எதிர்நீச்சல் (தொலைக்காட்சித் தொடர்)
எதிர்நீச்சல் | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
எழுத்து | திருச்செல்வம் வசனம் ஸ்ரீவித்யா |
திரைக்கதை | திருச்செல்வம் |
இயக்கம் | திருச்செல்வம் |
நடிப்பு | மதுமிதா எச் சபரி பிரசாந்த் கனிகா பிரியதர்ஷினி ஹரிப்ரியா இசை ஜி. மாரிமுத்து |
முகப்பு இசை | ஸ்ரீநிவாஸ் |
முகப்பிசை | விடியல் தேடும் விண்மீன் பெண்ணே பாடியவர்கள் சரண்யா சீனிவாசு ஸ்ரீநிதி |
பின்னணி இசை | "பின்னணி இசை" செல்வம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 744 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு | ஸ்ரீவித்யா |
தயாரிப்பாளர்கள் | திருச்செல்வம் |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
ஒளிப்பதிவு | சந்தானம் |
தொகுப்பு | அரவிந்த் அன்பழகன் |
படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | சன் என்டர்டெயின்மெண்ட் திருசெல்வம் தியேட்டர்ஸ் |
விநியோகம் | சன் நெக்ட்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 7 பெப்ரவரி 2022 8 சூன் 2024 | –
எதிர்நீச்சல் என்பது 2022 ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சிறந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் திருசெல்வம் தியேட்டர்ஸ் சார்பில் திருச்செல்வம்[1] என்பவர் தயாரிப்பு, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.[2][3][4]
இந்த தொடரின் கதை ஜனனி என்ற இளம் பெண் தனது தந்தையின் லட்சியத்திற்காக புகுந்தவீட்டில் எதிர்கொள்ளும் போராட்டங்களை சொல்கிறது. இதில் மதுமிதா எச், சபரி பிரசாந்த், கனிகா,[5][6][7][8][9][10] பிரியதர்ஷினி, ஹரிப்ரியா இசை, ஜி. மாரிமுத்து, சத்தியப்பிரியா, கமலேஷ், கீர்த்தனா, சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன், பம்பாய் ஞானம்[11][12] மற்றும் பாரதி கண்ணன் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் பெப்ரவரி 7, 2022 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு ஒளிபரப்பாகி, 744 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
நடிகர்கள்
[தொகு]- மதுமிதா எச் - ஜனனி
- கனிகா - ஈஸ்வரி
- பிரியதர்ஷினி - ரேணுகா
- ஹரிப்ரியா இசை - நந்தினி
- ஜி. மாரிமுத்து - ஆதி குணசேகரன்
- சபரி பிரசாந்த் - சக்திவேல்
- கமலேஷ் - ஞானசேகரன்
- விபூ ராமன் - கதிர்வேல்
- சத்தியப்பிரியா - விசாலாட்சி
- சத்யா தேவராஜன் - ஆதிரை செல்வி
- பம்பாய் ஞானம் - பட்டம்மாள்
- திருச்செல்வம் - ஜீவானந்தம்
- விமல் - கரிகாலன்
- காயத்ரி கிருஷ்ணன் - ஜான்சி ராணி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thiruselvam directed TV show 'Ethir Neechal' to launch soon". The Times of India (in ஆங்கிலம்).
- ↑ "கோலங்கள் தொடர் இயக்குநர் திருச்செல்வத்தின் புதிய தொடர்". dinamani.com.
- ↑ "Director Thiruselvam making comeback to Tamil TV with Ethir Neechal". news18.com (in ஆங்கிலம்).
- ↑ "மீண்டும் தனது சீரியல் அத்தியாயத்தை தொடங்கிய பிரபல சின்னத்திரை இயக்குநர்!". tamil.news18.com.
- ↑ "சன் டிவி சீரியலில் நடிக்கும் அஜித் பட நடிகை - யார் தெரியுமா?". tamil.news18.com.
- ↑ "தேவயானி மாதிரி இவரும் ஹிட் ஆவாரா? சன் டி.வி சீரியலில் அஜித் ஹீரோயின் ரீ என்ட்ரி!". The Indian Express.
- ↑ "தமிழ் தொடரில் நடிக்கும் நடிகை கனிகா". m.dinamalar.com.
- ↑ "சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு சீரியலில் நடிக்க வரும் அஜித் ஹீரோயின்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் கூட்டம்!". news18.com.
- ↑ "Actress Kaniha Makes TV Debut With Thiruselvam Directorial Ethir Neechal". news18.com (in ஆங்கிலம்).
- ↑ "Actor Kanika Returns to Small Screen After 14 years With Sun TV's Ethir Neechal". news18.com (in ஆங்கிலம்).
- ↑ "Gnanam Balasubramanian To Return on TV After a Decade With This Serial". news18.com (in ஆங்கிலம்).
- ↑ "நீண்ட இடைவேளைக்கு பின் ரீ என்ட்ரி தரும் பாம்பே ஞானம்". m.dinamalar.com.
வெளி இணைப்புகள்
[தொகு]- சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்
- 2020களில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2022 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2024 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்