பூவே உனக்காக (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூவே உனக்காக
வகைகாதல்
குடும்பம்
நாடகத் தொடர்
உருவாக்கம்மைண்ட்செட் மீடியா பிரைவேட் லிமிடெட்
எழுத்துமுத்துச்செல்வன்
இயக்கம்ராஜீவ் கே. பிரசாந்த்
நடிப்புஅருண்
ஜோவித்தா
ராதிகா பிரீத்தி
முகப்பு இசைவிஜய்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
ஒளிப்பதிவுராம் சிங்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சன் என்டர்டெயின்மெண்ட்
மைண்ட்செட் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்10 ஆகத்து 2020 (2020-08-10) –
ஒளிபரப்பில்

பூவே உனக்காகஎன்பது சன் தொலைக்காட்சியில் 10 ஆகஸ்ட் 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் அருண், ஜோவித்தா, ராதிகா பிரீத்தி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.[1]

கதை சுருக்கம்[தொகு]

பூவரசி (ராதிகா பிரீத்தி) மற்றும் கீர்த்தி (ஜோவிதா லிவிங்ஸ்டன் ஜோன்ஸ்) இருவரும் சிறந்த நண்பர்கள். மேலும் இருவரும் நண்பர்களாக எப்போதும் நிலைத்திருப்பார்கள் என்று நம்புகிறார்கள். பூவரசி தனது தாயிடம் யாரையும் காதலிக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறாள். அதே தருணம் அவளுக்கு விரும்பாத திருமணத்தை அவளின் தாய் நடத்த ஏட்பாடுகள் செய்யப்படுகின்றது. இவளின் கனவில் ஒரு மர்ம மனிதனைப் பற்றி கனவு காண்கிறாள். அவன் பெய ர் கதிர் (அருண்), ஒரு பணக்கார மற்றும் அழகான இளைஞன், கீர்த்தியை முதல் பார்வையில் காதலிக்கிறான். ஆனால் விதியின் சதியால் பூவரசியை கதிர் திருமணம் செய்கின்றான். திருமணத்திற்கு பிறகு பூவரசி, கதிர் மற்றும் கீர்த்தியின் வாழ்வில் நடக்கப்படும் மாற்றங்களை இந்த தொடர் விளக்குகின்றது.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • ராதிகா பிரீத்தி - பூவரசி
 • அருண் - கதிர் சிவநாராயணன்(2020-2021)
 • அஸீம்-கதிர் சிவநாராயணன் (2021)
 • ஜோவித்தா - கீர்த்தி(2020)
 • ஸ்ரீனிஸ் அரவிந்த் -கார்த்திக்

துணை கதாபாத்திரம்[தொகு]

 • அம்மானை - ரத்னவள்ளி
 • விக்னேஷ் - சக்திவேல்
 • ஜி.எம்.குமார் - சங்கரலிங்கம்
 • அருன் குமார் ராஜன் - செல்வன்
 • தேவப்பிரியா - மகேஸ்வரி
 • சுபத்திரா - பத்மாவதி
 • ஜெயலட்சுமி - ஜெயந்தி
 • ஸ்ரீதேவி அசோக் - தனலட்சுமி
 • அருண் ராஜன் - மாரித்துறை
 • அஜய் ரத்தினம் - சிவநாராயணன்
 • சுதா - ராஜலட்சுமி சிவநாராயணன்
 • தஷ்வந்த் - கெளதம்
 • ஜெனிபர்

ஒளிபரப்பு நேரம் மாற்றம்[தொகு]

இந்த தொடர் முதலில் கல்யாண வீடு என்ற தொடரின் ஒளிபரப்பு நேரத்திற்கு பதிலாக 10 ஆகத்து 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை சனி இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 16 நவம்பர் 2020 முதல் 28 நவம்பர் 2020 வரை இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை 1 மணித்தியாலம் ஒளிபரப்பாகி, நவம்பர் 30, 2020 முதல் இரவு 8 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பாகிறது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
10 ஆகத்து 2020 - 13 நவம்பர் 2020
திங்கள் - சனி
19:30 1-76
16 நவம்பர் 2020 - 28 நவம்பர் 2020
திங்கள் - சனி
19:30 - 20:30 77-88
30 நவம்பர் 2020 - ஒளிபரப்பில்
திங்கள் - சனி
20:00 89-

மதிப்பீடுகள்[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2020 7.9% 8.4%
0.0% 0.0%

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பூவே உனக்காக
(30 நவம்பர் 2020 - ஒளிபரப்பில் )
அடுத்த நிகழ்ச்சி
கல்யாண வீடு
(27 ஜூலை 2020 – 13 நவம்பர் 2020)
-
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பூவே உனக்காக
(10 ஆகத்து 2020 - 28 நவம்பர் 2020)
அடுத்த நிகழ்ச்சி
கல்யாண வீடு
(16 ஏப்ரல் 2018 – 3 ஏப்ரல் 2020)