நேபாளத் திரைப்படத்துறை
| நேபாளத் திரைப்படத்துறை | |
|---|---|
Cinema of Nepal | |
| திரைகளின் எண்ணிக்கை | 130[1] |
| • தனிநபருக்கு | 0.2 per 100,000 (2001)[1] |
| தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2016) | |
| மொத்தம் | 100[1] |
நேபாளத் திரைப்படத்துறை (Cinema of Nepal) என்பது 1951 ஆம் ஆண்டு முதல் நேபாள நாட்டில் நேபாளி, மைதிலி மற்றும் போச்புரி மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும்.
நேபாள த் திரைப்படத்துறைக்கு மிக நீண்ட வரலாறு இல்லை, ஆனால் நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தில் தொழில்துறைக்கு அதன் சொந்த இடம் உண்டு. கூர்க்கவுட் பெரும்பாலும் "நேபாளி சல்சித்திரா" என்று அழைக்கப்படுகிறது (இது ஆங்கிலத்தில் "நேபாள திரைப்படங்கள்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது). காளிவுட் என்ற சொல் நேபாளி மொழியில் தயாரிக்கப்பட்ட படங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது, அதே சமயம் காட்மாண்டு மற்றும் ஜனக்பூரிலிருந்து மைதிலி மொழியில் தயாரிக்கப்பட்ட நேபாளத் திரைப்படங்களை மிதிலவுட் என்று அழைக்கப்படுகின்றன. இவ் இரண்டு பெரிய மொழித் திரைப்படத்துறையை நேபாளத்தில் பொதுவாக கூர்க்கவுட் என்று அழைக்கப்படுகின்றன.[2]
இந்தி திரைப்படங்களின் தாக்கம்
[தொகு]1949ஆம் ஆண்டு காத்மாண்டுவில் நிறுவப்பட்ட முதல் திரையரங்கம் ஜன்சேவா ஆகும். பின்னர் ரஞ்சனா, அசோக், பிஸ்வஜோதி மற்றும் ஜெய் நேபாளம் ஆகிய திரையரங்கங்கள் கட்டப்பட்டது.[3] நேபாளத்தில் சினிமா அரங்குகள் நிறுவுவதற்கு முன்னர், திரைப்பட ஆர்வலர்கள் இந்திய மாநிலங்களான பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திற்கு இந்தி திரைப்படங்களைப் பார்க்க பயணம் செய்தனர். நேபாள மக்கள் தங்கள் விருப்பமான இந்தி நடிகர்களின் உடை அணியும் விதம், சிகை அலங்காரங்கள் மற்றும் பழக்கவழக்கங்களில் பின்பற்றினர். நகர்ப்புறங்களில் இந்தி திரைப்பட பாடல்கள் அப்போதும், இப்போதும் பிரபலமாக உள்ளது.
இந்தி படங்களின் புகழ் நேபாளத்தில் உள்ள அனைத்து சமூகங்களைத் தாண்டி, நேபாள மன்னர் மகேந்திரா (1920–72) இந்தி மொழி நடிகர் தேவ் ஆனந்தின் ரசிகராக இருந்தார், மேலும் அவரது முடிசூட்டு விழாவிற்கு அவரை அழைத்தார். நேபாளத்தில் ஒரு படம் தயாரிக்கச் சொன்னார். தேவ் ஆனந்த் தனது நினைவுக் குறிப்புகளான ரொமான்சிங் வித் லைஃப் எனும் நூலில், பிப்ரவரி 1970ல் பட்டத்து இளவரசர் பிரேந்திராவின் திருமணத்தில் கலந்து கொள்ள அரச விருந்தினராக காத்மாண்டுவில் இருந்ததாக எழுதியுள்ளார்.
