நந்தினி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நந்தினி
நந்தினி (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகை
இயக்கம்ராஜ்கபூர்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழி
பருவங்கள்
அத்தியாயங்கள்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்
ஒளிப்பதிவுயு. கே. செந்தில் குமார்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை
ஒளிபரப்பான காலம்23 சனவரி 2017 (2017-01-23) –
22 திசம்பர் 2018 (2018-12-22)
Chronology
முன்னர்பிரியமானவள்
பின்னர்லட்சுமி ஸ்டோர்ஸ்
தொடர்புடைய தொடர்கள்ஜோதி
வெளியிணைப்புகள்
இணையதளம்

நந்தினி என்பது சன் தொலைக்காட்சியில் சனவரி 23, 2017 முதல் டிசம்பர் 22, 2018 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கும் மறுஒளிபரப்பு காலை 10.30 மணிக்கும் ஒளிபரப்பான திகில் மற்றும் கன்பணை காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சித் தொடர் இதுவாகும். இந்த தொடர் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 4 ( தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்) மொழிகளில் தயாரான தொடர் இதுவாகும். தென் இந்தியாவில் அதிக பொருள் செலவில் செய்த தொடரில் முதல் இடத்திலும், இந்தியா அளவில் 2ஆம் இடத்திலும் உள்ளது.

இந்த தொடரை சன் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் இயக்குனர் சுந்தர் சி, குஷ்பூவின் அவனி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் தொடரை தயாரித்தது. பிரபல இயக்குநரும், நடிகருமான ராஜ்கபூர் இயக்கினார். தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுக்கப்படும் இந்த தொடர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.[2]

இந்த தொடரின் 2 ஆம் பாகம் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் 25 பெப்ரவரி 2019 முதல் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடரின் வழித் தொடரான ஜோதி என்ற தொடர் 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது.

பருவங்கள்[தொகு]

பருவம் : 1[தொகு]

மொழி அத்தியாயங்களின் எண்ணிக்கை முதலில் ஒளிபரப்பப்பட்டது (இந்தியா)
தொடர் அறிமுகக் காட்சி தொடர் இறுதி
தமிழ் 604 23 சனவரி 2017 (2017-01-23) 22 திசம்பர் 2018 (2018-12-22)
கன்னடம் 604 23 சனவரி 2017 (2017-01-23) 22 பெப்ரவரி 2019 (2019-02-22)
தெலுங்கு 604 23 சனவரி 2017 (2017-01-23) 22 பெப்ரவரி 2019 (2019-02-22)
மலையாளம் 604 23 சனவரி 2017 (2017-01-23) 5 சனவரி 2019 (2019-01-05)
வங்காளம் 328 26 ஆகத்து 2019 (2019-08-26) 13 அக்டோபர் 2020 (2020-10-13)

பருவம் : 2[தொகு]

மொழி அத்தியாயங்களின் எண்ணிக்கை முதலில் ஒளிபரப்பப்பட்டது (இந்தியா)
தொடர் அறிமுகக் காட்சி தொடர் இறுதி
கன்னடம் 373 25 பெப்ரவரி 2019 (2019-02-25) 31 சூலை 2020 (2020-07-31)
தெலுங்கு 25 பெப்ரவரி 2019 (2019-02-25) 3 ஏப்ரல் 2020 (2020-04-03)
வங்காளம் 14 அக்டோபர் 2020 (2020-10-14) 2021

கதைச்சுருக்கம்[தொகு]

இந்த தொடரின் கதை தன் குடும்பத்தை அழித்ததற்காக ராஜசேகர் குடும்பத்தை பழிவாங்க துடிக்கும் நந்தினி என்ற பாம்பும், தனது கணவனின் குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஜானகி என்ற ஆவிக்கும் நடக்கும் யுத்தம், இதில் யார் ஜெயித்தார்கள் என்பதுதான் கதை.

