தேவயானி (நடிகை)
தேவயானி | |
---|---|
2014 இல் மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் விளக்கேற்றும் பொழுது. இடதுபுறத்தில் பாரதிராஜா. | |
பிறப்பு | சுஷ்மா ஜெயதேவ் சூன் 22, 1974 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
மற்ற பெயர்கள் | தேவயானி ராஜகுமாரன் |
பணி | நடிகை, ஆசிரியை |
செயற்பாட்டுக் காலம் | 1995–தற்போது |
பெற்றோர் | ஜெயதேவ் லட்சுமி |
வாழ்க்கைத் துணை | ராஜகுமாரன் |
பிள்ளைகள் | இனியா பிரியங்கா (மகள்கள்) |
உறவினர்கள் | நகுல் மயூர் (சகோதரர்கள்) |
தேவயானி (ஆங்கில மொழி: Devayani, பிறப்பு: 22 சூன் 1974) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடத் தந்தையான ஜெயதேவுக்கும், மலையாள தாயான இலட்சுமிக்கும் மகளாக பிறந்தார். இளநிலை கணக்குப்பதிவியல் பட்டம் பெற்றவர். இவருடைய இயற்பெயர் சுஷ்மா. திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் தொலைக்காட்சியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நாண்ஸ்டாப் கூரியரின் "இனிமே இதுதான் இது மட்டும்தான்" எனும் விளம்பரத்திலும் நடித்திருக்கிறார்.
திருமணம் வாழ்க்கை
[தொகு]தேவயானியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து வந்தனர். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணம் ஏப்ரல் 9, 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் காலை 9.30 மணிக்கு நடந்தது.[1] இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.[2]
திரைப்பட வரலாறு
[தொகு]திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1993 | சாத் பென்சொமி | வங்காளம் | சுஷ்மா அறிமுகம் | |
1994 | கின்னாரி புழையோரம் | மலையாளம் | ||
1995 | தொட்டா சிணுங்கி | ரம்யா | தமிழ் | |
தில் கா டாக்டர் | இந்தி | |||
ஆசான் ராஜாவு அப்பன் ஜிதாவு | மலையாளம் | |||
திரி மென் ஆர்மி | சுபா | மலையாளம் | ||
காக்கக்கும் பூசாக்கும் கல்யாணம் | லதா .எஸ்.பிள்ளை | மலையாளம் | ||
1996 | கல்லூரி வாசல் | நிவிதா | தமிழ் | |
சோட்டா சா கர் | இந்தி | |||
காதல் கோட்டை | கமலி | தமிழ் | வெற்றியாளர், சிறந்த நடிகைக்கான தமிழ் நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது. | |
பூமணி | தமிழ் | |||
சிவசக்தி | ஒரு பாடலுக்கு மட்டும் | தமிழ் | ||
மகாத்மா | சரஸ்வதி | மலையாளம் | ||
கின்னம் கட்ட கள்ளன் | மலையாளம் | |||
மிஸ்டர். கிலியன் | மலையாளம் | |||
காதில் ஒரு கின்னரம் | மலையாளம் | |||
1997 | விவசாயி மகன் | தமிழ் | ||
காதலி | தமிழ் | |||
பெரிய இடத்து மாப்பிள்ளை | லட்சுமி | தமிழ் | ||
சூரிய வம்சம் | நந்தினி | தமிழ் | வெற்றியாளர், சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. | |
1998 | சுஷ்வாகதம் | சந்யா | தெலுங்கு | |
உதவிக்கு வரலாமா | மைதிலி | தமிழ் | ||
கிழக்கும் மேற்கும் | தமிழ் | |||
மறுமலர்ச்சி | தமிழ் | |||
சொர்ணமுகி | சொர்ணமுகி | தமிழ் | ||
நினைத்தேன் வந்தாய் | சாவிதிரி | தமிழ் | ||
மூவேந்தர் | வைதேகி | தமிழ் | ||
பூந்தோட்டம் | தமிழ் | |||
செந்தூரம் | தமிழ் | |||
உனக்கும் எனக்கும் கல்யாணம் | தமிழ் | |||
என் உயிர் நீ தான் | தமிழ் | |||
புதுமை பித்தன் | ஆர்தி | தமிழ் | ||
சிரிமதி வொல்லோஸ்தா | தெலுங்கு | |||
1999 | தொடரும் | சீதா ஆனந்து | தமிழ் | |
கும்மிப்பாட்டு | தமிழ் | |||
நீ வருவாய் என | நந்தினி | தமிழ் | ||
ஒருவன் | நந்தினி | தமிழ் | ||
பிரேமோத்சவா | கன்னடம் | |||
நிலவே முகம் காட்டு | கஸ்தூரி | தமிழ் | ||
பாட்டாளி | சகுந்ததலா | தமிழ் | ||
மாணிக்யம் | தெலுங்கு |
2000 முதல் 2013 வரை
[தொகு]ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் | ||
---|---|---|---|---|---|---|
2000 | வல்லரசு | அஞ்சலி வல்லரசு | தமிழ் | |||
அப்பு | சீதா | தமிழ் | ||||
என்னம்மா கண்ணு | காயத்திரி | தமிழ் | ||||
பாரதி | செல்லமால் பாரதி | தமிழ் | வெற்றியாளர், சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது | |||
