சமசுகிருதத் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமசுகிருதத் திரைப்படத்துறை என்பது இந்தியத் திரைப்படத்துறையில் சமசுகிருத மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படத்துறை ஆகும். இந்த மொழித் திரைப்படத்துறை தனக்கான தனித்துறையை அமைக்கவில்லை. இதுவரை 10 சமசுகிருத மொழி திரைப்படங்கள் மட்டுமே வெளியானது.

முதல் சமசுகிருதத் திரைப்படம் 1983 ஆம் ஆண்டு ஜி. வி. ஐயர்[1] என்பவரால் இயக்கிய 'ஆதி சங்கராச்சாரியார்' என்ற திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 31 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைக்கதை, சிறந்த திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த ஒலிப்பதிவு உள்ளிட்ட நான்கு விருதுகளை வென்றது.[2][3] இரண்டாவது திரைப்படம் 1992 ஆம் ஆண்டு மீண்டும் ஜி. வி. ஐயர் இயக்கிய 'பகவத் கீதை' என்ற திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 1992 ஆம் ஆண்டிற்கான 40 வது தேசிய விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.[4] The next film made was in 2015, after a gap of 22 years.[5]

சமசுகிருத திரைப்படங்களின் பட்டியல்[தொகு]

  • ஆதி சங்கராச்சாரியார் (1983)
  • பகவத் கீதை (1993)
  • பிரியமனாசம் (2015)
  • இஷ்டி (2016)
  • சூர்யகாந்தா (2017)
  • அனுரக்தி (2017)
    • முதல் முப்பரிமாண சமசுகிருத திரைப்படம்.
  • மதுராஸ்மிதம் (2019)
    • உலகின் முதல் குழந்தைகள் சமசுகிருத திரைப்படம்.[6]
  • புண்யகோட்டி (2020)
    • முதல் சமசுகிருத இயங்குபடம்.[7]
  • நமோ (2020)
  • அகோச்சர்னாவா (2020)

மேற்கோள்கள்[தொகு]