவந்தது.

என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், கொத்தமங்கலம் சுப்பு, வி. எம். ஏழுமலை, டி. எஸ். துரைராஜ், எம். எஸ். முருகேசன், பி. எஸ். ஞானம் எனப் பலர் இதில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் அடங்காப்பிடாரி, புலிவேட்டை, போலிச்சாமியார், மாலைக்கண்ணன், யம வாதனை, ஆகிய தனித்தனிக் கதைகளின் தொகுப்பாக தயாரிக்கப்பட்டது.[1] எஸ். எஸ். வாசன் இதன் விநியோக உரிமையை பெற்று வெளியிட்டார்.[2] இந்தியாவின் முதல் தொகைத் திரைப்படமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட சிரிக்காதே 1939 திசம்பர் 23 அன்று வெளியாகி வணிக ரீதியாக பெரிய வெற்றியை ஈட்டியது.

கதை[தொகு]

மாலைக்கண்ணன்[தொகு]

மாலைக்கண் நோயால் பாதிக்கபட்ட ஒரு நபர் தன் மாமியார் வீட்டிற்குச் செல்லும் வழியில் பல சாகசங்களைச் சந்திக்கிறான்.[3]

போலிச் சாமியார்[தொகு]

தச்சன் ஒருவன் தன் மனைவியுடன் வசித்துவருகிறான். சாமியார் ஒருவர் தாடியுடன், வெளித்தோற்றத்தில் புனிதராகவும், ஆன்மீகமவாதியாகவும் தோன்றுகிறார். அவர் உண்மையில் பசுதோல் போர்த்திய புலியாவார்.அவர் தச்சரின் மனைவி மீது மோகம் கொண்டவராக உள்ளார். அவள் தன் கணவரிடம் சாமியாரின் தீய நோக்கத்தைப் பற்றி கூறுகிறாள். புத்திசாலி தச்சன் சாமியாரின் மோசடியை அம்பலப்படுத்த திட்டமிட்டுகிறார். அதன் படி தச்சனின் மனைவி தந்திரமாக மயக்கும் புன்னகையுடனும் சுவாமியின் ஆசைக்கு இணங்குவதுபோல் போல் நடிக்கிறாள். இதனால் மகிழ்ச்சியடைந்த சாமியார், தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அவளது வீட்டிற்கு வருகிறார். சாமியார் வரும்போது தச்சன் ஒளிந்து கொள்கிறார். சாமியாருக்கு அழகூட்ட, அந்தப் பெண் அவருக்கு பிரபலமான சவர்காரத்தை வழங்குகிறாள். அது உண்மையில் மயிர்நீக்கி பண்புகளைக் கொண்ட மலிவான பொருளாகும். அதைக் கொண்டு உடலைத் தூய்மை செய்த பிறகு, தன் போலி தாடி உள்ளிட்டவற்றைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். இப்போது தச்சன் வேறு சிலருடன் வந்து இழுத்துச் செல்கிறார். மேலும் போலிச் சாமியாருக்கு அடி, உதை விழுகின்றன. இது தச்சனுக்கும் அவரது மனைவிக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது.[4]

தாயாரிப்பு[தொகு]

சிராக்காதே படத்தை ஸ்ரீ ரஞ்சனி பிக்சர்ஸ் சார்பில் எஸ். எஸ். வாசன் தயாரித்தார்.[3] இப்படம் அடங்காப்பிடாரி, மாலை கண்ணன், யம வாதனை, போலிச் சாமியார், புலிவேட்டை ஆகிய ஐந்து நகைச்சுவைக் குறும்படங்களை உள்ளடக்கிய படக்கோவைத் திரைப்படமாகும்.[5] அடங்காப்பிடாரியை ஆர். பிரகாஷ் இயக்க டி. மணி ஐயர், டி. கிருஷ்ணவேணி, கே. என். ராஜம், கே. என். கமலம், கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் நடித்தனர். மாலைக் கண்ணனை ஜித்தன் பானர்ஜி இயக்கி ஒளிப்பதவு செய்தார். அதில் எம். எஸ். முருகேசன், இ. கிருஷ்ணமூர்த்தி, பி. சாமா, பி. எஸ். ஞானம், நாகலட்சுமி, ராதா பாய், மீனாட்சி ஆகியோர் நடித்தனர். யம வாதனை படத்தையும் பானர்ஜியே இயக்கினார். போலிச் சாமியாரில் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், டி. எஸ். துரைராஜ், எம். ஆர். சுவாமிநாதன் ஆகியோர் நடித்திருந்தனர். ராண்டார் கைன் மெமரிஸ் ஆஃப் மெட்ராஸ் மற்றும் பிலிம் நியூஸ் ஆனந்தனின் சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பாட வரலாறு ஆகிய புத்தகங்களில், போலிச் சாமியார் மற்றும் புலிவேட்டை ஆகிய குறும்படங்களை யார் இயக்கியது என்று குறிப்பிடப்படவில்லை.[6][7] மொத்தப் படமும் மதறாசில் (இப்போது சென்னை) உள்ள நியூட்டன் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது.[3] தி இந்துவின் பி. விஜய்குமார்,[8] டெக்கான் ஹெரால்டின் ராகுல் ஆர்.,[9] ஓப்பனின் தீபா வெங்கட்ராமன் போன்ற பலர் சிரிக்காதே படத்தை இந்தியாவின் முதல் தொகைத் திரைப்படமாக கருதுகின்றனர்.[10]

