ரன் (2019 தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரன்
ரன் (2019 தொலைக்காட்சித் தொடர்).jpg
வகைபரபரப்பு
காதல்
மருத்துவம்
நாடகம்
இயக்குனர்செல்வா (1-86)
கே. ராஜீவ் பிரசாந்த் (87-ஒளிபரப்பில்)
நடிப்பு
முகப்பிசைஞர்விக்ரம்
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்மொழி
சீசன்கள்1
எபிசோடுகள் எண்ணிக்கை197
தயாரிப்பு
ஒளிப்பதிவாளர்பி.பாலகுமாரன்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்விகடன் டெலிவிஸ்டாஸ்
ஒளிபரப்பு
சேனல்சன் தொலைக்காட்சி
விகடன் டிவி
ஒளிபரப்பான காலம்5 ஆகத்து 2019 (2019-08-05) –
31 மார்ச்சு 2020 (2020-03-31)
வெளியிணைப்புகள்
இணையதளம்

ரன் என்பது சன் தொலைக்காட்சியில் 5 ஆகத்து 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, செப்டம்பர் 16, 2019ஆம் ஆண்டு முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான திரில்லர் காதல் மற்றும் மருத்துவம் நிறைந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை விகடன் டெலிவிஸ்டாஸ் என்ற நிறுவனம் தயாரிக்க,[1] பிரபல இயக்குனர் செல்வா மற்றும் கே. ராஜீவ் பிரசாந்த் ஆகியோர்கள் தொடரை இயக்கியுள்ளார்.

தெய்வமகள் புகழ் கிருஷ்ணா என்பவர் சக்தி என்ற காதாபாத்திரத்திலும் நெஞ்சம் மறப்பதில்லை தொடர் புகழ் சரண்யா என்பவர் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அத்தியாயம் 87 முதல் இவருக்கு பதிலாக நடிகை சாயா சிங் என்பவர் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர்களுடன் நிழல்கள் ரவி, அஸ்வந்த் திலக், ஸ்ரீ துர்கா, நவ்யா சுவாமி, சசிகலா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2] இந்த தொடர் மார்ச் 31, 2020 ஆம் ஆண்டு 197 அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

திவ்யா குடும்பத்தினர்[தொகு]

  • நிழல்கள் ரவி - நந்தகிருஷ்ணன்
  • பரமோதினி - காயத்திரி (தாய்)
  • ரிந்தியா - ஷாலினி
  • மைதிலி - ரம்யா
  • சியாம் சுந்தர் - சேகர் (ஷாலினியின் கணவர்)
  • ராஜ்கபூர் - செல்வநாயகம்
  • சத்யப்ரியா -

சக்தி குடும்பத்தினர்[தொகு]

  • ஸ்ரீ துர்கா - லோகேஸ்வரி
  • ஸ்ரீ கிருஷ்ணா கௌசிக் - சந்திரன்

துணை கதாபாத்திரம்[தொகு]

ஒளிபரப்பு நேரம் மாற்றம்[தொகு]

இந்த தொடர் முதலில் ஆகத்து 5, 2019 முதல் செப்டம்பர் 14, 2019 ஆம் ஆண்டு வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. தற்பொழுது இந்த தொடர் செப்டம்பர் 16, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடர் ஒளிபரப்பானது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
5 ஆகத்து 2019 - 14 செப்டம்பர் 2019
திங்கள் - சனி
21:00 1-34
14 செப்டம்பர் 2019 - 31 மார்ச்சு 2020
திங்கள் - சனி
22:00 35-197

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2019 சன் குடும்பம் விருதுகள் 2019 சிறந்த நாயகன் கதாபாத்திரம் கிருஷ்ணா பரிந்துரை
பிரபலமான கதாநாயகன் கிருஷ்ணா வெற்றி
ரீல் மற்றும் ரியல் ஜோடி விருது கிருஷ்ணா & சாயா சிங் வெற்றி
சிறந்த வில்லன் கதாபாத்திரம் ராஜ்கபூர் பரிந்துரை
சிறந்த துணைக் கதாபாத்திரம் ஆண் அஸ்வந்த் திலக் பரிந்துரை

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 10 மணி தொடர்கள்
Previous program ரன்
(16 செப்டம்பர் 2019 - 31 மார்ச்சு 2020)
Next program
அருந்ததி
(13 மே 2019 – 14 செப்டம்பர் 2019)
-
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9 மணி தொடர்கள்
Previous program ரன்
(5 ஆகஸ்ட் 2019 - 14 செப்டம்பர் 2019)
Next program
ரோஜா
(18 மார்ச்சு 2019 - 3 ஆகஸ்ட் 2019)
லட்சுமி ஸ்டோர்ஸ்
(16 செப்டம்பர் 2019 - 21 செப்டம்பர் 2019)