தூர்தர்ஷன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Doordarshan
TypeBroadcast television network
CountryIndia
AvailabilityNational
OwnerPrasar Bharati
Key people
Ministry of Information and Broadcasting
Former names
All India Radio
Official website
www.ddindia.gov.in

தூர்தர்ஷன் (இந்தி: दूरदर्शन நேரடியான பொருளில் தொலை-காட்சி ) என்பது இந்தியாவின் பொதுத் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர் என்பதோடு இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட பொது ஒளிபரப்பு சேவை நிறுவனமான பிரச்சார் பாரதியின் ஒரு பிரிவாகும். பதிவகம் (studio) மற்றும் அலைபரப்பிகள் (transmitters) ஆகிய உள்கட்டுமான வகையில் இது உலகிலுள்ள மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனங்களுள் ஒன்றாகும். அண்மையில் இது எண்ணிம நிலப்பரப்பு அலைபரப்பிகள் (Digital Terrestrial Transmitters) வழி ஒளிபரப்பை தொடங்கியிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தூர்தர்ஷன் தன்னுடைய 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது.

தொடக்கம்[தொகு]

1959 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி சிறிய அனுப்பும் கருவி மற்றும் தற்காலிக பதிவகத்தோடு தில்லியில் ஒரு பரிசோதனை ஒளிபரப்பு முயற்சியாக தூர்தர்ஷன் தன்னுடைய சிறிய சேவையைத் தொடங்கியது. இந்த வழக்கமான நாள்தோறுமான அலைபரப்பல் அனைத்திந்திய வானொலியின் ஒரு பகுதியாக 1965 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தத் தொலைக்காட்சி சேவை பம்பாய் (தற்போது மும்பை) மற்றும் அமிர்தசரசு ஆகியவற்றிற்கு 1972 ஆம் ஆண்டில் நீட்டிக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டுவரை ஏழு இந்திய நகரங்களில் தொலைக்காட்சி சேவை இருந்தது என்பதுடன் இந்தியாவின் ஒரே தொலைக்காட்சி நிலையமாக தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 1976 ஆம் ஆண்டிலிருந்து வானொலி சேவையிலிருந்து பிரிக்கப்பட்டன. அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் ஒவ்வோர் அலுவலகமும் புது தில்லியில் உள்ள இரண்டு தனித்தனி பொது இயக்குநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. இறுதியில்[எப்போது?] தேசிய ஒளிபரப்பாளரான தூர்தர்ஷன் வந்தது.

நாடளாவிய ஒளிபரப்பு[தொகு]

தூர்தர்ஷன் தலைமையகம், நாடாளுமன்றத் தெரு, புது டெல்லி

தேசிய அளவிலான ஒளிபரப்பு 1982 ஆம் ஆண்டில் அறிமுகமானது. அதே ஆண்டில், இந்தியச் சந்தைகளில் அறிமுகமான வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளில் 1982 ஆம் ஆண்டில் ஆகத்து 15 அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் விடுதலை நாள் உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, அதைத்தொடர்ந்து தில்லியில் 1982 ஆம் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டன. 2021 வரை இந்திய மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் ஏறத்தாழ 1400 நிலப்பரப்பு அலைபரப்பிகளின் வலையமைப்பு வழியாக தூர்தர்ஷன் (டிடி நேஷனல், DD National, தூத நேசனல், தூரதர்சன் நேசனல்) நிகழ்ச்சிகளை பெற முடியும் என்ற நிலை இருந்தது. 46 தூர்தர்ஷன் பதிவகங்கள் நிகழ்ச்சிகளை வழங்கிக்கொண்டிருக்கின்றன.

தொடக்க கால நாட்டு நிகழ்ச்சிகள்[தொகு]

80 ஆம் ஆண்டுகள் அம் லோகு (நம் மக்கள்) (1984), புனியாது (நிறுவனம்) (1986-87) மற்றும் யே சோ ஐ சிந்தகி (இவ்வாழ்க்கை உள்ளபடி) (1984) போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளோடு தூர்தர்ஷன் யுகமாக இருந்தது.

