மறுபடியும் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மறுபடியும்
இசைஇளையராஜா
நடிப்புரேவதி
நிழல்கள் ரவி
அரவிந்த சாமி
ரோகிணி
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
படத்தொகுப்புபாலு மகேந்திரா
கலையகம்அசுவின் இன்டர்நேசனல்
வெளியீடு14 சனவரி 1993
ஓட்டம்139 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மறுபடியும் (Marupadiyum) 1993 இல் இந்தியாவில் வெளியான நாடகத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பாலுமகேந்திரா எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரேவதி, நிழல்கள் ரவி, அரவிந்த் சாமி மற்றும் ரோகினி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1992 ல் வெளியான "ஆர்த்" எனும் ஹிந்தி திரைப்படத்தின் மீள் உருவாக்கமாகும். இத்திரைப்படம் துளசியின் திருமணத்தின் பின் அவள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டது. இத்திரைப்படம் விமர்சன ரீதியிலும், வியாபார ரீதியிலும் வரவேற்பைப் பெற்றது.இத்திரைப்படத்தில் துளசி எனும் வேடத்தில் நடித்தமைக்காக 41 வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் சிறந்த தமிழ் திரைப்பட நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.[1]

கதைச்சுருக்கம்[தொகு]

துளசி (ரேவதி), முரளிகிருஷ்ணாவை (நிழல்கள் ரவி) திருமணம் செய்திருந்தாள். தனது கணவனுக்கும் கவிதா என்பவருக்கும் இடையில் தவறான உறவு இருப்பதை அறிகிறாள். ஆனால் இருவரும் பிரிய மறுக்கின்றனர். துளசி கணவனைப் பிரிந்ததும் கௌரி சங்கர் (அரவிந்த் சாமி) எனும் வேற்று நபர் துளசிக்கு உதவுவதுடன் ஒரு நல்ல நண்பனாகவும் நடந்து கொள்கின்றான். சில காலத்தின் பிறகு மாற்றாள் கணவனை திருமணம் செய்த குற்ற உணர்ச்சியில் கவிதா மனநலம் குன்றுகிறாள். ஒரு கட்டத்தில் கவிதா முரளிகிருஷ்ணாவை தூக்கி எறிகிறாள். கௌரிசங்கர் துளசிக்கு நெருக்கமான நண்பனாக மாற அதன்பின்னர் தன்னைத் திருமணம் செய்ய வேண்டுகிறான். ஆனால் துளசி அதை நிராகரிப்பதுடன் தனி வழியில் செல்ல முடிவெடுக்கின்றாள்.

நடிகர்கள்[தொகு]

  • ரேவதி- துளசி[2]
  • நிழல்கள் ரவி- முரளி கிருஷ்ணா [2]
  • அரவிந்த் சாமி- கௌரி சங்கர்[3]
  • ரோகிணி - கவிதா[3]
  • துளசியின் நண்பராக வினோதினி
  • சுரேஷாக சுரேஷ் சக்ரவர்த்தி
  • வீட்டு உதவியாக சத்யா
  • டாக்டர் நரசிம்மனாக எல்.ஐ.சி நரசிம்மன்
  • கவிதாவின் தாயாக ஜானகியை டப்பிங் செய்வது
  • துளசியின் நண்பராக வனஜா ராதாகிருஷ்ணன்

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[4] "ஆசை அதிகம்" எனும் பாடல் 'சிந்து பைரவி' இராகத்தில் அமைந்துள்ளது.[5] "எல்லோருக்கும் நல்ல காலம்" எனும் பாடல் 'சுத்த தன்யாசி' [6] எனும் இராகத்திலும் "நலம் வாழ" எனும் பாடல் 'மதுகவுன்'[7] எனும் இராகத்திலும் அமைந்துள்ளது.[8]

தமிழ்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஆசை அதிகம் வச்சு"  இரவி பாரதிஎஸ். ஜானகி 4:59
2. "எல்லோருக்கும் நல்ல காலம்"  வாலிகே. ஜே. யேசுதாஸ் 3:32
3. "எல்லோரும் சொல்லும் பாட்டு"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:53
4. "நலம் வாழ எந்நாளும்"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:59
5. "நல்லதோர் வீணை"  வாலிஎஸ். ஜானகி 4:24

வெளியீடு[தொகு]

இத்திரைப்படம் 14/ஜனவரி/1993 இல் வெளியிடப்பட்டுள்ளது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "My Awards". Revathy.com. Archived from the original on 11 September 2007. பார்க்கப்பட்ட நாள் 12 May 2017.
  2. 2.0 2.1 Surendran, Anusha; Venkatraman, Janane (4 July 2017). "Tamil films are getting more modern, and more misogynistic". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180227170207/http://www.thehindu.com/thread/reflections/tamil-films-are-getting-more-modern-and-more-misogynistic/article19209779.ece. 
  3. 3.0 3.1 Mannath, Malini (22 January 1993). "New meaning". இந்தியன் எக்சுபிரசு: p. 7. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930122&printsec=frontpage&hl=en. 
  4. Ilaiyaraaja. "Marupadiyum (Original Motion Picture Soundtrack) – EP". ஐ-டியூன்ஸ். Archived from the original on 27 June 2018. பார்க்கப்பட்ட நாள் 7 January 2019.
  5. Sundararaman 2007, ப. 125.
  6. Sundararaman 2007, ப. 128.
  7. Sundararaman 2007, ப. 145.
  8. "Director Gari Pellam". Spotify. Archived from the original on 16 February 2021. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
  9. Sundaram, Nandhu (27 June 2018). "From 'Gentleman' to 'Amaravathi' : Revisiting popular films which released 25 years ago". தி நியூஸ் மினிட் இம் மூலத்தில் இருந்து 8 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190108033305/https://www.thenewsminute.com//web/20190108033305/https://www.thenewsminute.com/article/gentleman-amaravathi-revisiting-popular-films-which-released-25-years-ago-83756. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறுபடியும்_(திரைப்படம்)&oldid=3743552" இலிருந்து மீள்விக்கப்பட்டது