டெக்கனி திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டெக்கனி திரைப்படத்துறை (Deccani film industry) என்பது இந்தியாவில்[1] தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தை தளமாகக் கொண்ட டெக்கனி மொழி/ஹைதராபாத் உருது மொழிகளை சார்ந்த திரைப்படத்துறை ஆகும். இந்த மொழித் திரைப்படங்கள் இந்தியாவின் டெக்கான் பகுதியில் மட்டுமல்ல உலகின் பிற இந்தி - உருது பேசும் பகுதிகளிலும் பிரபலமடைந்துள்ளன.[2]

இது தென்னிந்தியாவில் பேசப்படும் இந்தோ-ஆரிய திராவிட இந்துசுத்தானி மொழியான[3] டெக்கனி மொழியிலும் மற்றும் குறிப்பாக ஐதராபாத் உருது மொழியிலும் தயாரிக்கப்படுகின்றன. சில திரைப்படங்கள் தரமான உருது மொழி இசையை இணைத்து தயாரிக்கப்படுகின்றது.[4] ஆரம்பகாலத்தில் திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் "இந்தி" திரைப்படங்கள் என்றே பெயரிடப்பட்டது. ஆனால் பலரின் முயற்சியால் இந்த துறை டெக்கனி திரைப்படத்துறை என்ற சொந்த மொழி குறிச்சொல்லைப் பெற்றுள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]