கதாபாத்திரங்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • நித்யா ராம் - கங்கா/நந்தினி (இரட்டை பாத்திரம்)
  • நந்தினி: சத்தி நாகம், ரத்னவேல் பூபதி மற்றும் பார்வதியின் மகள், கங்காவின் இரட்டை சகோதரி.
  • கங்கா: சாதாரண பெண், அருணின் இரண்டாவின் மனைவி. ரத்னவேல் பூபதி மற்றும் பார்வதியின் மகள், மாணிக்கத்தின் வளர்ப்பு மகள்
 • மாளவிகா வேல்ஸ் - ஜானகி/சீதா (இரட்டை பாத்திரம்)
  • ஜானகி: ஆவி, அருணின் முதலாவது மனைவி. ராஜசேகர் குடும்பத்தை காப்பாற்ற போராடுகிறாள். தேவசேனாவின் தாய்.
  • சீதா: அருணின் மூன்றாவது மனைவி.
 • ராகுல் ரவி- அருண் ராஜசேகர்
  • ராஜசேகரின் மகன், ஜானகி, கங்கா மற்றும் சீதாவின் கணவன். தேவசேனாவின் தந்தை.
 • பேபி அதித்ரி- தேவசேனா
  • அருண்-ஜானகியின் மகள்.
 • குஷ்பூ - சிவ நாகம்/பார்வதி
  • கங்கா, நந்தினியின் தாய், ரத்னவேல் பூபதி யின் மனைவி. ராஜசேகர் குடும்பத்தால் வஞ்சிக்கப்பட்டவள்.
 • ரியாஸ் கான் - செய்யநாயகி/ரத்னவேல் பூபதி
  • ரத்னவேல் பூபதி: பார்வதியின் கணவன், நந்தினி மற்றும் கங்காவின் தந்தை.
  • செய்யநாயகி: திருநங்கை, கருப்புசாமியின் அருள் உள்ளவர்.
 • காயத்ரி ஜெயராம்- பைரவி, மந்திரவாதி
  • தனது தங்கையின் இறப்பிற்கு அருண் தான் காரணம் என நினைத்து அருணை கொலை செய்ய துடிக்கு மந்திரவாதி பெண்.
 • விஜயகுமார் - ராஜசேகர்
  • பார்வதியின் மரணத்தில் சம்பந்தம் உள்ளவர். (இந்த தொடரில் நந்தினியால் கொலை செய்யப்பட்டார்)

துணை கதாபாத்திரம்[தொகு]

 • ரேகா - மாதவி
  • நம்பூதிரியின் தங்கை, கருநாகம். நந்தினி மற்றும் பைரவியை அளிக்கநினைப்பவர்.
 • சச்சு - அன்னபூரணி
  • ராஜசேகரின் அக்கா.
 • விஜயலட்சுமி → கன்யா பாரதி - தேவி
  • ராஜசேகரின் தங்கை.
 • ஸ்ரீகணேஷ் - ஈஸ்வரன்
  • தேவியின் கணவர்.
 • மஞ்சுளா - ஷாந்தி
  • தேவியின் மகள்.
 • ரமேஷ் பண்டித் - தர்மராஜ்
  • ராஜசேகரின் மச்சான்.
 • தமீம் அன்சாரி - பாலாஜி
  • அருணின் நண்பர்.
 • கீர்த்தி - மாயா
  • தர்மராஜின் மகள்.
 • ஷப்னம் - ரம்யா
  • ராஜசேகரின் தங்கை.
 • வினோத் - நம்பூதிரி
 • விஜய துர்கா - சாமுண்டி
 • மீனா - லீலா
 • கவிதா - செல்வராணி
 • சங்கர் - சத்தியநாராயணன்
 • ராணி - மல்லிகா
 • கிரண் - மூர்த்தி
 • ஸ்ரீ கணேஷ் - ஈஸ்வரன்
 • கௌசல்யா - ரங்கநாயகி
 • கலைராணி - நாச்சியாரம்மா
 • ஷ்ரேயா அஞ்சன் - காயத்ரி (தொடரில் இறந்துவிட்டார்)

படப்பிடிப்பு[தொகு]

இந்த தொடர் மலேசியா, மைசூர், கல்லிடைகுறிச்சி, பொள்ளாச்சி, ரிஷிகேஷ் போன்ற இடங்களில் படப்பிடிப்பு செய்யப்பட்டது.

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

நந்தினி சர்வதேச ஒளிபரப்பு
நாடு அலைவரிசை பெயர் மொழி
உலகளவில் சன் குழுமம் நந்தினி
ನಂದಿನಿ
నందిని
നന്ദിനി
தமிழ்
கன்னடம்
தெலுங்கு
மலையாளம்
நிகழ்நிலை சன் நெக்ட்ஸ்
சன் தொலைக்காட்சி வளையொளி நந்தினி தமிழ்
இந்தியா இந்தியா சன் தொலைக்காட்சி நந்தினி
உதயா தொலைக்காட்சி ನಂದಿನಿ கன்னடம்
ஜெமினி தொலைக்காட்சி నందిని தெலுங்கு
சூர்யா தொலைக்காட்சி നന്ദിനി மலையாளம்
சன் வங்காள নন্দিনী வங்காளம்
இலங்கை இலங்கை சக்தி தொலைக்காட்சி நந்தினி தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Another fantasy serial- Nandhini on Gemini Tv".
 2. "Nandhini series on Surya TV".

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை இரவு 9 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி நந்தினி
(23 சனவரி 2017 – 22 திசம்பர் 2018)
அடுத்த நிகழ்ச்சி
பிரியமானவள்
(19 ஜனவரி 2015 - 21 ஜனவரி 2017)
லட்சுமி ஸ்டோர்ஸ்
(24 திசம்பர் 2018 – 16 மார்ச்சு 2019)