குஜராத்தி திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
'நர்சிங் மேத்தா' (1932) குஜராத்தி மொழியில் வெளியான முதல் பேசும் திரைப்படம்.

குஜராத்தி திரைப்படத்துறை (Gujarati cinema) என்பது இந்தியத் திரைப்படத்துறையில் முக்கிய பிராந்திய மற்றும் வடமொழி திரைப்படத் தொழில்களில் ஒன்றாகும். இது 1932 முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குஜராத்தி மொழித் திரைப்படங்களைத் தயாரித்துள்ளது.

1932 ஆம் ஆண்டு வெளியான 'நர்சிங் மேத்தா' என்ற திரைப்படமே குஜராத்தி மொழியில் வெளியான முதல் பேசும் திரைப்படம் ஆகும். 1947 ல் இந்தியா சுதந்திரம் பெறும் வரை பன்னிரண்டு குஜராத்தி திரைப்படங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.[1] 2019 ஆம் ஆண்டில் வெளியான 'சால் ஜீவி லாயே!' என்ற திரைப்படம் குஜராத்தி திரைப்படத்துறையில் ₹ 52.14 கோடி (அமெரிக்க $ 7.3 மில்லியன்) அதிக வசூல் செய்த படம் ஆகும்.[2]

வரலாறு[தொகு]

பேச்சுத் திரைப்படம் வருவதற்கு முன்பே குஜராத்தி மக்களுடனும் அவர்களின் கலாச்சாரத்துடனும் நெருங்கிய தொடர்புடைய பல ஊமைத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன, மேலும் பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் குஜராத்தி மற்றும் பார்சி மக்கள் இருந்தனர். 1913 முதல் 1931 க்கு இடையில் குஜராத்திகளுக்கு சொந்தமான இருபது முன்னணி திரைப்பட நிறுவனங்கள், படப்பிடிப்பு வளாகங்கள் மற்றும் நாற்பத்து நான்கு முன்னணி குஜராத்தி இயக்குநர்கள் பெரும்பாலும் பம்பாயில் (இப்போது மும்பை) இருந்தனர்.

ஊமைத் திரைப்படமான பில்வமங்கல் (பகத் சூர்தாஸ், 1919 என்றும் அழைக்கப்படுகிறது) குஜராத்தி எழுத்தாளர் சாம்ப்ஷி உதேஷியின் கதையை அடிப்படையாகக் கொண்டு பார்சி குஜராத்தியான ருஸ்டோம்ஜி தோடிவாலா என்பவரால் இயக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]