பல ஒளிப்படக்கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல ஒளிப்படக்கருவி (Multiple-camera) என்பது திரைப்படத் தயாரித்தல் மற்றும் காணொளி தயாரிப்பின் ஒரு முறையாகும். பல ஒளிப்படக்கருவி மூலம் அல்லது தொழில்முறை காணொளி ஒளிப்படக்கருவி மூலம் ஒரே நேரத்தில் திரைப்பட காட்சியை பதிவு செய்கின்றன அல்லது ஒளிபரப்புகின்றன.

திரைப்படம்[தொகு]

பெரும்பாலான திரைப்படங்கள் ஒற்றை ஒளிப்படக்கருவி அமைப்பைப் பயன்படுத்துகின்றன.[1] ஆனால் சமீபத்திய தசாப்தங்களில் பெரிய திரைப்படங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஒளிப்படக்கருவி யை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன, வழக்கமாக இரண்டு ஒளிப்படக்கருவி ஒரே நேரத்தில் ஒரே அமைப்பை படமாக்குகின்றன. இருப்பினும், இது தொலைக்காட்சி அர்த்தத்தில் உண்மையான பல ஒளிப்படக்கருவி அமைப்பு அல்ல.

தொலைக்காட்சி[தொகு]

நேரடி செய்தி வாசிப்பு நிகழ்ச்சியில் பல ஒளிப்படக்கருவி பயன்படுத்தப்படும் முறை.

பல ஒளிப்படக்கருவி அமைப்புகள் நேரடி தொலைக்காட்சியின் இன்றியமையாத பகுதியாகும்.[2] பல ஒளிப்படக்கருவி முறை இயக்குனருக்கு ஒவ்வொரு படபிபின் மீதும் குறைந்த கட்டுப்பாட்டைக் கொடுக்கிறது, ஆனால் ஒற்றை ஒளிப்படக்கருவி அமைப்பைக் காட்டிலும் வேகமாகவும் குறைவாகவும் இருக்கும்.

தொலைக்காட்சி துறையில் விளையாட்டு நிகழ்வுகள், செய்திகள், நாடகத் தொடர்கள், பேச்சு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பல ஒளிப்படக்கருவி பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல_ஒளிப்படக்கருவி&oldid=3070454" இருந்து மீள்விக்கப்பட்டது