ஐஸ்வர்யா ராஜேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐஸ்வர்யா ராஜேஷ்
Aishwarya Rajesh at Rummy Audio Launch.jpg
ரம்மி விருதுகள் நிகழ்ச்சியில்
பிறப்புசனவரி 10, 1990 (1990-01-10) (அகவை 30)
திருப்பூர், தமிழ்நாடு
பணிநடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2010–இன்று
பெற்றோர்ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு... நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் (2010) தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். அட்டகத்தி (2012) திரைப்படத்தில் அமுதா என்ர பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். 2017 இல் டாடி என்ற இந்தித் திரைப்படத்தில் அர்ஜூன் ராம்பால் உடன் இணைந்து நடித்தார். வெற்றிமாறனின் வட சென்னை திரைப்படத்தில் பத்மா என்ற பாத்திரமாகவும், கனா திரைப்படத்தில் பெண் துடுப்பாட்டாளராகவும் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். 2014 இல் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது இவருக்குக் கிடைத்தது.[1]

வாழ்க்கை[தொகு]

ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் தெலுங்கு திரைப்படங்களில் 50 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவருடைய தாத்தா அமர்நாத்தும் ஒரு நடிகர் ஆவார்.

இவர் மகளிர் எத்திராஜ் கல்லூரியில் படித்தார், இவர் ஒரு இளங்கலை பட்டதாரி ஆகும். இவர் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றியாளராக வந்தார். 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அட்டகத்தி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அதைத் தொடர்ந்து ஆச்சரியங்கள் மற்றும் புத்தகம் (திரைப்படம்) போன்ற திரைப்படங்களில் நடித்தார். அப்படத்தையடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கின்றார். மற்றும் வாடி வாசல், திருடன் போலீஸ் போன்ற திரைப்படங்களில் நடிக்கின்றார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2010 நீதானா அவன் நந்தினி தமிழ்
2011 அவர்களும் இவர்களும் சுவெத்தா
உயர்திரு 420 சாரு
சட்டப்படி குற்றம் சுமதி
2012 விளையாட வா அனு
அட்டகத்தி அமுதா
ஆச்சரியங்கள் அனு
2013 புத்தகம் தாரா
2014 ரம்மி சொர்ணம்
பண்ணையாரும் பத்மினியும் மலர்விழி
கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஐஸ்வர்யா சிறப்புத் தோற்றம்
திருடன் போலீஸ் பூர்ணிமா
2015 காக்கா முட்டை தாய் சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது
பரிந்துரை: சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
2016 ஆறாது சினம் மியா
ஹலோ நான் பேய் பேசுறேன் கவிதா
மனிதன் ஜெனிபர்
தர்மதுரை அன்புசெல்வி சீமா சிறந்த நடிகை (துணை) விருது
பரிந்துரை: சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
குற்றமே தண்டனை சுவத்தா
காதலை கலை
பறந்து செல்ல வா மாதவி
மோ பிரியா
2017 ஜோமொண்டே சுவிசேசங்கள் வைதேகி மலையாளம்
முப்பரிமாணம் ஐஸ்வர்யா தமிழ் சிறப்புத் தோற்றம்
கட்டப்பாவ காணோம் மீனா
சகவு ஜானகி மலையாளம்
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் பூஜா தமிழ்
டாடி ஆசா இந்தி
2018 இலட்சுமி நந்தினி தமிழ்
சாமி 2 பிவனா
செக்கச்சிவந்த வானம் ரேணு
வட சென்னை (திரைப்படம்) பத்மா
கனா கௌசல்யா பிலிம்பேர் விருது
2019 விளம்பரம் ஐஸ்வர்யா
கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி கௌசல்யா தெலுங்கு
மெய் உத்ரா தமிழ்
நம்ம வீட்டுப் பிள்ளை துளசி
மிஸ்மாட்ச் மகாலட்சுமி தெலுங்கு
2021 பொன்னியின் செல்வன் தமிழ் தயாரிப்பில்

சின்னத்திரை[தொகு]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஸ்வர்யா_ராஜேஷ்&oldid=2896824" இருந்து மீள்விக்கப்பட்டது