பண்ணையாரும் பத்மினியும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்ணையாரும் பத்மினியும்
தயாரிப்பு சுவரொட்டி
இயக்கம்அருண் குமார்
தயாரிப்புஎம்.ஆர் கணேஷ்
திரைக்கதைஅருண் குமார்
இசைஜஸ்டின் பிரபாகரன்
நடிப்புவிஜய் சேதுபதி
ஜெயப்பிரகாஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஒளிப்பதிவுகோகுல் பினாய்
படத்தொகுப்புஏ.ஸ்ரீகர் பிரசாத்
கலையகம்மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ்
வெளியீடு07-02-2014
நாடுஇந்தியா

பண்ணையாரும் பத்மினியும், என்பது 2014 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இதனை அருண் குமார் இயக்கினார். இது ஏற்கனவே குறும்படமாக வெளிவந்தது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயனாக நடித்தார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.

கதைச் சுருக்கம்[தொகு]

பண்ணையார் ஜெயப்ரகாசின் நண்பர் ஊருக்குப்போகும்போது அவரிடம் தனது பத்மினி மகிழுந்தை கொடுத்துவிட்டுச் செல்கிறார். பண்ணையாருக்கு மகிழுந்து (கார்) ஓட்ட தெரியாததால் உழவு இயந்திரத்தை ஓட்டும் விஜயசேதுபதி மகிழுந்துக்கு ஓட்டுநராக வருகிறார். பத்மினி மேல் பண்ணையாருக்கும், அவர் மனைவிக்கும், ஓட்டுநர் விஜய் சேதுபதிக்கும் பாசம் கூடிக்கொண்டே போகிறது. திருமணநாளில் மனைவியை மகிழுந்தில் வைத்து அழைத்துச் செல்லவேண்டும் என்ற பண்ணையாரின் ஆசை. ஆனால் அந்நாளில் பண்ணையார் மகிழுந்தை ஓட்டவேண்டும் என்பது மனைவியின் விருப்பம். பண்ணையார் மகிழுந்து ஓட்டக்கற்றுக் கொண்டால் தான் பத்மினி என்ற மகிழுந்தை பிரிய நேரிடும் என விஜய் சேதுபதி அஞ்சுகிறார். பண்ணையார் மகிழுந்து ஓட்டக் கற்றுக்கொண்டாரா, தன் திருமணநாளில் மனைவியை மகிழுந்தில் வைத்து பண்ணையார் அழைத்துச் சென்றாரா, பத்மினியை விட்டு விஜய் சேதுபதி பிரிய நேர்ந்ததா, பத்மினி இவர்களோடு இருந்ததா என்பதை இயக்குநர் சொல்லியுள்ளார்.

நடிகர்கள்[தொகு]

குணச்சித்திர தோற்றம்[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

இந்தத் திரைப்படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன் அமைத்திருந்தார். கவிஞர் வாலி இவ் திரைப்படத்துக்கு பாடல் எழுதினார். இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசுறேன் பேசுறேன் என்ற பாடல் ஒன்றை பாடி உள்ளார்.

ஒலித்தட பட்டியல்
# பாடல்வரிகள்பாடகர் (கள்) நீளம்
1. "எங்க ஊரு வண்டி"  ஜஸ்டின் பிரபாகரன்அகிலேஷ், ஆலன், கவுதம், ஹரிப்ரியா, அஞ்சனா, யாழினி, நெய்வேலி ஸ்ரீராம் 05:14
2. "உனக்காக பிறந்தேனே"  வாலிபலராமர், சந்தியா, எஸ் .பி .சரண், அனு ஆனந்த் 04:52
3. "காதல் வந்தாச்சோ"  ஜஸ்டின் பிரபாகரன்கார்த்திக், ப்ரஷந்தினி 05:23
4. "பேசுறேன் பேசுறேன்"  வாலிஜஸ்டின் பிரபாகரன், வைரம், பண்டி அம்மா, தாயம்மா 04:31
5. "எனக்காக பொறந்தாயே"  வாலிஎஸ் .பி .சரண், அனு ஆனந்த் 03:41

குறிப்புகள்[தொகு]