மகராசி (தொலைக்காட்சித் தொடர்)
மகராசி | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
எழுத்து | முத்துலட்சுமி ராகவன் கதை கே. உதயம் |
இயக்கம் | எஸ். பி. இராஜ்குமார் (1-80) என். சுந்தரேஸ்வரன் (81-) |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
தயாரிப்பு | |
ஒளிப்பதிவு | ஆனந்த் ஜீவா சி. எம். மூவேந்தர் |
தொகுப்பு | கே.ப மகேஷ் பாபு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | சன் என்டர்டெயின்மெண்ட் சித்திரம் இசுடியோசு |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 21 அக்டோபர் 2019 ஒளிபரப்பில் | –
Chronology | |
முன்னர் | நிலா |
மகராசி என்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் சித்திரம் இசுடியோசு ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குனர் எஸ். பி. இராஜ்குமார்[2] மற்றும் என். சுந்தரேஸ்வரன் ஆகியோர் இயக்கியுள்ளார்கள்.
இந்த தொடரில் திவ்யா ஸ்ரீதர், ஸ்ரிதிகா,[3] எஸ்.எஸ்.ஆர். ஆர்யான், சிறீரஞ்சனி, ராம்ஜி, விஜய்,ரியாஸ் கான், காயத்ரி யுவராஜ், மகாலட்சுமி போன்ற பலர் போன்ற பலர் நடிக்கிறார்கள். இந்த தொடர் அக்டோபர் 21, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
கதை சுருக்கம்[தொகு]
இந்த தொடரின் கதை ஹரித்துவாரில் பிறந்து வளர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒரு பாரதி என்ற பெண். சிலரால் தேடப்படுகின்றார். அவர்களிடமிருந்து தப்பித்து தமிழ்நாடு செல்லும் புகையிரத்தித்தில் வருகின்றார். அங்கு தமிழை சந்திக்கின்றார். சந்தர்ப்ப சூழ்நிலையால் தமிழின் மனைவி போன்று நடிக்க நெருடுகிறது. ஆனால், புகுந்த வீட்டில் இவள் மருமகள் அல்ல என்கிற உண்மையை ஏற்படி தெரியவருகின்றது. இவர்களுக்குள் இருக்கும் மர்ம கதை என்பது தான் என்ன?
நடிகர்கள்[தொகு]
முதன்மை கதாபாத்திரம்[தொகு]
- ஸ்ரிதிகா (414-) - சக்தி (முக அறுவை சிகிச்சைக்கு பிறகு)
- திவ்யா ஸ்ரீதர் (1–413) - பாரதி புவியரசன்
- எஸ்.எஸ்.ஆர். ஆர்யான் - புவியரசன்
- மௌனிகா தேவி[4] - மல்லிகா புவியரசன்
- விஜய் - தமிழரசன்
துணை கதாபாத்திரம்[தொகு]
- பிரவீனா (1-137) → சிறீரஞ்சனி[5] (138-) - செண்பகம் சிதம்பரம்
- ரியாஸ் கான் - பாண்டியன்
- தீபன் சக்ரவர்த்தி (1-137) → பூவிலங்கு மோகன் (138-) - சிதம்பரம்
- காயத்ரி யுவராஜ் (1-31) → திவ்யா கணேஷ் (34-137) → வனிதா ஹரிஹரன் (138–305) → அஷ்ரிதா ஸ்ரீதாஸ் (305-) - ராகினி தமிழரசன்
- மகாலட்சுமி - அன்பரசி
- அஸ்வினி - கௌதமி
- ராம்ஜி - சிவமணி
- விஷாலி - காயத்ரி
- மதுமிதா - இளவரசி
- தீபன் சக்கரவர்த்தி
- சிவாஜி மனோ
- ரவிசங்கர் - கதிரவன்
- சினேகா நம்பியார் (1–111) → ஸ்வேதா (112-) - பானுமதி கதிரவன்
- விஜய் ஆனந்த் - கெத்து மனோகர்
- ஓர்மை பாஸ் - வெண்மதி
- மிதுன் ராஜ்
- முதுகலை
- ஹரிஷ்
- யாழினி
நடிகர்களின் தேர்வு[தொகு]
இந்த தொடரில் கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்த 'திவ்யா ஸ்ரீதர்' என்பவர் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[6] அத்தியாயம் 414 முதல் பிரபல தொலைக்காட்சி நடிகை ஸ்ரிதிகா என்பவர் சக்தி மற்றும் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ஆர். ஆர்யான் என்பவர் புவி என்ற கதாபாத்திரத்திலும் நடிகை சிறீரஞ்சனி என்பவர் தமிழ் அரசு மற்றும் புவியின் தாயாக செண்பகம் என்ற கதாபாத்திரத்திலும் நடிக்க, ராம்ஜி, விஜய்,ரியாஸ் கான், காயத்ரி யுவராஜ், மகாலட்சுமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஒளிபரப்பு நேரம்[தொகு]
