அன்பே வா (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்பே வா என்பது சன் தொலைக்காட்சியில் நவம்பர் 2, 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி காதல் நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரை சரிகம என்ற நிறுவனம் தயாரிக்க, விராட் மற்றும் டெல்னா டேவிஸ்[2] ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.[3]

கதைச்சுருக்கம்[தொகு]

அன்னலட்சுமியின் மூன்று மகள்களான பூமிகா, கார்த்திகா, தீபிகா. அப்பா இல்லாமல் வளரும் பிள்ளைகள். பொறுப்போடு குடும்பத்தை சுமக்கிறார் பூமிகா. கதாநாயகனான வருண் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன் மற்றும் கலகலப்பானவன். தந்தையின் வட் புறுத்தலின் காரணமாக வேலைக்கு வரும் வருண், தொழில் காரணமாக பூமிகா ஊருக்கு வருகின்றான். பூமிகாவிற்கும், வருணுக்கும் இடையே அறிமுகமாகி இருவரும் காதலித்து திருமணம் செய்தனர்.

அதற்கு பிறகு, பார்வதியும் வந்தனாவும் பூமிகாவை வருணிடமிருந்து பிரிக்க சதித்திட்டம் தீட்டினர். ஆனால், வருண் ஒவ்வொரு முறையும் பூமிகாவுக்கு நடக்கும் அநீதியை தடுத்து, அவளை காப்பாற்றினான்.

ஒருசமயம் ராம் சீதா இல்லத்தில் பிரம்மநந்தம்-கோமதி ஆகிய இரண்டு பேர் ராம் சீதா குடும்பத்தை தொந்தரவு செய்தனர். இதை அறிந்த வருணும் பூமிகாவும் ராகுல்-பேபி ஆகியவர்களை அனுப்பி ராம் சீதா குடும்பத்தை காப்பாற்றினர்.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

  • விராட்[4] - வருண்
  • டெல்னா டேவிஸ்[5]-இரட்டை வேடங்களில்
    • பூமிகா, வருணின் மனைவி, குடும்ப பாரத்தை சுமக்கும் கிராமத்து பெண்.
    • நென்சி, தீபக்கின் இறந்த போன மனைவி, பப்புவின் அம்மா

வருண் குடும்பத்தினர்[தொகு]

  • கன்யா பாரதி -பார்வதி (வருணின் அம்மா)
  • ஆனந்த் -மனோஜ் கிருஷ்ணா (வருணின் அப்பா)
  • கௌசல்யா செந்தாமரை (பகுதி1–46)/ராஜ்யலட்சுமி (பகுதி100–தற்பொழுது)-(வருணின் பாட்டி)
  • பூஜா ஃபியா - வாசுகி (வருணின் அக்கா)
  • துரை ராஜ் - மாதவன் (வாசுகியின் கணவர்)
  • பேபி ரியா- ஐஸ்வரியா (மாதவனின் மகள்)
  • சாய் அஸ்வின்- ராகுல்(மாதவனின் மகன்)

பூமிகா குடும்பத்தினர்[தொகு]

  • வினயா பிரசாத் - அன்னலட்சுமி (பூமிகாவின் அம்மா)
  • பிர்லா பாஸ் - ராஜசேகர் (பூமிகாவின் அப்பா)
  • ப்ரீதா சுரேஷ் - கார்த்திகா (பூமிகாவின் சகோதரி)
  • தீபிகா (பூமிகாவின் சகோதரி, சோமநாதனின் மனைவி)
  • ரேஷ்மா பசுபுலேட்டி(பகுதி1-219)/ வினோதினி(பகுதி 219-தற்போழுது) வந்தானா ராஜசேகர் (ராஜசேகரின் இரண்டாவது மனைவி)
  • வி.ஜே சங்கிதா-அஞ்சலி (வந்தனாவின் சகோதரி)
  • விஸ்வா (வந்தனா-ராஜசேகரின் மகன்)
  • மௌலி- பொன்னம்பலம் (பூமிகாவின் தாத்தா; ராஜசேகரின் அப்பா)

மற்ற கதாபாத்திரங்கள்[தொகு]

