நைஜீரியத் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நைஜீரியத் திரைப்படத்துறை நைஜீரியாவில் திரைப்படங்கள் உருவாக்கும் தொழிற்துறை ஆகும். இத்திரைப்படத்துறை பொதுவாக நொலிவுட் என அழைக்கப்படுகிறது. நைஜீரியாவில் திரைப்படத்துறை 1990களில் நைஜீரியாவின் மிகப் பெரிய நகரமான லேகோசில் தொடங்கி வளர்ச்சி பெற்றுவருகிறது. இங்கே ஒவ்வொரு திரைப்படத்துக்குமான முதலீடு மிகச் சிறியதே (~$15,000) என்றாலும், முதன் முறையாக ஆபிரிக்கர்களால், ஆபிரிக்கர்களுக்காக இங்கேயே பெருமளவில் திரைப்படங்கள் தாயரிக்கப்படுகின்றன. எண்ணிக்கை அளவில் ஐக்கிய அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்த படியாக இங்கேயே பெருமளவு திரைப்படங்கள் தாயரிக்கப்படுகின்றன. இவை தரத்தில் மிகவும் அடிமட்டத்திலேயே இருந்தாலும் ஆபிரிக்கர்களுடன் தொடர்புடைய பல கருக்களை எடுத்தாளுகின்றன.