தள்ளூரி ராமேஸ்வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டல்லூரி ராமேஸ்வரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தள்ளூரி ராமேஸ்வரி
பணிநடிகை
வாழ்க்கைத்
துணை
தீபக் சேத்
விருதுகள்பிலிம் பேர் மற்றும் நந்தி விருது


ராமேஸ்வரி என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் இந்தி, ஒடியா மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இவர்‌ தள்ளூரி ராமேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.

பிறப்பு மற்றும் குடும்பம்[தொகு]

இவர் ஆந்திராவில் பிறந்தவர்.‌ காக்கிநாடாவில் வளர்ந்தார். இவர் பஞ்சாபி நடிகர்‌ மற்றும் தயாரிப்பாளரான தீபக் சேத்தை மணந்தார். அவருக்கு பாஸ்கர பிரதாப் சேத் மற்றும் சூர்யா பிரேம் சேத் என்ற இரு மகன்கள் உள்ளனர். ராமேஸ்வரி தனது குழந்தைகளை வளர்ப்பதற்காக நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்தார்.

விருதுகள்[தொகு]

1978 இல் கே. விஸ்வநாத் இயக்கத்தில் சந்திர மோகன் உடன் ராமேஸ்வரி முதல்முறையாக சீதாமகாலட்சுமி என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.‌[1] இத்திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிபடுத்தியமைக்காக பிலிம் ஃபேர் விருது கிடைத்தது.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. "TeluguCinema.Com - seetaamaalakshmi (1978)" இம் மூலத்தில் இருந்து 2011-05-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110504144017/http://www.telugucinema.com/c/publish/movieretrospect/seetamahalaksmi1978_printer.php. 
  2. Movie Listings: Seetamalakshmi | eTimes, Times of India, retrieved 2022-07-30

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தள்ளூரி_ராமேஸ்வரி&oldid=3733983" இருந்து மீள்விக்கப்பட்டது