 • நாள்தோறுமான நிகழ்ச்சிகளான அம் லோகு, புனியாது மற்றும் நுக்கது (தெருமுனை) மற்றும் புராண (தொன்ம) நாடகங்களான இராமாயணம் (1987-88) மற்றும் மகாபாரதம் (1989-90), இந்தியாவின் முதல் மீப்பெரும் கதாநாயகனான சக்திமான் ஆகியவையும் பின்னாளில் ஒளிபரப்பப்பட்ட பாரத் ஏக் கோச் (பாரதத்தை கண்டுபிடித்தல்), தி சோர்டு ஆஃப் திப்பு சுல்த்தான் (திப்பு சுல்த்தானின் வாள்) மற்றும் தி கிரேட் மராட்டா (பேராளர் மராட்டர்)ஆகியவை ஆயிரக்கணக்கானோரை தூர்தர்ஷனை நோக்கி இழுத்தன.
 • இந்தி திரைப்படப் பாடல்களின் அடிப்படையில் அமைந்த நிகழ்ச்சிகளான சித்ரகார், ரங்கோலி, ஏக் சே பத்கார் ஏக் மற்றும் சூப்பர்ஃகிட் முகாப்லா.
 • குற்ற திகில் தொடர்களான கரம்சந்த் (பங்கஜ் கபூர் நடித்தது), பாரிஸ்டர் ராய் (கன்வால்ஜித் நடித்தது), பியோம்கேஷ் பக்ஷி (ரஜித் கபூர் நடித்தது), ரிப்போர்டர் (ஷேகர் சுமன் நடித்தது), தேகிகாத் மற்றும் ஜான்கி ஜஸூஸ், சுராக் (சுதேஷ் பெர்ரி நடித்தது).
 • ஃபேரி டேல் தியேட்டர், டாடா டாடி கி கஹனியன், விக்ரம் பெடால், சிக்மா, ஸ்டோன் பாய், மால்குடி டேஸ், தெனாலி ராமா, போட்லி பாபா கி (பொம்மலாட்ட நிகழ்ச்சி), ஹி-மேன், சூப்பர்ஹ்யூமன் சாமுராய் சைபர் ஸ்குவாட், நைட் ரைடர், ஸ்ட்ரீட் ஹாக் மற்றும் திகில் தொடரான கிலே கா ரகஸ்யா (1989) ஆகியவை குழந்தைகளை இலக்காகக் கொண்டிருந்தன.
 • ஓஷின் ஒரு ஜப்பானிய நாடகத் தொடர், திரிஷ்னா, மிஸ்டர். யோகி, நீம் கா பேட், சர்கஸ், ஃபாஜி (ஷாருக் கான் அறிமுகமானது),ராணி லட்சுமி பாய், தாஸ்தன்-இ-ஹதிம் தய், அலிஃப் லைலா, குல் குல்ஷன் குல்ஃபாம், உதான், ரஜனி, தலாஷ், பிர் ஓஹி தலாஷ், கதா சாகர், நுபுர், மிர்ஸா காலிப், வாலே கி துனியா, புலாவந்தி, சங்கார்ஷ், லைஃப்லைன், காஷிஷ் (மால்விகா திவாரி அறிமுகமானது), ஸ்ரீமன் ஸ்ரீமதி, து து மெய்ன் மெய்ன், ஜுனூன், அஜ்னபி (டேனி தென்சோக்பா நடித்தது), சபான் சம்பால் கே, தேக் பாய் தேக், சன்சார், ஸ்வாபிமான், சாணக்யா, ஷாந்தி (மந்திரா பேடி அறிமுகமானது), சீ ஹாக்ஸ் (ஆர். மாதவன் நடித்தது), சுரபி, டானா பானா, முஜ்ரிம் ஹஸிர் (நவ்னி பரிஹார் அறிமுகமானது), ஜஸ்பால் பட்டிஸ் ஃபிளாப் ஷோ, அலிஃப் லைலா, மேரே அவாஸ் சுனோ, கேப்டன் வியோன், மற்றும் சந்த்ரகாந்தா ஆகியவை பிற நிகழ்ச்சிகளாகும்.