வெளியீடும் வரவேற்பும்[தொகு]

சிரிக்காதே 1939 திசம்பர் 23 அன்று வெளியானது.[6] இப்படம் ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட் மூலம் வாசனால் விநியோகிக்கப்பட்டது.[7][11] கேலிச்சித்திரக் கலைஞர் மாலி வரைந்த படங்களின் அடிப்படையிலான விளம்பரங்கள் மூலம் வாசன் படத்தை விளம்பரப்படுத்தினார்.[12] இது ஒரு பெரிய வணிக வெற்றியாக அமைந்தது, ஐந்து குறும்படங்களில் போலிச் சாமியார் மிகவும் பிரபலமானது.[7] கேலிச்சித்திரத்தைக் கொண்டு புதுமையாக விளம்பரம் செய்தது படத்தின் வெற்றிக்குக் கருவியாக இருந்ததாக ராண்டர் கை கருதினார்.[13] சிரிக்கதேயின் வெற்றியானது தமிழ்த் திரையுலகில் அதிகமான தொகைத் திரைப்படங்கள் உருவாக வழிவகுத்தது. அந்தப் போக்கு அத்தகைய தமிழ்ப் படங்கள் 1940 களின் நடுப்பகுதியில் வரவேற்பை இழக்கும் வரை நீடித்தது.[11][14]

மேற்கோள்கள்[தொகு]

 1. பலே.. பலே.. 'பஃபே' விருதுகள்!, கட்டுரை, எஸ். எஸ். லெனின், இந்து தமிழ் (நாளிதழ்), 2020 திசம்பர் 4
 2. "Tamil cinelma pioneers- S.S. vasan's Chandralekha to chandrahasam - சந்திரலேகா முதல் சந்திரஹாசம் வரை...!- வாசன் விதைத்த பிரம்மாண்டம் ( தொடர்-12)". www.vikatan.com. Archived from the original on 2016-04-06. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2016.
 3. 3.0 3.1 3.2 Guy 2016, ப. 121.
 4. Guy 2016, ப. 122.
 5. "சந்திரலேகா முதல் சந்திரஹாசம் வரை...!- வாசன் விதைத்த பிரம்மாண்டம் ( தொடர்-12)" (in ta). ஆனந்த விகடன். 12 October 2015 இம் மூலத்தில் இருந்து 13 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180913024321/https://www.vikatan.com/news/coverstory/53596.html. 
 6. 6.0 6.1 "1939 – சிரிக்காதே – ஸ்ரீ ரஞ்சனி டாக்கீஸ் – 5 கதைகள் கொண்ட படம். வெளியான தேதி – 23-12-1939" [1939 – Sirikkadhey – Sri Ranjani Talkies – One film consisting of 5 stories. Release date – 23-12-1939.]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 10 September 2018. பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 7. 7.0 7.1 7.2 Guy 2016, ப. 121–122.
 8. Vijaykumar, B. (19 June 2011). "Chitramela 1967". தி இந்து இம் மூலத்தில் இருந்து 11 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180911103359/https://www.thehindu.com/features/metroplus/chitramela-1967/article2115673.ece. 
 9. Rahul, R. (15 June 2013). "Anthology of romance". டெக்கன் ஹெரால்டு இம் மூலத்தில் இருந்து 17 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150917013340/http://www.deccanherald.com/content/338926/anthology-romance.html. 
 10. Venkatraman, Deepa (2 November 2013). "Kamath's Eleven". Open (India) இம் மூலத்தில் இருந்து 30 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131030205700/http://www.openthemagazine.com/article/cinema/kamath-s-eleven. 
 11. 11.0 11.1 Randor Guy (31 August 2013). "Mani Malai (1941)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 10 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130910173846/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/mani-malai-1941/article5079214.ece. 
 12. Randor Guy (22 August 2015). "Sanyasi-Samsari (1942)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 18 April 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170418011539/http://www.thehindu.com/features/cinema/sanyasisamsari-1942/article7569442.ece. 
 13. Guy 1997, ப. 242.
 14. Guy 2016, p. 122; Guy 1997, p. 131.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரிக்காதே&oldid=3850351" இலிருந்து மீள்விக்கப்பட்டது