மௌனம் பேசியதே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மௌனம் பேசியதே
இயக்கம்அமீர்
தயாரிப்புகணேஷ் ரகு
கார்த்திக் ராதாகிருஷ்ணன்
வெங்கி நாராயணன்
ராஜன் ராதாகிருஷ்ணன்
கதைஅமீர்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புசூர்யா
த்ரிஷா
நந்தா
மஹா
ஒளிப்பதிவுராம்ஜி
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்அபராஜித் பிலிம்ஸ்
விநியோகம்ஜெமினி புரொடக்சன்ஸ்
வெளியீடுதிசம்பர் 14, 2002
ஓட்டம்168 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மௌனம் பேசியதே 2002 ஆம் வந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் சூர்யா,த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வகை[தொகு]

காதல் திரைப்படம் 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் வசூல்ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது. இது தெலுங்கில் ஆடந்தே அதோ வகை (2003) என மறு உருவாக்கம் செய்யப்பட்டது.[1]

கதை[தொகு]

காதலை வெறுக்கும் ஒரு நண்பன், காதலில் இருக்கும் நண்பன் இருவரின் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை. காதலை வெறுத்து ஒதுங்கும் ஒருவன் காதலினால் எவ்வாறு மாறுகிறான், அவனது உணர்வுகளைத் துல்லியமாகக் காட்டும் இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது.

தயாரிப்பு[தொகு]

இத்திரைப்படம் இயக்குநர் அமீரிடம் விக்ரம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த போது ஒரு தொலைக்காட்சித் தொடராக இயக்க எண்ணியிருந்த ஒரு தலைப்பு இப்படத்திற்கு சூட்டப்பட்டது.[2] இது நடிகை திரிஷா முதன் முதலாக ஒரு முன்னணிக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த திரைப்படமாகவும் அமைந்தது.[3] இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்து, இத்தாலி, மொரீசியசு, எகிப்து போன்ற நாடுகளிலும் இதர காட்சிகள் இந்தியாவிலும் எடுக்கப்பட்டன. மேலும், ஒரு மிகப்பெரிய அரங்கம் பெரும் பொருட்செலவில் 30 இலட்சம் (2020 இல் நிகர மதிப்பு 86 lakh or US$1,10,000) கலை இயக்குநர் ராஜீவனால் புதுச்சேரியில் ஒரு பாடலுக்காக உருவாக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌனம்_பேசியதே&oldid=3831886" இருந்து மீள்விக்கப்பட்டது