ராம நாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராம நாராயணன் [1]
Ramanarayanan.jpg
பிறப்புஏப்ரல் 3, 1949(1949-04-03)
இறப்புசூன் 22, 2014(2014-06-22) (அகவை 65)
மற்ற பெயர்கள்ராமநாராயணன், ராம் நாராயண்
பணிஇயக்குநர், தயாரிப்பாளர்
பெற்றோர்இராமசாமி
மீனாட்சி ஆச்சி
வாழ்க்கைத்
துணை
இராதா (மறைவு)

இராம நாராயணன், (Rama Narayanan, ஏப்ரல் 3, 1949 - சூன் 22, 2014) இந்தியத் திரைத்துறையைச் சார்ந்தவர். தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர். தயாரிப்பு பணிகளையும் செய்துள்ளார். இவரது திரைப்படங்களில் பலவற்றில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. [2] 36 ஆண்டுகளில் 125 திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளது ஓர் உலக சாதனையாகும்.[3] [4] தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். இவர் ஒரு மலேய மொழிப் படத்தை இயக்கியுள்ளார்.[5] சில திரைப்படங்களுக்கு கதையும் எழுதினார்.

திரைப்படங்கள்[தொகு]

  • குட்டிப் பிசாசு (தமிழ், தெலுங்கு, கன்னடம்), சுமை, ஆடிவெள்ளி, சிவப்பு மல்லி, சிங்கக்குட்டி, வேங்கையின் மைந்தன், சிவந்த கண்கள், சூரக்கோட்டை சிங்கக்குட்டி, கந்தா கடம்பா கதிர்வேலா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா ஆகிய திரைப்படங்களில் பணி புரிந்துள்ளார்.

தயாரித்தவை[தொகு]

இயக்கியவை[தொகு]

மரணம்[தொகு]

இராம நாராயணன் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள ஓர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சூன் 22, 2014 அன்று சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூரில் மரணமடைந்தார். [6]

சான்றுகள்[தொகு]

  1. http://filmcircle.com/director-producer-rama-narayanan/
  2. "புதிய படங்களில் மிருகங்களை பயன்படுத்த முடியவில்லை - ராம நாராயணன்". 2013-05-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-01-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. ”கல்பனா” என் 125வது படம் - ராம நாராயணன்
  4. http://cinema.dinamalar.com/tamil-news/9162/cinema/Kollywood/Malayan-language-film-directed-by-Rama-Narayanan!.htm
  5. http://cinema.dinamalar.com/tamil-news/9162/cinema/Kollywood/Malayan-language-film-directed-by-Rama-Narayanan!.htm
  6. "சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் இயக்குநர் ராம நாராயணன் மரணம்; விமானம் மூலம் உடல் சென்னை கொண்டுவரப்படுகிறது". தினத்தந்தி. 23 சூன் 2014. 23 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம_நாராயணன்&oldid=3330374" இருந்து மீள்விக்கப்பட்டது