வினோதினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வினோதினி
மற்ற பெயர்கள்ஸ்வேதா, பேபி லட்சுமி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1982–தறொபோது வரை

வினோதினி (Vinodhini) என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னட மொழிப் படங்கள் மற்றும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிப்பதற்கு முன்பு முன்னணி மற்றும் துணை பாத்திரங்களில் நடித்தார். [1] கன்னட படங்களில் ஸ்வேதா என்று அழைக்கபட்டார்.

தொழில்[தொகு]

வினோதினி குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். மணல் கயிறு, புதிய சகாப்தம் மற்றும் மண்ணுக்குள் வைரம் உள்ளிட்ட படங்களில் தோன்றினார். [1] 1992 இல், பாலு மகேந்திரா இயக்கிய வண்ண வண்ண பூக்கள் படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிதார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிகரமாக அமைந்தது. இது தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது மேலும் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. [2] என்றாலும் இப்படம் வினோதினியின் திரைப்பட வாழ்க்கையை உயர்த்துவதில் தோல்வியுற்றது. [3] அந்த ஆண்டு, இவர் மலையாள திரைப்படத்தில் சூர்யா மானசம் மற்றும் கன்னட திரையுலகில் சைத்ரதா பிரேமாஞ்சலி படங்களின் வழியாக அறிமுகமானார். அங்கு இவர் ஸ்வேதா என்ற பெயரில் அறிமுகமானார். இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. [4] [5] பிறகு பாலு மகேந்திராவின் மறுபடியும், விசுவின் பட்டுக்கோட்டை பெரியப்பா, ராம நாராயணன்னின் வாங்க பார்ட்னர் வாங்க, [6] கே. எஸ். ரவிக்குமாரின் இரண்டு படங்களான, சூரியன் சந்திரன் மற்றும் முத்துக்குளிக்க வாரீயளா போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்களில் பெரும்பாலும் இரண்டாம் நிலை பாத்திரங்களிலேயே நடித்தார். 1990 களின் நடுப்பகுதியில் கன்னட படங்களில் தனது கவனத்தை செலுத்தினார், அங்கு இவர் தொடர்ந்து முக்கிய வேடங்களில் நடித்தார். 90 களின் பிற்பகுதியில் மீண்டும் தமிழ் படங்களில் பணியாற்றிய இவர் சிறிய துணை வேடங்களிலும் கௌரவ வேடங்களிலுமே தோன்றினார். இவர் சிறிய பாத்திரத்தில் தோன்றிய படங்களில் பிரவீன் காந்தியின் அதிரடி திரைப்படமான ரட்சகன், [7] சுந்தர் சி. இன் நகைச்சுவை படமான உனக்காக எல்லாம் உனக்காக, [8] என். மாத்ருபூததின் புதிரா புனிதாமா ஆகியவை அடங்கும் . [9]

