சத்திசுகரித் திரைப்படத்துறை
சத்திசுகரித் திரைப்படத்துறை அல்லது சோலிவுட் (Chhattisgarhi cinema) என்பது இந்தியாவில் சத்தீசுகர் என்ற மாநிலத்தில் சத்திசுகரி மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். 1965 ஆம் ஆண்டில் 'காஹி தேபே சந்தேஷ்' என்ற முதல் கருப்பு வெள்ளை நிறத்தில் சத்திசுகரி மொழித் திரைப்படம் வெளியானது.
வரலாறு
[தொகு]முதல் சத்திசுகரி மொழித் திரைப்படம் 1965 ஆம் ஆண்டில் மனு நாயக் இயக்கி தயாரித்த 'காஹி தேபே சந்தேஷ்' என்ற திரைப்படம் கருப்பு வெள்ளை நிறத்தில் வெளியானது.[1] இந்த படத்தை முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இந்தப் படத்தைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு விஜய்குமார் பாண்டே தயாரிக்க, நிரஞ்சன் திவாரி இயக்கிய 'கர் துவார்' என்ற திரைப்படம் வெளியானது. இருப்பினும் இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக சிறப்பாக செயல்படவில்லை மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏட்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு சத்திசுகரி மொழித் திரைப்படங்கள் தயாரிக்கப்படவில்லை.[2]
நவீன திரைத்துறை
[தொகு]2000 ஆம் ஆண்டு சத்திசுகரி மொழித் திரைப்படத்துறைக்கு மறு புத்தியுர் காலம் என்று கூறலாம்.[3] 2000 ஆம் ஆண்டில் சதீஷ் ஜெயின் தயாரித்து இயக்கிய 'மோர் சைன்ஹா பூன்யா' என்ற திரைப்படம் அக்டோபர் 27, 2000 ஆண்டு வெளியிடப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு, பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் என்பவர் சத்தீஸ்கர் என்ற புதிய மாநிலத்தை உருவாக்குவதாக அறிவித்தார். அதன் பிறகு இப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றித் திரைப்படம் என்று கூறப்படுகிறது, ஏனெனில் இந்த படம் வெறும் 20-30 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்டது, ஆனால் ரூ .2 கோடிக்கு மேல் வசூல் செய்தது.[4] [5]
2005 ஆம் ஆண்டில் இசை இயக்குனர் கல்யாண் சென் இசையமைபில் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் என்பவர் 'பக்லா' என்ற சத்திசுகரி திரைப்படத்திற்காக ஒரு பாடலைப் பாடினார். இது சத்திசுகரித் திரைப்படத்துறை மீதான தயாரிப்பாளர்களின் ஆர்வத்தை புதுப்பித்தது. இன்று சத்திசுகரி மொழித் திரைப்படங்கள் சத்தீஸ்கருக்கு வெளியே கூட, குறிப்பாக நாக்பூர் போன்ற நகரங்களில் வெளியிடப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Castes, India Committee on Untouchability, Economic and Educational Development of the Scheduled; Elayaperumal, L. (1969-01-01). Report of the Committee on Untouchability, Economic and Educational Development of the Scheduled Castes and Connected Documents, 1969 (in ஆங்கிலம்). Department of Social Welfare. p. 37.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Ghosh, Avijit. "Chhollywood calling". Times of India. Times of India. Archived from the original on 2013-09-28. பார்க்கப்பட்ட நாள் 16 May 2010.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Mor Chhainha Bhuinya". IMDB. IMDB. பார்க்கப்பட்ட நாள் 27 September 2013.
- ↑ https://data.worldbank.org/indicator/PA.NUS.FCRF?end=2001&locations=IN&start=2000
- ↑ Nahta, Komal (9 February 2001). "Chhattisgarhi film beats Mohabbatein". Rediff.com இம் மூலத்தில் இருந்து 1 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131001123421/http://www.rediff.in/movies/2001/feb/09chhat.htm. பார்த்த நாள்: 6 September 2013.