கனா (திரைப்படம்)
கனா | |
---|---|
இயக்கம் | அருண்ராஜா காமராஜ் |
தயாரிப்பு | சிவகார்த்திகேயன் |
கதை | அருண்ராஜா காமராஜ் |
இசை | திபு நினான் தாமஸ் |
நடிப்பு | ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயன் சத்யராஜ் தர்சன் |
ஒளிப்பதிவு | தினேஷ் கிருஷ்ணன் |
படத்தொகுப்பு | ரூபென் |
கலையகம் | சிவகார்த்திகேயன் புரோடக்சன்ஸ் |
வெளியீடு | 21 டிசம்பர் 2018 |
ஓட்டம் | 191 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
கனா (ஆங்கிலம்:Dream) என்பது கிரிக்கெட் மற்றும் விவசாயம்[1] பற்றிய ஒரு தமிழ் திரைப்படம். இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து[2] அருண்ராஜா காமராஜ் எழுதி இயக்கியுள்ளார். இது இவரின் முதல் படம். கிரிக்கெட்டே தெரியாத ஐஸ்வர்யா ராஜேஷ், தத்ரூபமாக நடித்திருப்பார். திபு நினான் தாமஸ் என்பவர் படத்துக்கு இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு மற்றும் ரூபென் படத்தொகுப்பு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் 2018 திசம்பர் 21 அன்று வெளியானது.[3][4]
பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளிவந்த இந்தப் படம் விளையாட்டு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக, ஸ்போர்ட்ஸ் படங்களுக்கு உரிய டெம்ப்ளேட்களை உடைத்து கவனம் ஈர்த்தது.
நடிப்பு
[தொகு]- ஐஸ்வர்யா ராஜேஷ் - கௌசல்யா முருகேசன்
- சத்யராஜ் - முருகேசன்
- சிவகார்த்திகேயன் - நெல்சன் திலீப்குமார்
- தர்சன் - முரளி கிருஷ்ணன்
- பிளேடு ஷங்கர்
- ராமதாஸ்
- இளவரசு
- ரமா - கௌசல்யா அம்மா
- சவரி முத்து
- அந்தோணி பாக்கியராஜ்
- கார்த்திக்
- பாத்திமா சப்மரீன்
விமர்சனம்
[தொகு]இந்த திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து மிக சிறந்த பாராட்டை பெற்றுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் எம்.சுகந்த் இந்த படத்தினைப் பிரசித்திபெற்ற விளையாட்டுப் படமாக மேற்கோள் காட்டினார். மேலும் இது விவசாயிகளின் இன்றய நிலைமை அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதால் கனா படம் மக்களுக்கான ஒரு செய்தித் திரைப்படம் போல் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kabali lyricist Arunraja Kamaraj to direct movie on women’s cricket, real players to give insight". https://indianexpress.com/article/entertainment/tamil/kabali-lyricist-arunraja-kamaraj-to-direct-movie-on-womens-cricket-real-players-to-give-insight4828250.
- ↑ "Sivakarthikeyan turns producer for friend Arunraja Kamaraj's debut". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-14.
- ↑ "Release Date Of Sivakarthikeyan's Next Is Here!". https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/kanaa-release-date-announced-officially.html.
- ↑ "Sivakarthikeyan turns producer for Arunraja Kamaraj’s film". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/sivakarthikeyan-turns-producer-for-arunraja-kamarajs-film/articleshow/62994591.cms.