தெனாலி | சைலஜா கைலாஸ் | தமிழ் | ||||
2001 | கண்ணுக்கு கண்ணாக | தேவி | தமிழ் | |||
என் புருசன் குழந்தை மாதிரி | தமிழ் | |||||
விண்ணுக்கும் மண்ணுக்கும் | தேவயானி | தமிழ் | ||||
ஆனந்தம் | பாரதி | தமிழ் | பரிந்துரை—சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ் | |||
பிரண்ட்ஸ் | பத்மினி அரவிந்து | தமிழ் | ||||
சுந்தரபுருஷன் | மலையாளம் | |||||
நினைக்காத நாளில்லை | கவிதா | தமிழ் | ||||
2002 | விவரமான ஆளு | அப்பு | தமிழ் | |||
அழகி | வளர்மதி சண்முகம் | தமிழ் | வெற்றியாளர், சிறந்த துணை நடிகைக்கான ஐடீஎஃஏ விருது | |||
கோட்டை மாரியம்மன் | தமிழ் | |||||
பஞ்சதந்திரம் | நிர்மலா | தமிழ் | ||||
தென்காசிப் பட்டணம் | சங்கீதா | தமிழ் | ||||
குருவம்மா | குருவம்மா | தமிழ் | ||||
சமஸ்தானம் | திவ்யா | தமிழ் | ||||
படை வீட்டம்மன் | சாமுண்டி | தமிழ் | ||||
சென்னகேசவா ரெட்டி | தெலுங்கு | |||||
2003 | காதலுடன் | கவிதா | தமிழ் | |||
பீஷ்மர் | கௌரி பீஷ்மர் | தமிழ் | ||||
பாலேட்டன் | ராதிகா | மலையாளம் | ||||
2004 | நானி | நானியின் அம்மா | தெலுங்கு | |||
நியூ | பப்புவின் அம்மா | தமிழ் | ||||
கிரி | தமிழ் | |||||
செம ரகளை | தமிழ் | |||||
செந்தாழம் பூவே | தமிழ் | |||||
சௌம்யம் | மலையாளம் | |||||
2005 | நரன் | ஜானகி | மலையாளம் | |||
2009 | ஐந்தாம் படை | கல்பனா | தமிழ் | |||
2010 | ஒரு நாள் வரும் | ராஜலெட்சுமி | மலையாளம் | |||
2011 | சர்க்கார் காலனி | மலையாளம் | ||||
2013 | திருமதி தமிழ் | தமிழ் | ராஜலெட்சுமி | மலையாளம் |
- துஷொர் கோ துளி
தொலைக்காட்சி
[தொகு]ஆண்டு | நாடகம் | பாத்திரம் | மொழி | தொலைக்காட்சி | இணைப்பு | |||
---|---|---|---|---|---|---|---|---|
2003–2009 | கோலங்கள் | அபினயா | தமிழ் | சன் தொலைக்காட்சி | [1] | |||
2007-08 | மஞ்சள் மகிமை | சௌந்தர்யா | தமிழ் | கலைஞர் தொலைக்காட்சி | [2] | |||
2010-11 | கொடி முல்லை | மலர்க் கொடி/அன்னக்கொடி | தமிழ் | ராஜ் தொலைக்காட்சி | [3] | |||
2011-12 | முத்தாரம் | ரஞ்சனி தேவி / சிவரஞ்சனி | தமிழ் | சன் தொலைக்காட்சி | [4] | |||
2021 | புதுப்புது
அர்த்தங்கள் |
லட்சுமி | தமிழ் | ஜு தமிழ் தொலைக்காட்சி |
விருதுகள்
[தொகு]- 2000 - ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது[3]
- 2004 - சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருதுகள். - கோலங்கள்[4]
- 2008 - முதல் இடம் - சிறந்த நடிகைக்கான விவெல்லின் சின்னத்திரை விருதுகள் - (கோலங்கள்)[5]
- 2010 - நியமிக்கப்படுதல் - சிறந்த நடிகைக்கான சன் குடும்பம் விருது - (கோலங்கள்)
- 2010 - ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது[6]
- 2011 - பிக் ஃஎப்எம்மின் தமிழ் பொழுதுபோக்கு மிகுந்த பொழுதுபோக்குத் தொலைக்காட்சி நடிகைக்கான விருதுகள் - (கொடி முல்லை)[7]
ஆதாரம்
[தொகு]- ↑ "தேவயானி, ராஜகுமாரன் அவர்களின் திருமணம்". ஒன் இந்தியா. 9 ஏப்ரல் 2001. பார்க்கப்பட்ட நாள் சூன் 24, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "தேவயானியின் குழந்தைகள்". chennaionline.com. 24 சனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் சூன் 24, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "கலைமாமணி விருதுகள் அறிவிப்பு". Archived from the original on 2012-10-15. பார்க்கப்பட்ட நாள் 2013-06-25.
- ↑ "தேவயானி, வேணு அரவிந்த் விருதுகள் கிடைத்தது". Archived from the original on 2006-12-08. பார்க்கப்பட்ட நாள் 2013-06-25.
- ↑ "விவெல் சின்னத்திரை விருதுகள் 2008 வெற்றியாளர்களின் பட்டியல்". Archived from the original on 2014-08-26. பார்க்கப்பட்ட நாள் 2013-06-25.
- ↑ "கலைமாமணி விருது வெற்றியாளர்கள் காட்சியகம்". Archived from the original on 2013-04-07. பார்க்கப்பட்ட நாள் 2013-06-25.
- ↑ பிக் எப்எம் தமிழ் பொழுதுபோக்கு விருதுகள் - 2011