பூட்டானியத் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திம்புவில் ஒரு திரைப்பட அரங்கம்

பூட்டானியத் திரைப்படத்துறை (Cinema of Bhutan) என்பது 1990 ஆம் ஆண்டிலிருந்து பூட்டான்[1] நாட்டில் திஃசொங்கா மொழியில் தயாரிக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். இது ஒரு சிறிய ஆனால் வளர்ந்து வரும் தொழில்த்துறை ஆகும்.[2] இந்த திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு அரசாங்க அதிகாரிகள் மற்றும் பல்வேறு வணிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றார்கள்.[3] 1989 ஆம் ஆண்டில் உஜியன் வாங்டி இயக்கிய 'காசா லாமாய் சிங்கியே' என்ற படமே முதல் பூட்டானிய நாட்டுத் திரைப்படமாகும்.[4]

பூட்டானியத் திரைப்படத்துறை அண்டை நாடான இந்தியத் திரைப்படத்துறையினால் மிகவும் பாதிக்கப்படுகிறது, பெரும்பாலான பூட்டானியப் படங்கள் பாலிவுட் திரைப்படத்துறை வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். 21 ஆம் நூற்றாண்டில் புட்டானியப் பாண்பாடுகள் சார்ந்து படங்களை தயாரிப்பதற்காக உள்ளூர் திரைப்பட தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.[5] 2011 நிலவரப்படி பூட்டானியத் திரைப்படத்துறை ஆண்டுக்கு சராசரியாக முப்பது படங்களைத் தயாரித்தது. 2012 வாக்கில் திம்புவில் ஆறு திரைப்பட அரங்குகள் இருக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Stancati, Margherita (23 May 2011). "Does Bhutan Love Bollywood Too Much?". The Wall Street Journal.
  2. "Mountains, makeshift cinemas: Bhutan's battle to make movies". Egypt Independent. 31 December 2014.
  3. "Bhutan film industry – report December 2011" (PDF). Bhutan Film Industry. 29 December 2011. 4 March 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது.
  4. Tharchen (18 March 2017). "Emerging Film Industry in Bhutan". Business Bhutan.
  5. Nair, Prathap (21 April 2019). "Bhutan's New Wave". LiveMint.