சிங்கப்பூர் திரைப்படத்துறை
சிங்கப்பூர் திரைப்படத்துறை | |
---|---|
கோல்டன் வில்லேஜ் விவோ சிட்டி, சிங்கப்பூர் | |
திரைகளின் எண்ணிக்கை | 218 (2018) |
• தனிநபருக்கு | 3.9 ஒன்றுக்கு 100,000 (2011)[1] |
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2011)[2] | |
புனைவு | 14 |
அசைவூட்டம் | 1 |
ஆவணப்படம் | - |
Number of admissions (2011)[4] | |
மொத்தம் | 22,125,200 |
• தனி நபருக்கு | 4.5 (2010)[3] |
நிகர நுழைவு வருமானம் (2011)[4] | |
மொத்தம் | சிங்கப்பூர் வெள்ளி 189 மில்லியன் |
தேசியத் திரைப்படங்கள் | சிங்கப்பூர் வெள்ளி 9.24 மில்லியன் (4.9%) |
சிங்கப்பூர் திரைப்படத்துறை (Cinema of Singapore) என்பது சிங்கப்பூர் நாட்டில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். சிங்கப்பூரில் 1990 களில் இருந்து மாண்டரின், தமிழ், மலாய் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றது.
சிங்கப்பூர் திரைப்படத்துறையின் அதிகரித்துவரும் உலகளாவிய வெற்றி மற்றும் உலகமயமாக்கல் காரணமாக கடந்த இரண்டு தசாப்தங்களாக ஹாலிவுட் திரைப்படங்களில் டான் கெங் ஹுவா மற்றும் பியோனா ஸீ போன்ற சிங்கப்பூர் நடிகர்கள் பணி புரிந்து வருகின்றார்கள். இந்த நாட்டில் வழங்கப்படும் சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழா ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு வெளியான மை மேஜிக் என்ற தமிழ்த் திரைப்படம் சிங்கப்பூர் நாட்டின் சார்பில் 2009 ஆம் ஆண்டிற்கான கான் திரைப்பட விருதிற்கு அனுப்பப்பட்ட முதல் திரைப்படம் ஆகும்.
வரலாறு[தொகு]
முதல் சிங்கப்பூர் நாட்டுத் திரைப்படம் 1992 ஆம் ஆண்டு சீனம், மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியான 'த மீடியம்' என்ற திரைப்படம் ஆகும். இது உள்ளூர் கொலையாளியான அட்ரியன் லிம் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படம் ஆகும். இவர் 1988 ஆம் ஆண்டில் கொலைக்காக தூக்கிலிடப்பட்டார். இதன் தயாரிப்பு $2 மில்லியன் ஆகும் ஆனால் இந்த படம் வசூல் ரீதியாக பெரும் நஷ்டத்தை அடைந்தது.
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Table 8: Cinema Infrastructure - Capacity". UNESCO Institute for Statistics3. 2019-01-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-12-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Table 1: Feature Film Production - Genre/Method of Shooting". UNESCO Institute for Statistics. 2018-12-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-12-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Cinema - Admissions per capita". Screen Australia. 9 November 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ 4.0 4.1 "Table 11: Exhibition - Admissions & Gross Box Office (GBO)". UNESCO Institute for Statistics. 2019-01-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-12-10 அன்று பார்க்கப்பட்டது.