ரோஜா (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோஜா
ரோஜா (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகைகுடும்பம்
காதல்
சட்டம்
நாடகம்
எழுதியவர்சரிகம கதை குழு
திரைக்கக்தைஎஸ்.ஸ் சேக்கிழார் (1-410)
வி. பத்மாவதி (411-)
கதைவாசுபராதி
இயக்குனர்தனுஷ் (பகுதி:1-48)
வ.சதாசிவம் (பகுதி:49-தற்போது)
படைப்பு இயக்குனர்பிரின்ஸ்
நடிப்புபிரியங்கா நல்கார்
சிபு சூர்யன்
வெங்கட் ரங்கநாதன்
ஷாமிலி சுகுமார்
வடிவுக்கரசி
காயத்ரி சாஸ்திரி
சிவா
முகப்பிசைஞர்ரவி ராகவ்
முகப்பிசை"கவிதை போல வந்தாள் ரோஜா"
மானசி (பாடகி)
அருண் பாரதி (பாடல்)
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்மொழி
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சரிகம
ஒளிப்பதிவாளர்ஆர்.வி.பார்த்திபா கிருஷ்ணன்
தொகுப்பாளர்கள்கே. சங்கர்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சரிகம
ஒளிபரப்பு
சேனல்சன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்9 ஏப்ரல் 2018 (2018-04-09) –
ஒளிபரப்பில்

ரோஜா என்பது சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 9, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி, மார்ச் 18, 2019 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, ஆகஸ்ட் 5, 2019 இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பம் மற்றும் காதல் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1]

இந்த தொடரில் புதுமுக நடிகர் சிபு சூர்யன் என்பவர் அர்ஜூனாகவும் மற்றும் வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி,வடிவுக்கரசி , சிவா, ராஜேஷ் போன்ற பலர் நடித்துள்ளார்கள். பிரபல நடிகை நதியா ஒரு முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்கின்றார், இவர் நடிக்கும் முதல் தொலைக்காட்சி தொடர் இதுவாகும்.[2][3] இந்த தொடர் சிறந்த 5 தொடர்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டு சன் குடும்பம் விருதுகளில் சிறந்த நாயகி கதாபாத்திரம், சிறந்த புகழ்பெற்ற தொடர், பிரபலமான ஜோடி போன்ற பல விருதுகளை வென்றுள்ளது.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • பிரியங்கா நல்கார் - ரோஜா அர்ஜுன் / அனு
  • மாணிக்கத்தின் உண்மையான மகள், அர்ஜுனின் மனைவி.
 • சிபு சூர்யன் - அர்ஜுன்
  • கல்பனா மற்றும் பிரதாப்பின் மூத்த மகன் மற்றும் ரோஜாவின் கணவர்
 • வெங்கட் ரங்கநாதன் - அஸ்வின்
  • அர்ஜுனின் சகோதரன். காதலித்த பூஜாவை திருமணம் செய்ய போராடுகிறான்.
 • ஷாமிலி சுகுமார் - பிரியா / அனு
  • ரோஜாவுடன் ஒன்றாக அனாதை ஆசிரமத்தில் வளந்தவள், மாணிக்கத்தின் பொய்யான மகள். இந்த தொடரின் வில்லி.
 • ராணி - சந்திரகாந்தா (2019-)
  • நேர்மையான போலீஸ் அதிகாரி.

