லட்சுமி ஸ்டோர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லட்சுமி ஸ்டோர்ஸ்
லட்சுமி ஸ்டோர்ஸ்.jpg
வகை குடும்பம்
நாடகம்
இயக்கம் ஜவஹர் (1-40)
சுந்தர் கே. விஜயன் (41-)
படைப்பாக்கம் குஷ்பூ
நடிப்பு
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
தயாரிப்பு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
அவ்னி டெலிமீடியா
சன் என்டர்டெயின்மெண்ட்
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
ஜெமினி தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 24 திசம்பர் 2018 (2018-12-24)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்
காலவரிசை
முன் நந்தினி
21:00 மணிக்கு
சந்திரகுமாரி
21:30 மணிக்கு

லட்சுமி ஸ்டோர்ஸ் என்பது சன் தொலைக்காட்சியில் திசம்பர் 24, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு நந்தினி தொடருக்கு பதிலாக ஒளிபரப்பகி, 18 மார்ச் 2019 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர் ஆகும்.

இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் குஷ்பூவின் அவ்னி டெலிமீடியா நிறுவனத்துடன் இணைந்து தொடரை தயாரிக்க, ஜவஹர் (முன்னர்) சுந்தர் கே. விஜயன் (தற்பொழுது) என்ற இயக்குனர் இந்த தொடரை இயக்குகிறார். நந்தினி தொடருக்கு கதை எழுதிய சுந்தர் சி இந்த தொடருக்கும் கதை எழுதி உள்ளார்.[1]

இந்த தொடரில் குஷ்பூ, சுதா சந்திரன், சுரேஷ், முரளி மோகன், டெல்லி குமார், டெல்லி கணேஷ், அபிதா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சன் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி நட்சத்திரா பாக்கியலட்சுமியாகவும் புதுமுக நடிகர் குசைன் ரவியாக நடிக்கின்றார்கள்.[2][3][4]

கதைச்சுருக்கம்[தொகு]

இந்த தொடரின் கதை லட்சுமி ஸ்டோர்ஸ் உரிமையாளர் மகாலிங்கம். இவருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஓரு மகள். இவரின் மூத்த மருமகள் மகாலட்சுமி தனது அன்பயும் ,ஆதரவையும் குடும்பத்திற்கும், லட்சுமி ஸ்டோர்ஸுக்கும் தருகிறார். இவரது கணவன் தேவராஜ் ஒரு சட்டவல்லுனர். ரவி தேவராஜின் சகோதரன்.

பாக்கியலட்சுமி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். தாத்தா அண்ணா, தங்கை என்ற உறவுகளுடன் வாள்பவள் இவள் லட்சுமி ஸ்டோர்ஸ் கடையில் வேலை செய்கிறாள். சகுந்தலா தேவி ஒரு அரசியல் வாதி, லட்சுமி ஸ்டோர்ஸ் கடையை எப்படியாவது விலைக்கு வாங்க வேண்டும் என நினைக்கிறார். இதற்கிடையில் பாக்யலட்சுமிக்கும், ரவிக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. சகுந்தலாதேவி மற்றும் லட்சுமி ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு ஏற்படும் மோதல்கள் மற்றும்உறவுகளின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து கதை நகர்கின்றது.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • குஷ்பூ - மகாலட்சுமி தேவராஜ்
  • மகாலிங்கம் குடும்பத்தின் மூத்த மருமகள் மற்றும் தேவராஜின் மனைவி.
 • நட்சத்திரா - பாக்கியலட்சுமி
  • லட்சுமி ஸ்டோர்ஸ்ஸில் வேலை செய்பவள். ரவியின் மனைவி மற்றும் மகாலிங்கம் குடும்பத்தின் மூன்றாவது மருமகள்.
 • சுதா சந்திரன் - சகுந்தலா தேவி
 • சுரேஷ் - தேவராஜ்
  • புகழ் பெற்ற வக்கியில். மகாலட்சுமி மற்றும் சியாமளா கணவன்.
 • குசைன் - ரவி
  • மகாலிங்கத்தின் நான்காவது மகன். பாக்கியலட்சுமியின் கணவன்.
 • அபிதா - சியாமளா
  • ஒரு வைத்தியர். பிரியாவின் தாய் மற்றும் தேவராஜின் இரண்டாவது மனைவி.