இந்தி நடிகர் தேவ் ஆனந்த் 1971ல் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா எனும் திரைப்பட,ம் நேபாளத்தின் பொக்காரா பள்ளத்தாகில் பத்து வாரங்களில் தயாரித்தார். இப்படம் நேபாள நகரங்களில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இது நேபாள மக்களுக்கும் தேவ் ஆனந்துக்கும் இடையே ஒரு உணர்ச்சிபூர்வமான பிணைப்பை உருவாக்கியது.
ஹிப்பி கலாச்சாரத்தை சித்தரிக்கும் தம் மாரோ தம் என்ற புகழ்பெற்ற இந்தி திரைப்பட பாடல் நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் பெரும் புகழ் பெற்றது. இது நேபாளத்திற்கான இந்திய சுற்றுலாவை அதிகரித்தது. சூலை 2005-ல் நடைபெற்ற நேபாளத்தின் முதல் திரைப்பட விழாவில், நேபாளத் திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக தேவ் ஆனந்த் கௌரவிக்கப்பட்டார்.[4]
பொழுதுபோக்கிற்கு அப்பால்: சமூக விதிமுறைகளை வடிவமைத்தல்
[தொகு]இந்தி திரைப்பட நடனமும், இசையும் நேபாளத்தில் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. தீஜ் திருவிழா மற்றும் குடும்ப கொண்டாட்டங்கள் போன்ற பண்டிகைகளின் போது இந்தி பாடல்கள் இல்லாமல் முழுமையடையாது. உணவகங்களில் அல்லது பள்ளி மற்றும் கல்லூரி விழாக்களில் அடிக்கடி கேட்கப்படும் ஒரு பிரபலமான பாடல் பியார் மெய்ன் கபி கபி திரைப்படத்தின் முசு முசு ஹாசி (மென்மையாகச் சிரித்தல்) ஆகும். நேபாளத்தின் அற்புதமான மலைகளைக் காட்சிப்படுத்திய மற்றொரு படம் உஞ்சாய். கெட்டி கோ கெட்டி கோ (பெண், பெண்) என்ற நேபாள வார்த்தைகளைக் கொண்ட பாடல் நேபாளத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தி பாடல்களில் பின்னப்பட்ட நேபாள வார்த்தைகள் மக்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றது. இந்தி திரைப்படங்கள் நேபாள ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் நாகரிகம் வரையறுத்தது. இந்தி திரைப்பட நடிகைகள் அணியும் புடவைகளின் பிரதிபலிப்புகள் உடனடியாக சந்தைக்கு வந்தன.
நேபாள மொழி திரைப்படங்கள்
[தொகு]முதல் நேபாள மொழித் திரைப்படமான 'சத்ய ஹரிச்சந்திரா' என்ற திரைப்படம் இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து தயாரிக்கப்பட்டு செப்டம்பர் 14, 1951 ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. நேபாள நாட்டில் முதல் முதலில் மாட்சிமை நேபாள அரசாங்கத்தின் தகவல் துறையால் தயாரிக்கப்பட்ட 'ஆமா' என்ற திரைப்படம் அக்டோபர் 7, 1964 அன்று வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தை ஹிரா சிங் காத்ரி என்பவர் இயக்கியுள்ளார், துர்கா ஸ்ரேஸ்தா மற்றும் சைத்யா தேவி ஆகியோரால் எழுதப்பட்டது. இப் படத்தில் நடித்த நடிகர்கள் சிவசங்கர் மனந்தர், புவன் சந்த், சைத்யா தேவி மற்றும் பசுந்தரா பூசல் ஆகியோர் நேபாளி திரைப்படத்துறையில் முதல் நடிகர்களாக கருதப்படுகிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Nepal Screens". therisingnepal.org. Archived from the original on 2020-02-19. Retrieved 2020-11-26.
- ↑ "Nepal's film industry looks beyond Bollywood". www.aljazeera.com. Retrieved 2017-04-26.
- ↑ The good old days of cinema halls in Nepal: Walking down memory lane
- ↑ How India built a bridge in Nepal, one Bollywood blockbuster at a time