உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திரகுமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரகுமாரி
வகைசரித்திரம்
கற்பனை
குடும்பம்
நாடகத் தொடர்
எழுத்துமருது சங்கர்
பால முரளி வர்மா
திரைக்கதைகுமரேசன்
ராஜ் பிரபு
கதைராடான் மீடியா குழு
இயக்கம்
படைப்பு இயக்குனர்ராதிகா
நடிப்பு
இசைசிற்பி
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
அத்தியாயங்கள்144
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ராதிகா
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்10 திசம்பர் 2018 (2018-12-10) –
1 சூன் 2019 (2019-06-01)
Chronology
முன்னர்வாணி ராணி (21:30)
விநாயகர் (18:30)
பின்னர்தமிழ்ச்செல்வி (18:30)
லட்சுமி ஸ்டோர்ஸ் (21:30)

சந்திரகுமாரி என்பது சன் தொலைக்காட்சியில் திசம்பர் 10, 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 18 மார்ச்சு 2019 முதல் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு சரித்திர குடும்பத் நாடகத் தொடர் ஆகும்.

இந்தத் தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ராதிகாவின்ராடான் மீடியாவொர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அதிக பொருள் செலவில் தயாரிக்கிறது. இந்தத் தொடரில் சரித்திரகால பெண் மற்றும் தற்காலத்து பெண் என 2 வேடங்களில் ராதிகா நடித்தார், இவருக்கு பதிலாக விஜி சந்திரசேகர் சந்திரா என்ற காதாபாத்திரத்தில் நடித்தார். இவருடன் சேர்ந்து தாமிரபரணி, சட்டப்படி குற்றம் போன்ற படங்களில் நடித்த பானு, இதில் ராதிகாவின் மகளாக நடிக்கிறார். யுவராணி, அரவிந்து ஆகாசு, அருண் குமார், வேணு அரவிந்த், லதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.[1][2]

சரித்திர காலத்துக் கதையை, அண்ணாமலை, வீரா, பாட்ஷா படத்தின் இயக்குநரான சுரேஸ் கிருஷ்ணா இயக்குகிறார். நிகழ்காலக் கதையை சி.ஜே.பாஸ்கர் இயக்குகிறார். சிற்பி இசையமைக்கும் இந்தத் தொடருக்கு, பாலமுருகன் மற்றும் பிலிப் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்தார்.

நடிகர்கள்

[தொகு]

முதன்மை காதாபாத்திரம்

[தொகு]
  • விஜி சந்திரசேகர் (79-144) - சந்திரா (தற்காலத்தில்) அண்ணாமலை குடும்பத்தின் மூத்த மருமகள், ஒரு கொலை வழக்கில் காவலில் இருந்தார், அஞ்சலியின் தாய் மற்றும் நீலகண்டனின் மனைவி.
    • ராதிகா (1-78) - அரசி சந்திரகுமாரி (முக்காலத்தில்) மங்கலாபுரி நாட்டு அரசி, புகழ்பெற்ற புராணமான சந்திர குல வம்சத்தின் வம்சாவளியினர், கற்பக லிங்கத்தை பாதுகாப்பவர்.
  • பானு
    • யாழினிதேவி (முக்காலத்தில்) மங்கலாபுரி நாட்டு இளவரசி.
    • அஞ்சலி, சந்திரா மற்றும் நீலகண்டனின் மகள், இவள் தனது தாயை வெறுப்பவள், ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர், சந்திர வம்சத்தை பற்றி ஆராய்கிறாள்.
  • அருண் சாகர் / வேணு அரவிந்த் - நீலகண்டர்
  • அரவிந்து ஆகாசு - ஆகாஷ்

துணை காதாபாத்திரம்

[தொகு]
  • நிரோஷா - வள்ளி
  • தேவி பிரியா -ருத்திரா
  • சாக்ஷி சிவா - சிவநேசன்
  • யுவராணி - ரோகினி சிவநேசன்
  • லதா -
  • அருண் குமார் ராஜன் - சத்தியமூர்த்தி
  • நேகா - சரண்யா
  • சம்யுக்த கார்த்திக்
  • மல்லிகா
  • அருண்
  • அர்ஜுன்
  • சுவேதா
  • ஸ்ரீவித்தியா
  • அசோக்
  • கீதா
  • கெளதம்
  • வினோத் - நாகா

முன்னாள் காதாபாத்திரம்

[தொகு]
  • உமா ரியாஸ்கான் - தேவிகா
  • அருண் சாகர் - நீலகண்டர்
  • சில்பா
  • சசிந்தர் புஷ்பலிங்கம் - முகுந்தன்

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

[தொகு]

இந்த தொடர் முதலில் 10 திசம்பர் 2018 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பானது. 18 மார்ச்சு 2019 முதல் இவ் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில்லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடர் ஒளிபரப்பாகின்றது.