மகாலிங்கம் குடும்பத்தினர்[தொகு]

 • முரளி மோகன் - மகாலிங்கம்
 • சுரேஷ் - தேவராஜ் (மூத்த மகன்)
 • குஷ்பூ - மகாலட்சுமி தேவராஜ் (மூத்த மருமகள்)
 • சாம்சன் வில்சன் - வைத்தியர். சரவணன் (இரண்டாவது மகன்)
 • சுவாதி தாரா - வைத்தியர். உமா சரவணன் (இரண்டாவது மருமகள்)
 • கிரிதரன் - அர்ஜுன் (மூன்றாவது மகன்)
 • குசைன் - ரவி (நான்காவது மகன்)
 • ஜென்னிபர் → ஷெரின் ஜானு - கமலா (மகள்)
 • தீபா சங்கர் - பொன்னம்மா (பணிப்பெண்)
 • தியா - பிரியா (தேவராஜ் மற்றும் சியாமளா மகள்)
 • அபிதா - சியாமளா (தேவராஜின் இரண்டாவது மனைவி)

தில்லை குடும்பத்தினர்[தொகு]

 • டெல்லி குமார் - தில்லை (பாக்கியலட்சுமி, வனிதா மற்றும் செந்திலின் தாத்தா)
 • அரவிந் - செந்தில் (பாக்கியலட்சுமியின் அண்ணா)
 • நட்சத்திரா - பாக்கியலட்சுமி
 • நிஷா யாழினி - வனிதா (பாக்கியலட்சுமியின் தங்கை)
 • தனிஷா குப்பண்டா - மல்லிகா (செந்திலின் மனைவி)
 • பியசில் ஹிதாய - திவ்யா (மல்லிகாவின் தங்கை)
 • பாரி - மீனு (செந்தில் மற்றும் மல்லிகாவின் மகள்)

சகுந்தலா தேவி குடும்பத்தினர்[தொகு]

 • சுதா சந்திரன் - சகுந்தலா தேவி
 • சாக்ஷி சிவா - ராஜு (சகுந்தலா தேவியின் சகோதரன்)
 • சாம்பவி → சுருதி - தேஜா (சகுந்தலா தேவியின் மகள்)
 • வினய் யு.ஜே - ராஜ்குமார் (சகுந்தலா தேவியின் மகன் மற்றும் கமலாவின் முன்னாள் காதலன்)
 • ரேகா கிருஷ்ணப்பா - சாமுண்டேஸ்வரி (சகுந்தலா தேவியின் சகோதரி) (2019-
 • மங்கிரவி - உத்தமன் (சகுந்தலா தேவியின் உதவியாளர் மற்றும் பொன்னம்மாவின் முன்னாள் காதலன்)
 • பேயில்வன் ரங்கநாதன் - பட்டாபி (சகுந்தலா தேவியின் உதவியாளர்)

துணை கதாபாத்திரம்[தொகு]

 • டெல்லி கணேஷ் - ராஜேந்திரன்
 • நிஷா - மரகதம்
 • ஸ்மாலீன் மோனிகா -லதா
 • ஆர். பூங்கோடி
 • பெரோஸ் கான்

முந்தைய கதாபாத்திரம்[தொகு]

 • ஜென்னிபர் - கமலா
 • முரளி மோகன் - மகாலிங்கம்
 • சாம்பவி - தேஜா (சகுந்தலா தேவியின் மகள்)
 • அஞ்சலி ராவ் - திவ்யா

சிறப்பு தோற்றம்[தொகு]

 • நித்யா ராம் - நித்யா (மகாலட்சுமியின் உறவினர்) (அத்தியாயங்கள்: 214-219)

மகா சங்கமம்[தொகு]

 • 9 ஜனவரி 2019 அன்று கண்மணி என்ற தொடருடன் இணைத்து இரவு 8:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஒளிபரப்பானது.
 • 13 மே 2019 முதல் 18 மே 2019 வரை ரோஜா என்ற தொடருடன் இணைந்து இரவு 9 மணி முதல் இரவு 10:00 மணி வரை 6 நாட்கள் ஒளிபரப்பானது.

