சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)
சுந்தரி | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
இயக்கம் | அழகர் |
நடிப்பு |
|
முகப்பிசை | ஆத்தங்கரை காற்றே பாடியவர் சுவேதா மோகன் |
பின்னணி இசை | சாம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | ஒளிப்பதிவாளர் பாலசிப்ரமணியம் |
ஒளிப்பதிவு |
|
தொகுப்பு | |
படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | சன் என்டர்டெயின்மெண்ட் மிரகள் மீடியா |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 22 சனவரி 2021 ஒளிபரப்பில் | –
Chronology | |
முன்னர் | அன்பே வா (21:00) ரோஜா (19:00) |
சுந்தரி என்பது சன் தொலைக்காட்சியில் 22 சனவரி 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி குடும்ப நாடகத் தொடர் ஆகும்.[1] இது கன்னட மொழித் தொடரான 'சுந்தரி' என்ற தொடரின் கதைக்கருவை மையமாக வைத்து மறு ஆக்கம் செய்யப்பட்ட தொடர் ஆகும்.[2]
இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் மிரகள் மீடியா போன்ற நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க, கேப்ரியெல்லா செல்லஸ்,[3] ஜிஷ்ணு மேனன்[4] மற்றும் ஸ்ரீகோபிகா நீலநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த சீரியல் தற்பொழுது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கதைசுருக்கம்
[தொகு]சுந்தரி என்ற கறுப்பு நிறம் கொண்ட கிராமத்து பெண், தனது தோல் நிறம், அவரது பாரம்பரிய தோற்றத்திற்கு எதிராக வரும் கேலி கிண்டல் மற்றும் அவமானங்களுக்கு எதிராக எப்படி போராடுகிறாள் என்பது கதை.
நடிகர்கள்
[தொகு]முதன்மை கதாபாத்திரம்
[தொகு]- கேப்ரியெல்லா செல்லஸ்[5] - சுந்தரி
- ஜிஷ்ணு மேனன் - கார்த்திக்
- ஸ்ரீகோபிகா நீலநாத் - அனு
துணைக் கதாபாத்திரம்
[தொகு]- சந்தியா - ராதா (காவல் அதிகாரி)
- நிஹாரி → பிரமி வெங்கட் - மல்லிகா (அனுவின் தாய்)
- அரவிஷ் - கிருஷ்ணா (கார்திக்கின் நண்பன்)
- அருண்குமார் பத்மநாபன் - பழனி (சுந்தரியின் எதிரி)
- மனோகர் கிருஷ்னன் (1-57 / 73-) → சதீஷ் (58-72) - முருகன்
- மின்னல் தீபா - லட்சுமி (முருகனின் மனைவி)
- தீப்தி ராஜேந்திரா - மாலினி
- இந்துமதி மணிகண்டன் - வள்ளியம்மா (சுந்தரியின் தாய்)
- வரலக்ஷ்மி - காந்திமதி (சுந்தரியின் பாட்டி)
- எல். ராஜா - சங்கர்
- லட்சுமி வாசுதேவன் - செல்வி
- தாரணி சுரேஷ்குமார் - பெரியநாயகி
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
[தொகு]இந்த தொடர் முதல் முதலில் 22 சனவரி 2021 அன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப் ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் நிறுத்தப்பட்டு மே 22 முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சர்வதேச ஒளிபரப்பு
[தொகு]- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் சன் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணையம் அலைவரிசை மற்றும் சன் நெக்ட்ஸ், எம்எக்ஸ் பிளேயர் போன்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New daily soap Sundari premieres from February 22". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்).
- ↑ "Kannada Show Sundari To have its Tamil remake very soon". www.auditionform.in (in ஆங்கிலம்).[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Gabriella Sellus' Popular Pictures And Videos From Sun TV's 'Sundari' Serial". www.republicworld.com (in ஆங்கிலம்).
- ↑ "Jishnu Menon is excited about his new show Sundari". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்).
- ↑ "Popular Tik-Tok Star deubts with Sun Tv Serial". www.behindwoods.com (in ஆங்கிலம்).
வெளி இணைப்புகள்
[தொகு]- சுந்தரி அதிகாரப்பூர்வ வலைத்தளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சுந்தரி
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | சுந்தரி | அடுத்த நிகழ்ச்சி |
ரோஜா |
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | சுந்தரி | அடுத்த நிகழ்ச்சி |
அன்பே வா | ரோஜா |
- சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்
- 2020களில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2021 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- கன்னடத்தில் இருந்து மறு-ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்