அர்ஜுன் குடும்பத்தினர்[தொகு]

 • வடிவுக்கரசி - அன்னப்பூரணி
  • பிரதாப், செண்பகம் மற்றும் யசோதாவின் தாய். அர்ஜுன், அஸ்வின், தீபா மற்றும் அனுவின் பாட்டி. கனடா காமாட்சியின் சகோதரி.
 • லதா - கனடா காமாட்சி
  • அன்னப்பூரணியின் சகோதரி.
 • சிவா - பிரதாப்
  • அன்னபூரணியின் மகன், கல்பனாவின் கணவர். அர்ஜுன், அஸ்வின் மற்றும் தீபாவின் தந்தை
 • காயத்ரி சாஸ்திரி - கல்பனா பிரதாப்
  • அன்பான தாய் மற்றும் மாமியார். பிரதாப்பின் மனைவி, மாமியார் வார்த்தைக்கு அடிபனியும் மருமகள்
 • அகிலா - தீபா
  • அர்ஜுனின் சகோதரி.
 • ரம்யா - யசோதா பாலசந்தர்
  • அன்னபூரணியின் மகள், பிரதாப்பின் சகோதரி மற்றும் பாலச்சந்திரன் மனைவி. ரோஜாவை வெறுப்பதால் அனுவுடன் சேர்ந்து ரோஜாவுக்கு பல பிரச்சனைகள் குடுக்கின்றார்.
 • தேவ் ஆனந்த் - பாலசந்தர்
  • யசோதாவின் கணவர்.
 • சுமதி ஸ்ரீ - சுமதி
  • அர்ஜுன் வீட்டு பணிப்பெண்

அனு குடும்பத்தினர்[தொகு]

 • ராஜேஷ்[4] - டைகர் மாணிக்கம்
  • பிரபல வக்கீல், ரோஜாவின் உண்மையான தந்தை, செண்பகத்தின் கணவர்.
 • ஷர்மிளா - செண்பகம் மாணிக்கம் (சிறப்பு தோற்றம்)
  • அனுவின் தாய், இந்த தொடரில் இறந்து விடடார்.
 • கிரிஷ் - சேது
  • மாணிக்கத்தின் சகோதரன்.
 • சோபா ராணி → ரேகா சுரேஷ் - தெய்வானை சேது
 • கணேஷ் - ரஞ்சித்
  • சேது மற்றும் தெய்வானையின் மகன்

பூஜா குடும்பத்தினர்[தொகு]

 • ஸ்மிருதி கஷ்யாப் - பூஜா
  • அஸ்வினின் காதலி.
 • கவிதாலயா கிருஷ்ணன் - புருஷோத்தமன்
  • பூஜாவின் தந்தை.
 • சாந்தி ஆனந்தராஜ் - பிரேமா புருஷோத்தமன் (தாய்)

துணை கதாபாத்திரம்[தொகு]

 • சௌமியா சாரதா (2018-2019) → சுனிதா (2019) - சாக்ஷி மருதநாயக்கம்
  • இந்த தொடரின் வில்லி, அனுவின் நண்பி.
 • சசீந்தர் புஷ்பலிங்கம் - கணேஷ்

முந்தைய கதாபாத்திரம்[தொகு]

சிறப்பு தோற்றம்[தொகு]

 • நதியா
 • அனுராதா - நீதிபதி சிவகாமி

மகாசங்கம்[தொகு]

இந்த தொடர் மே 13, 2019 முதல் மே 19 முதல் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடருடன் ஒரு வாரம் சிறப்பு மகாசங்கம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஒளிபரப்பு நேரம் மாற்றம்[தொகு]

இந்த தொடர் முதல் முதலில் ஏப்ரல் 9, 2018 அன்று பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடர் ஒளிபரப்பான நாள் முதலில் இன்று வரை மதிய நேர தொடர்களில் அதிகளவு மக்களால் பார்க்கப்படும் தொடர்களில் முதல் இடம் இருக்கும் காரணத்தால் 18 மார்ச்சு 2019 முதல் இவ் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் கல்யாணப்பரிசு 2 என்ற தொடர் ஒளிபரப்பானது. இந்த தொடர் ஆகஸ்ட் 5, 2019 முதல் இரவு 7 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
9 ஏப்ரல் 2018 - 16 மார்ச்சு 2019
திங்கள் - சனி
15:00 1-277
18 மார்ச்சு 2019 – 3 ஆகஸ்ட் 2019
திங்கள் - சனி
21:00 278-396
5 ஆகஸ்ட் 2019 - ஒளிபரப்பில்
திங்கள் - சனி
19:00 397-

மறுதயாரிப்பு[தொகு]

இந்த தொடர் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகின்றனது.