தூர்தர்ஷன் "ஃபன் டைம்" என்று பெயரிட்ட நிகழ்ச்சியில் கோடைகால விடுமுறைகளின்போது ஆங்கில சித்திரக்கதைப் படங்களையும் ஒளிபரப்பியது. ஸ்பைடர் மேன், ஜியண்ட் ரோபாட் (ஜானி சோகோவும் அவருடைய பறக்கும் இயந்திர மனிதனும்), கயாப் அயா, கூச்சே, ஹி-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் யுனிவர்ஸ், ஜங்கிள் புக் ஷோனன் மோக்லி (ஜப்பானிய உயிர்ச்சித்திர படத்தின் ஹிந்தி பதிப்பு விஷால் பரத்வாஜ் இசையமைத்தது), தலாஸ்பின் & டக் டேல்ஸ் ஆகியவற்றோடு சித்திரக்கதை நாடகங்களான சார்லி சாப்ளின், லாரல் & ஹார்டி மற்றும் டிதிஸ் காமெடி ஷோ.

Doordarshan Bhawan, Copernicus Marg, Delhi.jpg

அலைவரிசை[தொகு]

தற்போது தூர்தர்ஷன் 21 அலைவரிசைகளை இயக்கிவருகிறது - இரண்டு அனைத்திந்திய அலைவரிசைகள் - டிடி நேஷனல், தூத நேசனல் மற்றும் டிடி நியூஸ் (தூத செய்தி), 11 மண்டல மொழி செயற்கைத் துணைக்கோள் அலைவரிசைகள் (ஆர்எல்எசுசி), நான்கு மாநில வலையமைப்புகள் (எசுஎன்), ஒரு பன்னாட்டு அலைவரிசை, ஒரு விளையாட்டு அலைவரிசை (டிடி ஸ்போர்ட்ஸ், தூத விளையாட்டுகள்) மற்றும் நாடாளுமன்ற நடப்புகளை நேரடியாக ஒளிபரப்ப இரண்டு அலைவரிசைகள் (டிடி-ஆர்எசு & டிடி-எல்எசு) உள்ளன.

தூத நேசனல் அலைவரிசையில் (டிடி-1) மண்டல நிகழ்ச்சிகளும் உள்ளூர் நிகழ்ச்சிகளும் நேரப் பகிர்வு முறையில் ஒளிபரப்பப்படுகின்றன. தூத-மெட்ரோ அலைவரிசைக்கு பதிலாக 2003 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட தூத-செய்தி அலைவரிசை 24 மணிநேரமும் செய்திச் சேவைகளை வழங்குகிறது. மண்டல மொழிகள் செயற்கைத் துணைக்கோள் அலைவரிசைகள் இரண்டு பாகங்களைக் கொண்டிருக்கின்றன - குறிப்பிட்ட மாநிலத்திற்கான மண்டல சேவை அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து நிலம்சார் அலைபரப்பிகள் வழியாகவும் ஒளிபரப்பப்படுகின்றன என்பதுடன் முதன்மை நேரம் மற்றும் முதன்மையற்ற நேரங்களில் மண்டல மொழியிலான கூடுதல் நிகழ்ச்சிகள் யாவும் கம்பிவழி இயக்குநர்கள் மூலமாகவே கிடைக்கின்றன. தூத-விளையாட்டுகள் அலைவரிசை, நாடளாவிய மற்றும் பன்னாட்டு அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கென்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. வருவாய்களை ஈட்டித்தராது என்று தனியார் அலைவரிசைகள் முயலாத கோ-கோ மற்றும் கபடி போன்ற நாட்டுப்புற விளையாட்டுக்களை ஒளிபரப்புகின்ற ஒரே விளையாட்டு அலைவரிசை இதுவேயாகும்.

செயல்படுநிலையில் தூர்தர்சன்[தொகு]

வழக்கமான அலைவரிசைகளான டாட்டா ஸ்கையில் கிடைக்காத தூர்தர்ஷனின் நான்கு தொலைக்காட்சி அலைவரிசைகளைக் காட்ட இது டாட்டா ஸ்கையின் ஒருங்கிணைந்த சேவையாக இருக்கிறது. செயல்படுநிலை தூர்தர்ஷன் அலைவரிசைகள் டிடி காஷிர், டிடி பொதிகை, டிடி பஞ்சாபி மற்றும் டிடி குசராத்தி ஆகியவையாகும்.

