ராசாத்தி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராசாத்தி
250px
வகைகுடும்பம்
நாடகம்
எழுதியவர்ரத்னகுமார்
இயக்குனர்ராஜ்கபூர் (1-28)
பாபுசிவன் (28-)
நடிப்பு
முகப்பிசைபாடல்
மோகன் ராஜா
இசையமைப்பாளர்கள்சபேஷ் முரளி
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்அன்புராஜா
ஒளிப்பதிவாளர்செந்தில்குமார்
பிரகாஷ்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சன் என்டர்டெயின்மெண்ட்
ஏ ஆர் பிலிம் வேர்ல்ட்
ஒளிபரப்பு
சேனல்சன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்23 செப்டம்பர் 2019 (2019-09-23) –
ஒளிபரப்பில்

ராசாத்தி என்பது சன் தொலைக்காட்சியில் 23 செப்டம்பர் 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, சனவரி 28, 2020 ஆம் ஆண்டு முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி, சூலை 13, 2020 ஆம் ஆண்டு முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்ப கதைக்களம் கொண்ட தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை பிரபல இயக்குனர்கள் ராஜ்கபூர்[1] (முன்னர்) மற்றும் பாபுசிவன் (தற்போது) ஆகியோர்கள் இயக்கியுள்ளார்கள்.[2]

ராசாத்தி என்ற கதாபாத்திரத்தில் பவானி ரெட்டி/டெப்ஜனி மொடக் நடிக்க, இவரின் தந்தையாக பிரபல நடிகர் விஜயகுமார் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் முன்னாள் நகைசுச்சுவை நடிகர் செந்தில்[3] மற்றும் விசித்ரா[4] நடிக்கிறார்கள். இருவரும் பல வருடங்கள் கழித்து நடிக்கும் தொடர் இதுவாகும்.[5] ராசாதிக்கு ஜோடியாக புதுமுக நடிகர் ஆதித்யா நடிக்கிறார். இளவரசி சௌந்தரவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடிகை தேவயானி நடிக்கிறார். இந்த தொடரின் கதை உரிமைக்காக உறவுகளுடன் போராடும் ராசாத்தி என்ற பெண்ணை சுற்றி நகர்கின்றது.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

துணைக் கதாபாத்திரங்கள்[தொகு]

 • தென்னவன் → ரமேஷ் பண்டிட் - ராசாப்பா
 • சுலக்சனா - (பாண்டியனை வளர்ந்த தாய்)
 • கீர்த்தி ஜெய் தனுஷ் - கயல் சிவா (சிந்தாமணியின் மகள்)
 • நித்யா ரவீந்தர் - சரஸ்வதி (சண்முகசுந்தரத்தின் முதல் மனைவி, ராசாத்தியின் தாய்)
 • ரீனா - (சண்முகசுந்தரத்தின் இரண்டாவது மனைவி, ராசாப்பாவின் தாய்)
 • மனோஜ் குமார் - (சிந்தாமணியின் சகோதரன்)
 • சிவன் ஸ்ரீனிவாசன் - தர்மதா
 • சபரி - சிவா
 • மீனா - சூடாமணி
 • சுப்புலக்ஷ்மி - மேனகா
 • உஷா சாய் - கல்யாணி
 • மகேஷ் பிரபு - மாதவன்
 • பொள்ளாச்சி பாபு

முந்தைய கதாபாத்திரங்கள்[தொகு]

 • விஜயகுமார் - சண்முகசுந்தரம் (தொடரில் இறந்துவிட்டார்)
 • மனோஜ்குமார்
 • சபரி
 • லூயிஸ்
 • கீதா நாராயணன்
 • ஜானகி
 • மாயாக்கள் பாட்டி
 • ரம்யா
 • மீனாட்ச்சி
 • ஹேமா ஸ்ரீ
 • பண்டி ராவி
 • அபிமன்யூ
 • தமிழ் செல்வன்

நடிகர்களின் தேர்வு[தொகு]

இந்த தொடரில் முதலில் சின்னத் தம்பி தொடரில் நடித்த பவானி ரெட்டி இந்த தொடரில் ராசாத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அத்தியாயம் 61 முதல் நடிகை தேவயானியின் வருகைக்கு பிறகு இவருக்கான முக்கியத்துவம் குறைந்ததால் இவர் இந்த தொடலிருந்து விலகினார். அத்தியாயம் 100 முதல் என்ற புதுமுக நடிகை டெப்ஜனி மொடக் என்பவர் ராசாத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவரின் தந்தையாக சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர் விஜயகுமார் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தங்கம், வம்சம், நந்தினி ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார். இவர்களுடன் சிந்தாமணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை விசித்ராவும் நடிக்கிறார். இவர் 18 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் முதல் தொடர் இதுவாகும். பிரபல நகைசுச்சுவை நடிகர் செந்தில், சுலக்சனா, பொள்ளாச்சி பாபு, புதுமுக நடிகர் ஆதித்யா , நித்யா ரவீந்தர், கீர்த்தி, ரமேஷ் பண்டிட் போன்ற பலர் இந்த தொடரில் நடிக்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9:30 மணி தொடர்கள்
Previous program ராசாத்தி
(28 சனவரி 2020
ஒளிபரப்பில்)
Next program
லட்சுமி ஸ்டோர்ஸ்
(18 மார்ச்சு 2019 - 25 சனவரி 2020)
-
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9 மணி தொடர்கள்
Previous program ராசாத்தி
(23 செப்டம்பர் 2019
25 சனவரி 2020)
Next program
லட்சுமி ஸ்டோர்ஸ்
(16 செப்டம்பர் 2019 - 21 செப்டம்பர் 2019)
சித்தி–2
(27 சனவரி 2020
ஒளிபரப்பில்)