ஒளிபரப்பு நேரம் மாற்றம்[தொகு]

இந்த தொடர் முதலில் 24 திசம்பர் 2018 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. 18 மார்ச்சு 2019 முதல் இவ் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் ரோஜா மற்றும் ரன் போன்ற தொடர்கள் ஒளிபரப்பானது. தற்பொழுது இரவு 9 மணிக்கு ராசாத்தி என்ற தொடர் ஒளிபரப்பாகிறது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
24 திசம்பர் 2018 - 16 மார்ச்சு 2019
திங்கள் - சனி
21:00 1-67
18 மார்ச்சு 2019 – 14 செப்டம்பர் 2019
திங்கள் - சனி
21:30 68-213
16 செப்டம்பர் 2019 – 21 செப்டம்பர் 2019
திங்கள் - சனி
21:00 - 22:00 214-219 ஒரு மணித்தியால சிறப்பு அத்தியாயங்கள்
23 செப்டம்பர் 2019 – ஒளிபரப்பில்
திங்கள் - சனி
21:30 220-

மதிப்பீடுகள்[தொகு]

கீழே உள்ள அட்டவணையில், நீல நிற எண்கள் குறைந்த மதிப்பீடுகள் குறிக்கும் மற்றும் சிவப்பு நிற எண்கள் அதிக மதிப்பீடுகளை குறிக்கும்.

அத்தியாயங்கள் ஒளிபரப்பான திகதி BARC மதிப்பீடுகள் (தமிழ்நாடு + புதுச்சேரி)[5]
தேசிய அளவில் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி)
1-20 24 திசம்பர் 2018 - 21-ஜனவரி 2019 9.1%
21-40 22 ஜனவரி 2019 - 14 பிப்ரவரி 2019 8.6%
41-67 15 பிப்ரவரி 2019 - 16 மார்ச்சு 2019 8.7%
68 - 100 18 மார்ச்சு 2019 - 25 ஏப்ரல் 2019 6.3%
101 - 150 26 ஏப்ரல் 2019 - 1 ஜூலை 2019 7.5%
151 - 200 2 ஜூலை 2019 - 29 ஆகஸ்ட் 2019 7.2%

மொழி மாற்றம்[தொகு]

இந்த தொடர் மலையாளம் மொழியில் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற அதே பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சனவரி 7, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 180அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜெமினி தொலைக்காட்சியில் 11 பிப்ரவரி 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகி 35 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

நாடு Language அலைவரிசை தலைப்பு ஒளிபரப்பு பகுதிகள்
இந்தியா தெலுங்கு ஜெமினி தொலைக்காட்சி లక్ష్మి స్టోర్స్ 11 பிப்ரவரி 2019 - 29 மார்ச் 2019 35
மலையாளம் சூர்யா தொலைக்காட்சி ലക്ഷ്മി സ്റ്റോറുകൾ 7 சனவரி 2019- 13 செப்டம்பர் 2019 180

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9:30 மணிக்கு தொடர்கள்
Previous program லட்சுமி ஸ்டோர்ஸ்
(18 மார்ச்சு 2019 - ஒளிபரப்பில்)
Next program
சந்திரகுமாரி
(10 திசம்பர் 2018 – 18 மார்ச்சு 2019)
-
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை இரவு 9 மணி தொடர்கள்
Previous program லட்சுமி ஸ்டோஸ்
(24 திசம்பர் 2018 – 16 மார்ச்சு 2019)
Next program
நந்தினி
(23 சனவரி 2017 – 22 திசம்பர் 2018)
ரோஜா
(18 மார்ச்சு 2019 - 3 ஆகஸ்ட் 2019)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_ஸ்டோர்ஸ்&oldid=2807611" இருந்து மீள்விக்கப்பட்டது