மொழி தலைப்பு வடிவம் அலைவரிசை ஆண்டு நேரம்
தமிழ் ரோஜா சன் தொலைக்காட்சி 9 ஏப்ரல் 2018 திங்கள் - சனி இரவு 9 மணிக்கு
கன்னடம் செவ்வந்தி மறுதயாரிப்பு உதயா தொலைக்காட்சி 25 பிப்ரவரி 2019 திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணிக்கு
தெலுங்கு ரோஜா மறுதயாரிப்பு ஜெமினி தொலைக்காட்சி 11 மார்ச்சு 2019 திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணிக்கு

மொழி மாற்றம்[தொகு]

இந்த தொடர் தெலுங்கு மொழியில் பிருந்தாவனம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 22 ஜூன் 2020 முதல் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிறது.

நாடு மொழி அலைவரிசை தலைப்பு ஒளிபரப்பு பகுதிகள்
இந்தியா தெலுங்கு ஜெமினி தொலைக்காட்சி బృందావన్ 22 ஜூன் 2020 - ஒளிபரப்பில்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2019 கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் 2019 சிறந்த தொடர் நாயகி பரிந்துரை
சிறந்த அறிமுக நடிகை பிரியங்கா நல்கார் பரிந்துரை
2019 சன் குடும்பம் விருதுகள் 2019 சிறந்த நாயகி பிரியங்கா நல்கார் வெற்றி
சிறந்த ஜோடி சிபு சூர்யன் & பிரியங்கா பரிந்துரை
சிறந்த புகழ்பெற்ற தொடர் ரோஜா வெற்றி
சிறந்த நாயகன் கதாபாத்திரம் சிபு சூர்யன் பரிந்துரை
பிரபலமான கதாநாயகன் சிபு சூர்யன் வெற்றி
பிரபலமான ஜோடி சிபு சூர்யன் & பிரியங்கா வெற்றி
சிறப்பு விருது வடிவுக்கரசி வெற்றி
சிறந்த சகோதரன் கதாபாத்திரம் வெங்கட் ரங்கநாதன் பரிந்துரை
சிறந்த நகைச்சுவையாளர் பெண் ரம்யா வெற்றி
சிறந்த இளம் வில்லி கதாபாத்திரம் ஷாமிலி சுகுமார் வெற்றி
சிறந்த மாமியார் கதாபாத்திரம் காயத்ரி வெற்றி
சிறந்த இயக்குனர் சக்தி செல்வம் பரிந்துரை
சிறந்த படத்தொகுப்பாளர் கண்ணன் வெற்றி
2020 ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2020 சிறந்த தொடர் ரோஜா வெற்றி

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7 மணி தொடர்கள்
Previous program ரோஜா
(5 ஆகஸ்ட் 2019 - ஒளிபரப்பில்)
Next program
அழகு
(18 மார்ச்சு 2019 - 3 ஆகஸ்ட் 2019)
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9 மணி தொடர்கள்
Previous program ரோஜா
(18 மார்ச்சு 2019 - 3 ஆகஸ்ட் 2019)
Next program
லட்சுமி ஸ்டோர்ஸ்
(24 திசம்பர் 2018 – 16 மார்ச்சு 2019)
ரன்
(5 ஆகஸ்ட் 2019 - 14 செப்டம்பர் 2019)
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி பிற்பகல் 3 மணி தொடர்கள்
Previous program ரோஜா
(9 ஏப்ரல் 2018 - 16 மார்ச்சு 2019)
Next program
வள்ளி
(7 திசம்பர் 2012 – 2018)
கல்யாணப்பரிசு 2
(18 மார்ச்சு 2019 - ஒளிபரப்பில்)