பிலிப்பீன்சு திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிலிப்பீன்சு திரைப்படத்துறை
திரைகளின் எண்ணிக்கை920 (2018)[1]
 • தனிநபருக்கு0.9 per 100,000 (2013)[1]
முதன்மை வழங்குநர்கள்ஸ்டார் சினிமா 27.1%
யுனைடெட் இன்டர்நேஷனல் பிக்சர்ஸ்17.0%
டிஸ்னி 16.1%[2]
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2013)[3]
மொத்தம்53
Number of admissions (2014)[4]
மொத்தம்78,300,000
 • தனி நபருக்கு0.8
நிகர நுழைவு வருமானம் (2017)[4]
மொத்தம்$218 மில்லியன்

பிலிப்பீன்சு திரைப்படத்துறை (Cinema of the Philippines) என்பது 1897 ஆம் ஆண்டு முதல் பிலிப்பீன்சு நாட்டில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும்.

1930 களில் பிரபலமான நாடகம் மற்றும் பழக்கமான உள்ளூர் இலக்கியங்களிலிருந்து திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டது. இங்கு தேசியவாத திரைப்படங்களும் மிகவும் பிரபலமாக இருந்தன, இருப்பினும் அவை மிகவும் மோசமானவை என்று முத்திரை குத்தப்பட்டன. 1940 களில் தயாரிக்கப்பட்ட போர்த் திரைப்படங்கள் பிலிப்பீன்சு மக்கள் மத்தியில் யதார்த்த உணர்வை கொண்டு வந்தன. போர் மற்றும் வீரத்தை உள்ளடக்கிய திரைப்படக் கதைகள் உள்ளூர் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

1950 கள் பிலிப்பீன்சு திரைப்படத்துறையின் பொற்காலம் ஆகும்.[5] மேலும் கலை மற்றும் வயதுவந்தோருக்கான திரைப்படங்களின் தோற்றம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே திரைப்படம் பற்றிய நுட்பங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது. ஆண்டுதோறும் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு பல உள்ளூர் திரைப்படத்துறையினர்கள் வெளிநாடுகளில் அங்கீகாரம் பெற்றன.

1970 கள் மற்றும் 1980 களில் பிலிப்பீன்சு திரைப்படத்துறை நேர்மறையான மற்றும் எதிர்மறையான மாற்றங்களைக் கண்டது. இந்த காலகட்டத்தில் தற்காப்பு, அதிரடி மற்றும் பாலியல் போன்ற வகையான திரைப்படங்கள் மேலும் வளர்ந்தன. 1990 களில் இளயோர்கள் சார்ந்த காதல் நகைச்சுவை மற்றும் பாலியல் ரீதியாக வெளிப்படையான வயதுவந்த படங்கள் ஆகியவற்றின் பிரபலமடைந்தது.

செப்டம்பர் 12, 2019 அன்று தனது நூறு ஆண்டு பிலிப்பீன்சு திரைப்படத்துறை கொண்டாடியது, ஜனாதிபதி பிரகடனம் 622, எஸ். 2018 ஐத் தொடர்ந்து, அதே நாளை 2020 செப்டம்பர் 11 வரை பிலிப்பீன்சு திரைப்படத்துறையின் நூற்றாண்டு ஆண்டாக அறிவிக்கிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]