போச்புரித் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போச்புரித் திரைப்படத்துறை (Bhojpuri cinema) என்பது இந்தியாவில் பீகார் மாநிலத்தை தலைமை இடமாக கொண்டு போச்புரி மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைத்துறை ஆகும்.[1] போஜிவுட் என்று பிரபலமாக அழைக்கப்படும் போச்புரித் திரைப்படத்துறை ஒரு வளர்ந்து வரும் துறை ஆகும்.

முதல் போச்புரி பேசும் படம் 'கங்கா மையா தோஹே பியாரி சதாய்போ' என்ற திரைப்படம் 1963 ஆம் ஆண்டில் விஸ்வநாத் ஷாஹாபாதியால் என்பவரால் வெளியிடப்பட்டது. 1980 களில் குறிப்பிடத்தக்க சில போச்புரித் திரைப்படங்கள் மட்டுமே வெளியானது. சமீபத்திய ஆண்டுகளில் போச்புரித் திரைப்படத்துறை சுமார் ₹ 2000 கோடி தொழிலாக வளர்ந்துள்ளது.[2] போச்புரி திரைப்படங்கள் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் திரையிடப்படுகிறது. அங்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை குடியேறியவர்கள் இன்னும் போச்புரி மொழியைப் பேசுகிறார்கள். அதேபோல் கயானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, சுரினாம், பிஜி, மொரீஷியஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவிலும் போச்புரி மொழித் திரைப்படங்கள் பார்க்கப்படுகின்றது.[3]

வரலாறு[தொகு]

1960 களில் பீகாரைச் சேர்ந்த இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் என்பவர் பாலிவுட் நடிகர் நசீர் உசேனைச் சந்தித்து போச்புரியில் ஒரு திரைப்படத்தை உருவாக்கச் சொன்னார். அவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப 1963 ஆம் ஆண்டில் முதல் போச்புரி திரைப்படம் உருவாக வழிவகுத்தது.[4] போச்புரி திரைத்துறை வரலாறு நல்ல வரவேற்பைப் பெற்ற 'கங்கா மையா தோஹே பியாரி சதாய்போ' என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்குகியது. பாலிவுட் திரைத்துறையில் முக்கிய நட்சத்திரமான அமிதாப் பச்சன் உட்பட பலரும் சமீபத்தில் போச்புரி படங்களில் பணியாற்றியுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]