அன்பே வா (தொலைக்காட்சித் தொடர்)
![]() | இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
நீக்க வேண்டியதற்கான காரணம்: குறிப்பிடத்தக்கமை. மேலும் கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
அன்பே வா | |
---|---|
வகை | காதல் நாடகத் தொடர் |
எழுதியவர் |
|
திரைக்கக்தை | ராஜாஷ்ரி என் ராய் |
இயக்குனர் | கார்த்தி சிவகுமார் |
நடிப்பு | |
நாடு | இந்தியா |
மொழிகள் | தமிழ் |
சீசன்கள் | 1 |
தயாரிப்பு | |
ஒளிப்பதிவாளர் | |
தொகுப்பாளர்கள் | |
கேமரா அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | சரிகம |
ஒளிபரப்பு | |
சேனல் | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 2 நவம்பர் 2020 ஒளிபரப்பில் | –
Chronology | |
முன்னர் | நாயகி (21:00) |
அன்பே வா என்பது சன் தொலைக்காட்சியில் 2 நவம்பர் 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி காதல் நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரை சரிகம என்ற நிறுவனம் தயாரிக்க, விராட் மற்றும் டெல்னா டேவிஸ்[2] ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.[3]
கதைசுருக்கம்[தொகு]
அன்னலட்சுமியின் மூன்று மகள்களான பூமிகா, கார்த்திகா, தீபிகா. அப்பா இல்லாமல் வளரும் பிள்ளைகள். பொறுப்போடு குடும்பத்தை சுமக்கிறார் பூமிகா. கதாநாயகனான வருண் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன் மற்றும் கலகலப்பானவன். தந்தையின் வட் புறுத்தலின் காரணமாக வேலைக்கு வரும் வருண், தொழில் காரணமாக பூமிகா ஊருக்கு வருகின்றான். பூமிகாவிற்கும், வருணுக்கும் இடையே எங்கே அறிமுகமாகி எப்படி காதலாகிறது என்பது தான் கதை.
நடிகர்கள்[தொகு]
முதன்மை கதாபாத்திரம்[தொகு]
- விராட் - வருண்
- உற்சாகமும் வேகமும் நிறைந்த பணக்கார வீட்டுப் பையன்.
- டெல்னா டேவிஸ்[4] - பூமிகா
- அன்னலட்சுமியின் மூத்த மகள், பூமிகா குடும்ப பாரத்தை சுமக்கும் கிராமத்து பெண்.
வருண் குடும்பத்தினர்[தொகு]
- கன்யா பாரதி - (வருணின் அம்மா)
- ஆனந்த் - (வருணின் அப்பா)
- கௌசல்யா செந்தாமரை - (வருணின் பாட்டி)
பூமிகா குடும்பத்தினர்[தொகு]
- வினயா பிரசாத் - அன்னலட்சுமி (பூமிகாவின் அம்மா)
- பிர்லா பாஸ் - முருகன் (பூமிகாவின் அப்பா)
- அகிரா - கார்த்திகா (பூமிகாவின் சகோதரி)
- -- - தீபிகா (பூமிகாவின் சகோதரி)
- ரேஷ்மா பசுபுலேட்டி - வந்தானா முருகன் (முருகனின் இரண்டாவது மனைவி)
நடிகர்களின் தேர்வு[தொகு]
இந்த தொடரில் கதாநாயகியாக குரங்கு பொம்மை போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை டெல்னா டேவிஸ் என்பவர் 'பூமிகா' என்ற கதாபாத்திரம் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பேரழகி தொடரில் நடித்த விராட் என்பவர் 'வருண்' என்ற கதாபாத்திரத்திலும், இவரின் தாய் கதாபாத்திரத்தில் 'கன்யா பாரதி' என்பவரும் தந்தை கதாபாத்திரத்தில் நடிகர் 'ஆனந்த்' என்பவரும் நடிக்கிறார்கள்.
பிரபல நடிகை வினயா பிரசாத் என்பவர் பூமிகாவின் தாய் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் தமிழில் ரோஜா தொடருக்கு பிறகு நடிக்கும் இரண்டாவது தொடர் ஆகும். இவர்களுடன் கௌசல்யா செந்தாமரை, பிர்லா பாஸ், ரேஷ்மா பசுபுலேட்டி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சர்வதேச ஒளிபரப்பு[தொகு]
- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் மற்றும் 11 ஜனவரி 2021 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சிலும் பார்க்க முடியும்.[5]
- இந்த தொடரின் அத்தியாயங்கள் சன் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணைய அலைவரிசை மற்றும் சன் நெக்ட்ஸ், எம்எக்ஸ் பிளேயர் போன்ற இணையம் மூலமாகவும் பார்க்க முடியும்.
ஒளிபரப்பு நேரம் மாற்றம்[தொகு]
இந்த தொடர் 2 நவம்பர் 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 13 பிப்ரவரி 2021 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஒளிபரப்பான திகதி | நாட்கள் | நேரம் | அத்தியாயங்கள் |
---|---|---|---|
2 நவம்பர் 2020 - 13 பிப்ரவரி 2021 | 21:00 | 1-86 | |
15 பிப்ரவரி 2021 - ஒளிபரப்பில் | 21:30 | 87 - |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "நாயகியை ஓரங்கட்டும் புத்தம் புது தொடர் 'அன்பே வா'".
- ↑ "அன்பே வா தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகும் குரங்கு பொம்மை நடிகை".
- ↑ "Anbe Vaa Serial Cast 2020: Viraat, Vinaya Prasad And Others In Pivotal Roles".
- ↑ "'Kurangu Bommi' actress Delna Davis makes television debut".
- ↑ "Shakthi TV Guide".
வெளி இணைப்புகள்[தொகு]
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அன்பே வா
- அன்பே வா சன் நெக்ட்ஸ்
- அன்பே வா
- அன்பே வா அதிகாரப்பூர்வ வலைத்தளம்
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | அன்பே வா | அடுத்த நிகழ்ச்சி |
நாயகி | சுந்தரி |
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | அன்பே வா | அடுத்த நிகழ்ச்சி |
சித்தி 2 | - |
- விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்
- சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்
- 2020ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2020 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்