இந்த தொடர் அக்டோபர் 21, 2019 முதல் 24 ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது.26 ஏப்ரல் 2021 முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஒளிபரப்பான திகதி | நாட்கள் | நேரம் | அத்தியாயங்கள் |
---|---|---|---|
21 அக்டோபர் 2019 - 24 ஏப்ரல் 2021 | 14:30 | 1-372 | |
26 ஏப்ரல் 2021 - ஒளிபரப்பில் | 12:00 | 373- |
மதிப்பீடுகள்[தொகு]
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2019 | 4.8% | 5.07% |
2020 | 5.0% | 5.90% |
3.7% | 4.3% | |
2021 | 2.4% | 3.90% |
1.86% | 3.10% | |
1.90% | 3.13% | |
2.1% | 3.45% | |
2022 | 0.0% | 0.0% |
0.0% | 0.0% |
மொழி மாற்றம்[தொகு]
நாடு | மொழி | அலைவரிசை | தலைப்பு | ஒளிபரப்பு | அத்தியாயங்கள் |
---|---|---|---|---|---|
இந்தியா | கன்னடம் | உதயா தொலைக்காட்சி | ஈ பந்தனா (ಈ ಬಂಧನ) |
5 ஏப்ரல் 2021 - ஒளிபரப்பில் | |
வங்காளம் | சன் வங்காள | பிதிலிபி (বিধিলিপি) |
5 ஏப்ரல் 2021 – 9 மே 2021 |
சர்வதேச ஒளிபரப்பு[தொகு]
- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் சன் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணையம் அலைவரிசை மற்றும் சன் நெக்ட்ஸ், எம்எக்ஸ் பிளேயர் போன்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
- இந்த தொடர் இலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காட்சி சேவையான சக்தி தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "New show Magarasi to go on air from October 21". https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/new-show-magarasi-to-go-on-air-from-october-21/articleshow/71689629.cms.
- ↑ "Rajkumar goes from cinema to telly". 15 October 2019. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/141019/rajkumar-goes-from-cinema-to-telly.html.
- ↑ "Srithika Saneesh joins the cast of Magarasi, replaces actress Divya Sridhar". https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/srithika-saneesh-joins-the-cast-of-magarasi-replaces-actress-divya-sridhar/articleshow/83503394.cms.
- ↑ "மகராசி சீரியல் மெளனிகாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! வைரலாகும் புகைப்படம்". https://tamil.samayam.com/tv/news/magarasi-serial-actress-mounika-gets-engaged/articleshow/82399944.cms.
- ↑ "அலைபாயுதே மாதவன் அண்ணி.. சினிமா சீரியலில் மோஸ்ட் வான்டட் அம்மா.. மகராசி சீரியல் செண்பகம் பயோகிராபி!". https://tamil.indianexpress.com/lifestyle/suntv-magarasi-serial-shenbegam-actress-sri-ranjani-biography-317283/.
- ↑ "சன் டிவி மகராசி தொடரில் இருந்து விலகும் திவ்யா ஸ்ரீதர்... புதிய பாரதி இவர் தான்!". https://tamil.news18.com/news/entertainment/television-srithika-to-replace-divya-sridhar-in-sun-tv-magarasi-serial-ghta-scs-479721.html.
வெளி இணைப்புகள்[தொகு]
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை மதியம் 12:00 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | மகராசி |
அடுத்த நிகழ்ச்சி |
நிலா |
- |
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை மதியம் 2:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | மகராசி |
அடுத்த நிகழ்ச்சி |
நிலா |
தாலாட்டு
|
- சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தொலைக்காட்சியில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம்