தெலுங்குத் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலுங்கு திரைப்படத்துறை
பிரசாத் மல்டிப்ளெக்ஸ், ஹைதராபாத், தெலங்காணா
திரைகளின் எண்ணிக்கைஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணாவில் 2809 திரைகள்[1]
முதன்மை வழங்குநர்கள்
  • *உஷாகிரன் மூவிஸ்
  • *சுரேஷ் புரொடக்ஷன்ஸ்
  • *வைஜயந்தி மூவிஸ்
  • *அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்
  • *கீதா ஆர்ட்ஸ்
  • *ஆர்கா மீடியா வொர்க்ஸ்
  • *ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸ்
  • *14 ரீல்ஸ் பிளஸ்
  • பிவிபி சினிமா
  • *பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2017)
மொத்தம்294
நிகர நுழைவு வருமானம் (2013)[2]
தேசியத் திரைப்படங்கள்இந்தியா: 1,350 கோடி

தெலுங்கு திரைப்படத்துறை அல்லது டோலிவுட் என்பது இந்திய நாட்டில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா மாநிலங்களில் பரவலாக பேசப்படும் தெலுங்கு மொழித் திரைப்படத்துறை ஆகும். இது தெலங்காணாவை தலைநகராகிய ஐதராபாத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இது இந்தியத் திரைப்படத்துறையில் பெரிய மூன்று திரைத்துறையில் இதுவும் ஒன்றாகும். இந்த திரைத்துறை 2017 ஆம் ஆண்டில் 294 திரைப்படங்களைத் தயாரித்தது மற்றும் 2013 ஆம் ஆண்டில் இந்திய பாக்ஸ் ஆபிஸ் வருவாயில் 17% பங்கை வகித்தது.

முதல் பேசும்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்குனர் எச்.எம் ரெட்டி இயக்கத்தில் காளிதாஸ் என்ற திரைப்படம் இரு மொழிகளிலும் 31 அக்டோபர் 1931 அன்று வெளியிடப்பட்டது. முதல் முழு நீள தெலுங்கு மொழி திரைப்படமான பக்த பிரஹ்லதா என்ற திரைப்படம் 6 பிப்ரவரி 1932 அன்று வெளியிடப்பட்டது.[3] பாதாள பைரவி (1951), மல்லிஸ்வரி (1951), தேவதாஸ் (1953), மாயா பஜார் (1957), நார்த்தனாசலா (1963), மரோசரித்ரா (1978), மாபூமி (1979), சங்கராபரணம் (1980), சலங்கை ஒலி (1983), சிவா (1989) போன்ற தெலுங்கு மொழித் திரைப்படங்கள் சிறந்த 100 இந்திய திரைப்படங்களில் சிஎன்என்-ஐபிஎன் இல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இது 1948இல் சென்னையில் நிறுவப்பட்டது. பின்னாளில் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டது. மொழிபெயர்க்கப்பட்ட இந்தி, தமிழ், மலையாள மொழித் திரைப்படங்கள், தெலுங்குத் திரைப்படங்களை விடவும் அதிக வெற்றி பெறுவதால், ஆந்திர மாநில அரசு பிற மொழிப் படங்களுக்கு வரியை அதிகப்படுத்தியுள்ளது.[4]

இயக்குநர் இராஜமௌலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 போன்ற திரைப்படங்கள் தெலுங்கு திரைப்படத்துறையில் அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.[5] இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]