அரியான்வி திரைப்படத்துறை
அரியான்வி திரைப்படத்துறை (Haryanvi cinema) என்பது இந்தியத் திரைப்படத்துறையில் அரியான்வி மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படங்களைக் குறிக்கிறது. இந்திய மாநிலமான அரியானா மாநிலத்தில் அரியான்வி திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
வரலாறு
[தொகு]1984 இல் வெளியான 'சந்திரவால்'[1][2] என்ற திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற முதல் அரியான்வி மொழித் திரைப்படம் ஆகும்.[3] 2000 ஆம் ஆண்டில் 'அஸ்வினி சவுத்ரி' இயக்கத்தில், நடிகர் 'அசுதோஷ் ராணா' நடித்து வெளியான 'லாடோ' என்ற திரைப்படம் மற்றொரு வெற்றிகரமான அரியான்வி திரைப்படம் ஆகும். இது தேசிய திரைப்பட விருதில் புதுமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருதை வென்றுள்ளது.[4] இதுவே தேசிய விருது பெற்ற முதல் அரியான்வி மொழியித் திரைபபடம் ஆகும்.[5]
2014 இல் வெளியான 'பக்டி த ஹொனோர்' என்ற திரைப்படம் 62 வது தேசிய திரைப்பட விருது விழாவில் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளது. அதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் 'சத்ரங்கி' என்ற திரைப்படம் சிறந்த படத்திற்கான 63 வது தேசிய திரைப்பட விருதை வென்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ""Chandrawal - Central Board of Film Certification"". Archived from the original on 5 April 2012. பார்க்கப்பட்ட நாள் 19 September 2011.
- ↑ Complete Index To World Film (CITWF). http://www.citwf.com/film58065.htm.
- ↑ "Haryana may set up board to promote Haryanvi films". The Hindu. 3 October 2010 இம் மூலத்தில் இருந்து 8 அக்டோபர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101008025813/http://www.hindu.com/2010/10/03/stories/2010100359290700.htm. பார்த்த நாள்: 17 March 2011.
- ↑ Desk, Online (24 March 2015). "Complete List of The 62nd National Film Awards". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 12 August 2015.
- ↑ "President Honours Cinematic Excellence at 62nd National Film Awards - May 03,2015". outlookindia.com. 10 August 2015. பார்க்கப்பட்ட நாள் 12 August 2015.