டிடி டைரக்ட் பிளஸ் எனப்படும் டிடிஎச் சேவையை டிடி வைத்திருக்கிறது. இது இலவசமானதாகும்.

பன்னாட்டு ஒளிபரப்பு[தொகு]

டிடி-இந்தியா செயற்கைத் துணைக்கோள் வழியாக பன்னாட்டு அளவில் ஒளிபரப்பப்படுகிறது. இது உலகம் முழுவதிலும் 146 நாடுகளில் கிடைக்கிறது என்றாலும் இந்த அலைவரிசையைப் பெறுவதற்கான தகவல் எளிதாகக் கிடைப்பதில்லை. இங்கிலாந்தில் அலைவரிசை 833 இல் உள்ள ஸ்கை சிஸ்டமில் யூரோபேர்ட் செயற்கைக்கோள் வழியாகக் கிடைக்கிறது (அதன் இலச்சினை ரயாட் டிவி என்று காட்டப்படும்). டிடி-இந்தியாவின் பன்னாட்டின் ஒளிபரப்பின் நேரமும் நிகழ்ச்சிகளும் இந்தியாவிலிருந்து மாறுபடுகின்றன. ஸ்கை டிஜிட்டல் யு.கே. ஒளிபரப்பு 2008 ஆம் ஆண்டு ஜூனில் நிறுத்தப்பட்டது, அத்துடன் டைரக்ட் டிவி யு.எஸ். ஜுலை 2008 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

விமர்சனங்கள்[தொகு]

ஒருபக்கச்சாய்வுக் கண்ணோட்டங்கள்[தொகு]

 • பிபிசியைப் போன்று தூர்தர்ஷன் தனிப்பட்ட ஆசிரியர் குழுவைப் பெற்றிருக்கவில்லை. இதனுடைய தாய் நிறுவனமான பிரசார் பாரதி இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்படுகின்ற, தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் வழியாக செயல்படுகின்ற உறுப்பினர்களையே கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுப்பாடு “பிரச்சாரம் மற்றும் பொதுமக்கள் தொடர்பிற்கென்று” ஒதுக்கப்படுகின்ற வரவுசெலவு திட்டத்தில் தெளிவாகத் தெரிகிறது.[1]
 • அரசாங்க அவசரநிலை பிரச்சாரத்தின்போது இது சுறுசுறுப்பாக செயல்படுகிறது.[2]
 • அவசரநிலை காலகட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர்களுள் ஒருவராக இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை ஒளிபரப்புவதை இது 2004 ஆம் ஆண்டில் தணிக்கை செய்தது.[3]
 • காஷ்மீர் பள்ளத்தாக்கு குறித்த பாகிஸ்தான் பிரச்சாரத்திற்கு பதிலடியாக இந்திய அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கென்று காஷ்மீரில் தூர்தர்ஷன் காஷிர் அலைவரிசையைத் தொடங்கியது. டிடி காஷிர் ஷர்காத் கே தோ ருக் (எல்லையின் இரண்டு முகங்கள்), பாகிஸ்தான் ரிப்போர்டர், பிடிவி சாச் கியா ஹை (பிடிவி ! உண்மை என்ன).[4]
 • இது அனைத்திந்திய வானொலியுடன் கொண்டிருக்கும் தொடர்பால் பாகித்தானின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா-பாகித்தான் எல்லையில் அதிக சக்திவாய்ந்த அனுப்பும் கருவிகளை நிறுவியுள்ளது.[5]
 • புளூஸ்டார் படைத்துறை நடவடிக்கையின்போது அந்த நிகழ்வுகளைத் தெரியப்படுத்துவதற்கு அரசு மூலாதாரங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இவ்விடத்தில் தூர்தர்ஷன் தனிப்பட்ட பத்திரிக்கையாளர்கள் தவறானது என்று கண்டுபிடித்த வன்முறை நிகழ்வுகள் குறித்த ஒளிப்பட பதிவுகளை தயாரிக்க சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டது.[6]

வணிக நோக்கில் நிலைப்புத்திறன்[தொகு]