வினோதினி விரைவில் தொலைக்காட்சி தொடர்களான சித்தி, அகல் விளக்கு [1] மற்றும் கண்ணாடிக் கதவுகள், [10] கிரேசி மோகனின் நகைச்சுவைத் தொடரான விடாது சிரிப்பு போன்றவற்றில் நடிக்கத் தொடங்கினார் . [11] தவிர, இவர் எட்டு ஆண்டுகளாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தினார். 2005 ஆம் ஆண்டில் கஸ்தூரி மான் படத்தில் கதா நாயகியின் ( மீரா ஜாஸ்மின் ) சகோதரியாக துணை வேடத்தின் வழியாக தமிழ் படங்களில் மீண்டும் நடிக்க வந்தார். அதன் விமர்சனத்தில், தி இந்து இந்த படத்தில் இவர் "மிகவும் கவரும் நடிப்பை" அளித்ததாக குறிப்பிடப்பட்டார். [12] பின்னர், இவர் கரு பழனியப்பனின் இரண்டு படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1982 மணல் கயிறு தமிழ் பேபி லட்சுமி குழந்தை நட்சத்தரமாக
1985 புதிய சகாப்தம் சாந்தி தமிழ்
1986 மண்ணுக்குள் வைரம் தமிழ் பேபி லட்சுமி குழந்தை நட்சத்தரமாக
1991 சித்திரைப் பூக்கள் பாரதி தமிழ்
1991 ஆத்தா உன் கோயிலிலே ஈஸ்வரி தமிழ்
1991 என் ஆசை ராசாத்தி ராசாத்தி தமிழ்
1992 வண்ண வண்ண பூக்கள் மணோரஞ்சிதம் தமிழ்
1992 அபிராமி மகாலட்சுமி தமிழ்
1992 அன்னை வயல் தமிழ்
1992 கிழக்கு வீதி தமிழ்
1992 சூரிய மானசம் சுசி மலையாளம்
1992 சிவலர் மைக்கலேல் மலையாளம்
1992 சைத்ததா பிரேமாஞ்சலி அஞ்சு கன்னடம்
1993 மறுபடியும் பிரியா தமிழ்
1993 சூரியன் சந்திரன் தமிழ்
1993 ஆத்மா பாத்திமா தமிழ்
1993 கிஜ்ஜி நாடா கன்னடம்
1993 பொன்னு சம்மி மாயா மலையாளம்
1994 வாங்க பார்ட்னர் வாங்க வைரம் தமிழ்
1994 என் ராஜாங்கம் சுகந்தி தமிழ்
1994 சின்ன மேடம் சித்ரா தமிழ்
1994 பட்டுக்கோட்டை பெரியப்பா தமிழ்
1994 நிஜன் கோட்டீஸ்வரன் மாயா மலையாளம்
1995 கல்யாணம் தமிழ்
1995 இளவரசி தமிழ் கௌரவத் தோற்றம்
1995 முத்து குளிக்க வாரீயளா தமிழ்
1995 தொண்டன் செல்வி தமிழ்
1996 வீட்டுக்குள்ளே திருவிழா கிருஷ்ணவேணி தமிழ்
1996 அழகிய ராவணன் மலையாளம்
1996 ஹெட்டவரு கன்னடம்
1996 கற்பூர கொம்பே யசோதா கன்னடம்
1996 மிண்ணுகு தாரே கன்னடம்
1996 முத்தின ஆலயா கன்னடம்
1997 நோடு பா நம்மூரா கன்னடம்
1997 பதுக்கு ஜாடக பண்டி மாலா கன்னடம்
1997 லட்சுமி மகாலட்சுமி அனிதா கன்னடம்
1997 ரட்சகன் தமிழ்
1997 தடயம் ஜோதி தமிழ்
1998 அக்னி சக்தி கன்னடம்
1999 உனக்காக எல்லாம் உனக்காக அஞ்சலி தமிழ்
2000 புதிரா புனிதமா தமிழ்
2001 கொட்டிகோபா கன்னடம்
2001 நம்ம சம்சாரா ஆந்த்த சாகரா கன்னடம்
2004 குடும்பா மேகா கன்னடம்
2005 கஸ்தூரி மான் பிரேமா தமிழ்
2008 பிரிவோம் சந்திப்போம் விசாலாட்சியின் அண்டைவீட்டார் தமிழ்
2011 சதுரங்கம் சந்தியாவின் மருமகள் தமிழ்
2017 கொஞ்சம் கொஞ்சம் தமிழ்

தொலைக்காட்சி[தொகு]

தொடர் பாத்திரம் அலைவரிசை
உடள் பொருள் ஆனந்தி தூர்தர்ஷன்
சித்தி சாருலதா சன் தொலைக்காட்சி
கண்ணாடிக் கதவுகள் தூர்தர்ஷன்
அகல் விளக்குகள் சன் தொலைக்காட்சி
விடாது சிரிப்பு ஜனகி ஜெயா தொலைக்காட்சி
குடும்பம் சன் தொலைக்காட்சி
விரோதி
பெண் பொம்மைகள்
சுகவாசம் (மலையாளம்)
சொர்கம் சன் தொலைக்காட்சி
வா வத்தியரே வா பாலிமர் தொலைக்காட்சி
சிரி சிரி கிரேசி ஜனகி கலைஞர் தொலைக்காட்சி
அக்னி நட்ச்சத்திரம் நளினி சன் தொலைக்காட்சி
ரோஜா பச்சைகிளி / தங்கபவுணு

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோதினி&oldid=3088419" இருந்து மீள்விக்கப்பட்டது