19 வருடங்கலாக இரவு 9:30 மணிக்கு ராதிகாவின் தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தது, இந்த தொடரின் மதிப்பிட்டு அளவு குறைவு காரணாமாக இந்த தொடர் நேரம் மாற்றப்பட்டது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
10 திசம்பர் 2018 - 16 மார்ச்சு 2019
திங்கள் - சனி
21:30 1-78
18 மார்ச்சு 2019 – 1 சூன் 2019 (2019-06-01)
திங்கள் - சனி
18:30 79- 114

மதிப்பீடுகள்

[தொகு]

கீழே உள்ள அட்டவணையில், நீல நிற எண்கள் குறைந்த மதிப்பீடுகள் குறிக்கும் மற்றும் சிவப்பு நிற எண்கள் அதிக மதிப்பீடுகளை குறிக்கும்.

அத்தியாயங்கள் ஒளிபரப்பான திகதி BARC மதிப்பீடுகள் (தமிழ்நாடு + புதுச்சேரி)[3]
தேசிய அளவில் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி)
1-20 10 திசம்பர் 2018 - 2-ஜனவரி 2019 5.8%
21-40 3 ஜனவரி 2019 - 30 ஜனவரி 2019 5.3%
41-60 31 ஜனவரி 2019 - 22 பிப்ரவரி 2019 6.5%
61-80 23 பிப்ரவரி 2019 - 19 மார்ச்சு 2019 6.8%
81-100 20 மார்ச்சு 2019 - 11 ஏப்ரல் 2019 3.2%
101-120 12 ஏப்ரல் 2019 - 4 மே 2019 3.6%
121-144 6 மே 2019 - 1 ஜூன் 2019 3.5%

மொழி மாற்றம்

[தொகு]

இந்த தொடர் மலையாளம் மொழியில் சந்திரகுமாரி என்ற அதே பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு டிசம்பர் 24, 2018 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:30 மணிக்கு சூர்யா தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகின்றது. கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உதயா தொலைக்காட்சி மற்றும் ஜெமினி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

நாடு Language அலைவரிசை தலைப்பு ஒளிபரப்பு பகுதிகள்
இந்தியா தெலுங்கு ஜெமினி தொலைக்காட்சி చంద్రకుమారి 24 டிசம்பர் 2018 - 8 மார்ச் 2019 55
மலையாளம் சூர்யா தொலைக்காட்சி ചന്ദ്രകുമാരി 24 டிசம்பர் 2018 - 8 மார்ச் 2019 117
கன்னடம் உதயா தொலைக்காட்சி ಚಂದ್ರಕುಮಾರಿ 7 சனவரி 2019 - 8 மார்ச் 2019 44

சர்வதேச ஒளிபரப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ராதிகாவின் ‘சந்திரகுமாரி’ சீரியல்: வரும் திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பு" (in en). tamil.thehindu.com. https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25698064.ece. 
  2. "சரித்திரப் பின்னணியுடன் ராதிகா நடிக்கும் புதிய மெகாத் தொடர் - சந்திரகுமாரி!" (in en). www.dinamani.com. https://www.dinamani.com/cinema/cinema-news/2018/nov/28/chandrakumari-3047659.html. 
  3. "barcindia.co.in Azhagu serial Ratings".

வெளி இணைப்புகள்

[தொகு]
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி மாலை 6:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி சந்திரகுமாரி
(18 மார்ச்சு 2019 - 1 சூன் 2019)
அடுத்த நிகழ்ச்சி
விநாயகர்
(9 அக்டோபர் 2017 – 16 மார்ச்சு 2019)
தமிழ்ச்செல்வி
(3 சூன் 2019 - 3 ஆகஸ்ட் 2019)
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை இரவு 9:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி சந்திரகுமாரி
(10 திசம்பர் 2018 – 18 மார்ச்சு 2019)
அடுத்த நிகழ்ச்சி
வாணி ராணி
(21 சனவரி 2013 – 8 திசம்பர் 2018)
லட்சுமி ஸ்டோர்ஸ்
(118 மார்ச்சு 2019 - 25 சனவரி 2020)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகுமாரி&oldid=3298442" இலிருந்து மீள்விக்கப்பட்டது