 • 1991 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் அனுமதிக்கப்பட்டவுடன் வீட்டில் கம்பி மற்றும் செயற்கைத் துணைக்கோள் தொலைக்காட்சி வழியாக பார்க்கும் பார்வையாளர்களை தூர்தர்ஷன் இழந்தது. 2002 ஆம் ஆண்டில் டிடி நேஷனல் அலைவரியைப் பார்ப்பவர்கள் 2.38 விழுக்காட்டினராகவே இருந்தனர்.[7]
 • கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை உள்ளிட்ட நாடளாவிய நிகழ்வுகளுக்கான அதிக அளவு ஏலதாரராக கட்டாயமான முறையில் இதற்கு வழங்கப்படுவதால் இது குறிப்பிடத் தகுந்த வருவாயைப் பெறும் சமயத்தில்,[7] பிபிசியைப் போன்ற இந்தியாவில் தொலைக்காட்சியை சொந்தமாகப் பெற்றிருப்பதற்கான உரிமத்தை அளிக்க இதற்கு நிதி வழங்குவதற்கான முன்மொழிவும் இருக்கிறது.[8] இருப்பினும் இது சராசரி இந்தியனின் நிதிசார்ந்த கட்டுப்பாடுகள் என்ற கண்ணோட்டத்தில் விதிக்கப்படுவதற்கான சாத்தியமில்லை.

தரைவழி ஒளிபரப்பு நிறுத்தம்[தொகு]

இந்தியாவில் தரைவழி ஒளிபரப்பில் தூர்தர்சன் மட்டும் ஒளிபரப்பி வந்தது. பிற நிறுவனங்கள் இச்சேவையில் இல்லை. தாராள மயமாக்களுக்குப் பிறகு இந்தியாவில் கம்பி வட தொலைக்காட்சி மற்றும் டிடிஎச் வசதி பெருகியது. தரைவழி ஒளிபரப்பில் தூர்தர்சன் மட்டுமே ஒளிபரப்பப்படுவதால் அதை மக்கள் பயன்படுத்துவது அரிதாகியது. இதனால் நடைமுறையில் உள்ள அனலாக் டிரான்ஸ் மீட்டர் தொழில் நுட்பத்தை எண்ணியல் தொழிங் நுட்பத்துக்கு (டி.டி.எச்) மாற்ற பிரச்சார் பாரதி நிறுவனம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள 412 தூர்தரசன் தரைவழி ஒளிபரப்பு நிலையங்களின் சேவையை படிப்படியாக மூட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் திருநெல்வேலி, உதகமண்டலம், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு ஆகிய ஊர்களில் உள்ள தரைவழி ஒளிபரப்பு நிலையங்களின் ஒளிபரப்பு 2021 அக்டோபர் 31 முதல் நிறுத்தப்பட்டன. இராமேசுவம், திருச்செந்தூர் தொலைக்காட்சி ஒளிபரப்பானது 2021 திசம்பர் 31 முதல் நிறுப்பட்டடுவதாகவும், நெய்வேலி, ஏற்காடு ஆகியவை 2022 மார்ச் 31 அன்று நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.[9]

இதையும் பாருங்கள்[தொகு]

பார்வைக் குறிப்புகள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2011-07-21 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-06-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. http://www.telegraphindia.com/1040126/asp/nation/story_2827052.asp
 3. http://www.indianexpress.com/oldStory/58549/
 4. http://www.zimbio.com/Kashmir/articles/140/Delhi+TV+fails+Indian+Occupied+Kashmir+Pakistani
 5. http://www.rediff.com/news/1999/dec/16pak2.htm
 6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2006-10-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-06-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 7. 7.0 7.1 http://www.thehindubusinessline.com/2002/07/23/stories/2002072301320600.htm
 8. http://timesofindia.indiatimes.com/articleshow/2190038.cms
 9. "இந்தியா முழுவதும் தூர்தர்ஷன் தரைவழி ஒளிபரப்பு நிறுத்தம்: 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைக்கு சிக்கல்". Hindu Tamil Thisai. 2021-12-12 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூர்தர்ஷன்&oldid=3510952" இருந்து மீள்விக்கப்பட்டது