சித்திரைப் பூக்கள்
சித்திரைப் பூக்கள் | |
---|---|
இயக்கம் | கண்மணி சுப்பு |
தயாரிப்பு | காமாச்சி தமிழ்மணி யசோதா தமிழ்மணி கே. சிதம்பரம் |
கதை | கண்மணி சுப்பு |
இசை | எம். எஸ். முரளி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எம். வி. ரமகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
கலையகம் | நாச்சியார் மூவிஸ் |
வெளியீடு | பெப்ரவரி 23, 1991 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சித்திரைப் பூக்கள் (Chithirai Pookkal) என்பது 1991 ஆண்டைய தமிழ் காதல் திரைப்படமாகும். கண்மணி சுப்பு இயக்கிய இப்படத்தில் புதுமுகங்களான ஜெயந்த்குமார் மற்றும் வினோதினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஆர். சரத்குமார், ராதாரவி, சார்லி, எஸ். எஸ். சந்திரன், வினு சக்ரவர்த்தி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எம். எஸ். முரளி இசையமைத்தார்.படம் 23 பிப்ரவரி 1991 அன்று வெளியிடப்பட்டது.[1][2][3]
கதை
[தொகு]ஹரி (ஜெயந்த் குமார்) மற்றும் அவரது பெற்றோர்களான ( வினு சக்ரவர்த்தி மற்றும் வாணி) அத்துடன் பாரதி ( வினோதினி ) மற்றும் அவரது பெற்றோர்களான ( எஸ். எஸ். சந்திரன் மற்றும் கோவை சரளா ) உதகமண்டலத்துக் வந்து ஒரே விடுதியில் அறைகள் எடுத்து தங்குகின்றனர். ஹரியும் பாரதியும் முதலில் மோதலில் ஈடுபட்டு பின்னர் காதலிக்கின்றனர். ஆனால் அவர்களின் பெற்றோர் அவர்களின் காதல் விவகாரத்தை அறிந்து அவர்களை சேர்த்துவைக்க மறுத்துவிடுகின்றனர். இதன் பின்னர், காதலர்கள் ஓடிப்போய் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான ஜான்சன் டேவிட் ( ஆர். சரத்குமார் ) அவர்களை சரியான நேரத்தில் காப்பாற்றுகிறி, இளம் காதலர்களுக்கு தஞ்சம் அளிக்கிறார். பின்னர் நடக்கிறது என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.
நடிகர்கள்
[தொகு]- ஜெயந்த் குமார் ஹரியாக
- வினோதினி பாரதியாக
- சரத்குமார் ஜான்சன் டேவிட்டாக
- ராதாரவி லோலாய் காடாக
- சார்லி
- எஸ். எஸ். சந்திரன் பாரதியின் நன்பர் மயில் வாகணமாக
- வினு சக்ரவர்த்தி ஹரியின் தந்தையாக
- கோவை சரளா பாரதியின் தாயாக
- வாணி ஹரியின் தாயாக
- மருத்துவர் நடேசன்
- மாஸ்டர் கிருபா
- ஜோக்கர் துளசி
- கார்மேகம்
இசை
[தொகு]படத்திற்கான பின்னணி இசையையும் பாடல்களுக்கான இசையையும் இசையமைப்பாளர் எம். எஸ். முரளி மேற்கொண்டார். 1991 இல் வெளியான இந்த படத்தின் பாடல் பதிவுகளில், வாலி, இளவேனில், கலைவாணன் கண்ணதாசன், மாருதி, கண்மணி சுப்பு ஆகியோரால் எழுதப்பட்ட பாடல்களுடன் 7 பாடல்கள் உள்ளன.[4][5][6]
வரிசை எண் | பாடல் | பாடகர்(கள்) | காலம் |
---|---|---|---|
1 | "ஆனந்த கீதங்கள்" | உமா ரமணன் | 5:00 |
2 | "அரணம் உன் சன்னிதானம்" | மனோ, உமா ராமணன் | 4:57 |
3 | "டூ யூ லவ் மீ" | மனோ, உமா ராமணன் | 4:17 |
4 | "மந்திர புன்னகை" | மனோ | 4:58 |
5 | "ஒன்னு ரெண்டு மூனு" | மனோ, உமா ராமணன் | 4:10 |
6 | "சங்கீதம் கடல்" | மனோ | 4:02 |
7 | "வாடி மை டியர் லேடி" | மனோ | 5:02 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chithirai Pookkal (1991) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
- ↑ "Filmography of chithirai pookkal". cinesouth.com. Archived from the original on 2010-01-17. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
- ↑ "Find Tamil Movie Chithirai Pookkal". jointscene.com. Archived from the original on 2009-09-26. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
- ↑ "Download Chithirai Pookkal by Murari on Nokia Music". music.ovi.com. Archived from the original on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
- ↑ "MusicIndiaOnline — Chithirai Pookkal(1990) Soundtrack". mio.to. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
- ↑ "Chithirai Pookkal : Tamil Movie". hummaa.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.