சமந்தா ருத் பிரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சமந்தா ருத் பிரபு
பிறப்பு சமந்தா ருத் பிரபு
ஏப்ரல் 28, 1987 (1987-04-28) (அகவை 28)
சென்னை, தமிழ் நாடு, இந்தியா
மற்ற பெயர்கள் யசோதா[1]
கல்வி பி. காம்
பணி விளம்பரம் மற்றும் திரைப்பட நடிகை
செயல்பட்ட ஆண்டுகள் 2007 - தற்போது வரை

சமந்தா ருத் பிரபு, (பிறப்பு: ஏப்ரல் 28, 1987) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள, தெலுங்கு தம்பதியருக்கு பிறந்த இவர் வளர்ந்தது சென்னையில். ரவி வர்மனுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தாலும், இவருடைய முதல் தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேஸாவே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் அதன்பிறகு நடித்த பிருந்தாவனம் மற்றும் தூக்குடு அடுத்தடுத்து வெற்றி பெற, தெலுங்கு திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

சென்னையில் பிறந்த இவரது இயற்பெயர் யசோதா ஆகும்.[2] இவர் சென்னை தி. நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ - இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியும், பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார். பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

நான் ஈ திரைப்பட படப்பிடிப்பின் போது படக்குழுவினருடன்

கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த ஏ மாய சேசாவே திரைப்படம், முதன்முதலாக ஏ. ஆர். ரகுமானுடன் கௌதம் மேனன் இணைவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டு இருந்தது.[3] அத்திரைப்படத்திற்காக ஆகஸ்ட் 2009-தில் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார், அத்திரைப்படம் பிப்ரவரி 16, 2010-ல் வெளியானது.[4] இவர் ஜெஸ்ஸி என்னும் ஐதராபாத்தில் வசிக்கும் மலையாள கிருத்துவ பெண்ணாக நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியான பிறகு, சமந்தாவின் நடிப்பை பாராட்டி நாளிதழ்களில் வரத்துவங்கியது.[5] சிபி (Sify) உட்பட பல இணையத்தளத்தில் இவரை "மக்களின் மனதை கொள்ளை கொள்பவள்"("scene-stealer") என்றும் அவருடைய அழகு, "கவர்ந்திழுப்பதாகவும்" ("is alluring"), என சிபியில் இவரைப் புகழ்ந்து விமர்சனங்கள் எழுதப்பட்டிருந்தது.[5]

அதன்பிறகு ஏ. ஆர். ரகுமான் இசையில், கௌதம் மேனன் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக இயக்கிய செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலிலும் தோன்றினார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2010 விண்ணைத்தாண்டி வருவாயா நந்தினி தமிழ் சிறப்புத் தோற்றம்
2010 ஏ மாய சேசாவே ஜெஸ்ஸி தெலுங்கு சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது
நந்தி சிறப்பு நடுவர் விருது
2010 பாணா காத்தாடி பிரியா தமிழ் பரிந்துரை - சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது
2010 மாஸ்கோவின் காவிரி காவேரி தங்கவேலு தமிழ்
2010 பிருந்தாவனம் இந்து தெலுங்கு
2011 நடுநிசி நாய்கள் தமிழ் சிறப்புத் தோற்றம்
2011 தூக்குடு பிரசாந்தி தெலுங்கு
2012 ஏக் தீவானா தா சமந்தா இந்தி சிறப்புத் தோற்றம்
2012 ஈகா பிந்து தெலுங்கு
2012 நான் ஈ தமிழ்
2012 நீ தானே என் பொன்வசந்தம் நித்யா வாசுதேவன் தமிழ்
2012 யேடோ வெல்லிப்போயிந்தி மனசு தெலுங்கு படப்பிடிப்பில்
2012 அஸ்ஸி நப்பே பூரே சாவ் |இந்ததி படப்பிடிப்பில்
2012 ஆட்டோநகர் சூர்யா சிரிசா தெலுங்கு படப்பிடிப்பில்
2012 சீதம்மா வகித்லோ சிரிமல்லே சேத்து கீதா தெலுங்கு படப்பிடிப்பில்
2012 யெவடு தெலுங்கு படப்பிடிப்பில்
2014 கத்தி தமிழ்

விருதுகள்[தொகு]

ஆண்டு விருது விருது பெற்றது திரைப்படம் முடிவு
2011 சினிமா விருதுகள் (CineMAA Awards) சிறந்த அறிமுக நடிகை ஏ மாய சேசாவே வெற்றி
தென்னிந்திய பிலிம்பேர் விருது சிறந்த நடிகை (தெலுங்கு) பரிந்துரை
சிறந்த அறிமுக நடிகை வெற்றி
நந்தி விருது நந்தி சிறப்பு நடுவர் விருது வெற்றி
டி. எஸ். ஆர் தொலைக்காட்சி-9 திரைப்பட விருது டி. எஸ். ஆர் தொலைக்காட்சி-9 சிறந்த கதாநாயகி விருது வெற்றி
விஜய் விருதுகள் சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது பாணா காத்தாடி பரிந்துரை

குறிப்புகள்[தொகு]

  1. http://entertainment.oneindia.in/tamil/news/2008/samantha-name-yashoda-250808.html
  2. Shankar, Settu (2008). "Samantha Christens herself Yashodha!". OneIndia. பார்த்த நாள் 2008-08-05.
  3. Moviebuzz (2010). "Audio released, confirms release on Feb 19!". Sify. பார்த்த நாள் 2010-02-04.
  4. TNN (2009-09-24). "Big break for Samantha". Times of India (India). http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Big-break-for-Samantha/articleshow/5046713.cms. பார்த்த நாள்: 2009-09-24. 
  5. 5.0 5.1 Moviebuzz (2010). "Ye Maaya Chesave". Sify. பார்த்த நாள் 2010-02-26.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமந்தா_ருத்_பிரபு&oldid=1906236" இருந்து மீள்விக்கப்பட்டது