திருமகள் (தொலைக்காட்சித் தொடர்)
திருமகள் | |
---|---|
![]() | |
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
எழுதியவர் | ஜெகன் மோகன் டி.சந்திரசேகர் |
இயக்குனர் | ஹரிஷ் ஆதித்யா |
நடிப்பு |
|
முகப்பிசை | உன்னை போலவே சொந்த பூமியில் |
நாடு | இந்தியா |
மொழிகள் | தமிழ் |
சீசன்கள் | 1 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | டி.டி.ஜி. தியாகசரவணன் செல்வி தியாகராஜன் |
ஒளிப்பதிவாளர் | எம்.ஆர்.சரவன்குமார் |
தொகுப்பாளர்கள் | சுபாஷ் பி. விஸ்வா டி. அருண் |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | சன் என்டர்டெயின்மெண்ட் சத்ய ஜோதி படங்கள் |
ஒளிபரப்பு | |
சேனல் | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 12 அக்டோபர் 2020 ஒளிபரப்பில் | –
திருமகள் என்பது சன் தொலைக்காட்சியில் 12 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10:30 மணிக்கு மற்றும் பகல் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரில் ஹரிகா சாது, சுரேந்தர் சண்முகம், சாமிதா ஸ்ரீகுமார்,[3] ஜீவா ரவி, பிரகாஷ், ஜானகி, ரித்திகா வெங்கட், ரேவதி சங்கர், ராஜேந்திரன், ரேகா சுரேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
நடிகர்கள்[தொகு]
முதன்மை கதாபாத்திரம்[தொகு]
- ஹரிகா சாது - அஞ்சலி சந்திரசேகர்
- சுரேந்தர் சண்முகம் - ராஜா பரமேஸ்வரன்
- சாமிதா ஸ்ரீகுமார் - ஐஸ்வர்யா பரமேஸ்வரன்
அஞ்சலி குடும்பத்தினர்[தொகு]
- ரேகா சுரேஷ் - பவானி சந்திரசேகர் (அம்மா)
- ராஜேந்திரன் - சந்திரசேகர் (அப்பா)
ராஜா குடும்பத்தினர்[தொகு]
- சாமிதா ஸ்ரீகுமார் - ஐஸ்வர்யா பரமேஸ்வரன்
- ஜீவா ரவி - பரமேஸ்வரன்
- பிரகாஷ் ராஜன் - கேசவன் (ஐஸ்வர்யாவின் சகோதரன்)
- ஜானகி தேவி - கௌரி கேசவன்
- தமிழ் ரித்விகா - மகாதி (கேசவன் மற்றும் கௌரியின் மகள்)
- கோவை பாபு - மாணிக்கம்
- மீனாட்சி - சுலக்சனா மாணிக்கம்
- சுஷ்மா நாயர் - பிரகதி
- வெங்கட் சுபா - ஜாமீன் அய்யா
- ரேவதி சங்கர் - ஜாமீன் ராஜலட்சுமி
சிறப்பு தோற்றம்[தொகு]
- நிஷா கிருஷ்ணன் (அத்தியாயம் 20)
- கணேஷ் வெங்கட்ராமன் (அத்தியாயம் 20)
நடிகர்களின் தேர்வு[தொகு]
இந்த தொடரில் கதாநாயகியாக தெலுங்கு தொலைக்காட்சி நடிகை 'ஹரிகா சாது' என்பவர் 'அஞ்சலி' என்ற கதாபாத்திரம் மூலம் தமிழ்த் தொலைக்காட்சித் துறைக்கு அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக என்ற தொடரில் நடித்த 'சுரேந்தர் சண்முகம்' என்பவர் 'ராஜா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ராஜாவின் தாய் காதாபாத்திரத்தில் பிரபல சின்னத்திரை நடிகை 'சாமிதா ஸ்ரீகுமார்' என்பவர் என்ற எதிர் மறை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் 'தமிழ் ரித்விகா' மற்றும் 'சுஷ்மா நாயர்' ஆகியோர் ராஜாவின் முறை பெண்ணாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜீவா ரவி, பிரகாஷ், ஜானகி, ரித்திகா வெங்கட், ரேவதி சங்கர், ராஜேந்திரன், ரேகா சுரேஷ் போன்ற பலர் நடித்துள்ளனர்.
ஒளிபரப்பு நேரம் மாற்றம்[தொகு]
இந்த தொடர் முதலில் 12 அக்டோபர் 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் நவம்பர் 30, 2020 முதல் இரவு 10 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பாகிறது.பின்னர் பிப்ரவரி 13, 2021 முதல் இரவு 10:30 மணிக்கும் மற்றும் பகல் 12:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பாகிறது.
ஒளிபரப்பான திகதி | நாட்கள் | நேரம் | அத்தியாயங்கள் |
---|---|---|---|
12 அக்டோபர் 2020 - 28 நவம்பர் 2020 | 13:30 | 1-39 | |
30 நவம்பர் 2020 - ஒளிபரப்பில் | 22:00 | 40-99 | |
14 பிப்ரவரி 2021 - ஒளிபரப்பில் | 12:30 | 100- | |
14 பிப்ரவரி 2021 - ஒளிபரப்பில் | 10:30 | 100- |
மதிப்பீடுகள்[தொகு]
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2020 | 4.6% | 5.4% |
4.2% | 4.7% |
சர்வதேச ஒளிபரப்பு[தொகு]
- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் சன் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணையம் அலைவரிசை மற்றும் சன் நெக்ட்ஸ், எம்எக்ஸ் பிளேயர் போன்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Thirumagal(2020) Serial Sun Tv Cast & Crew, Wiki, Real Name, Episodes". பார்த்த நாள் 2020-10-14.
- ↑ "திருமகள் : புதிய தொடர்". பார்த்த நாள் 2020-10-14.
- ↑ "Shamitha Shreekumar (Actress) Profile with Age, Bio, Photos and Videos". பார்த்த நாள் 2020-10-14.
வெளி இணைப்புகள்[தொகு]
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி பகல் 12:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | திருமகள் | அடுத்த நிகழ்ச்சி |
நிலா (13 பிப்ரவரி 2021– ) |
- |
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 10:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | திருமகள் | அடுத்த நிகழ்ச்சி |
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 10 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | திருமகள் | அடுத்த நிகழ்ச்சி |
கண்மணி (2 நவம்பர் 2020 – 28 நவம்பர் 2020) |
சித்தி 2 |
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை பிற்பகல் 1:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | திருமகள் (12 அக்டோபர் 2020 - 28 நவம்பர் 2020) |
அடுத்த நிகழ்ச்சி |
சன் செய்திகள் | பாண்டவர் இல்லம் |