  • டாக்டர் தீபக் (நென்சியின் கணவர், பப்புவின் அப்பா)
  • ரோஹன்- பப்பு (தீபக்கின் மகன்)
  • ஜெனி (நென்சியின் சகோதரி)
  • பாண்டி கமல் - ஆதித்யா( பூமிகா மற்றும் வருணின் நண்பர்)
  • ஆஸ்கரா-ஐஸ்வர்யா(ஆதித்யாவின் சகோதரி)
  • ஒய். ஜி. மகேந்திரன்- கர்னல் ராம்
  • அனுராதா கிருஷ்ணமூர்த்தி-சீதா
  • அசோக் பாண்டியன்- ஏ.கே (மனோஜ் கிருஷ்ணாவின் எதிரி)
  • உமா பத்மநாபன்-பத்மாவதி(ஏ.கேவின் மனைவி)
  • எஸ்.டி.கணேஷ்- அசோக் (வருணின் நண்பர்)
  • ஹேமா தயாளன்- அஸ்வினி (பூமிகாவின் தோழி)
  • ராகவ்-ராகுல்
  • ப்ரீதா- பேபி (ராகுலின் மனைவி)
  • சுபலட்சுமி ரங்கன்- சில்பா (வருணை அடைய நினைப்பவள்; பூமிகாவின் எதிரி)
  • சுவாதி- ப்ரீதி (சில்பாவின் கூட்டாளி)
  • கீர்த்தனா-அருள்வாக்கு வேதவல்லி

சிறப்பு தோற்றம்[தொகு]

  • அட்சயா பிரபா-(பூமிகாவை சில்பாவிடமிருந்து காப்பாற்ற வந்தவர்)
  • அம்பிகா- ஜானகி (பூமிகாவுக்கு உதவிய மகளிர்த்துறை அதிகாரி)
  • ஸ்வேதா பாண்டேகர்- சந்திரா
  • ஆர்த்தி
  • கணேஷ்கர்
  • பிரியங்கா நல்காரி- ரோஜா
  • சிப்பு சூர்யன்- அர்ஜூன்
  • காயத்ரி சாஸ்திரி- கல்பனா

நடிகர்களின் தேர்வு[தொகு]

இந்த தொடரில் கதாநாயகியாக குரங்கு பொம்மை போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை டெல்னா டேவிஸ் என்பவர் 'பூமிகா' என்ற கதாபாத்திரம் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பேரழகி தொடரில் நடித்த விராட் என்பவர் 'வருண்' என்ற கதாபாத்திரத்திலும், இவரின் தாய் கதாபாத்திரத்தில் 'கன்யா பாரதி' என்பவரும் தந்தை கதாபாத்திரத்தில் நடிகர் 'ஆனந்த்' என்பவரும் நடிக்கிறார்கள்.

பிரபல நடிகை வினயா பிரசாத் என்பவர் பூமிகாவின் தாய் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் தமிழில் ரோஜா தொடருக்கு பிறகு நடிக்கும் இரண்டாவது தொடர் ஆகும். இவர்களுடன் கௌசல்யா செந்தாமரை, ராதாரவி, பிர்லா பாஸ், ரேஷ்மா பசுபுலேட்டி, வினோதினி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஒளிபரப்பு நேரம் மாற்றம்[தொகு]

இந்த தொடர் 2 நவம்பர் 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 13 பிப்ரவரி 2021 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 7 பிப்ரவரி 2022 முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
2 நவம்பர் 2020 - 13 பிப்ரவரி 2021
திங்கள் - சனி
21:00 1-86
15 பிப்ரவரி 2021 - 5 பிப்ரவரி 2022
திங்கள் - சனி
21:30 87 - 362
7 பிப்ரவரி 2022 - ஒளிபரப்பில்
திங்கள் - சனி
22:00 363 -

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "நாயகியை ஓரங்கட்டும் புத்தம் புது தொடர் 'அன்பே வா'". tamil.samayam.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "அன்பே வா தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகும் குரங்கு பொம்மை நடிகை". tamil.filmibeat.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "Anbe Vaa Serial Cast 2020: Viraat, Vinaya Prasad And Others In Pivotal Roles". republicworld.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. https://en.wikipedia.org/wiki/Viraat_%28Actor%29?wprov=sfla1 -
  5. "'Kurangu Bommi' actress Delna Davis makes television debut". timesofindia.indiatimes.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அன்பே வா அடுத்த நிகழ்ச்சி
நாயகி சுந்தரி
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அன்பே வா அடுத்த நிகழ்ச்சி
சித்தி–2 எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 10 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அன்பே வா அடுத்த நிகழ்ச்சி
சித்தி–2 -