இந்தோனேசியத் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தோனேசியத் திரைப்படத்துறை
La Piazza 21 Kelapa Gading Jakarta.JPG
திரைகளின் எண்ணிக்கை1700 (2018)
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2017)[1]
மொத்தம்100 (சராசரியாக)
Number of admissions (2017)[2]
மொத்தம்42,000,000
நிகர நுழைவு வருமானம் (2017)[3]
மொத்தம்$345 மில்லியன்

இந்தோனேசியத் திரைப்படத்துறை (Cinema of Indonesia) என்பது இந்தோனேசிய நாட்டில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். இந்த திரைப்படத்துறையின் வரலாறு 1900 ஆம் ஆண்டிற்கு முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளது. 1920 கள் வரை இந்தோனேசியாவில் உள்ள திரைப்படத்துறை ஐரோப்பியர்களுக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது. அவர்கள் தயாரிக்கப்படும் அமைதியான ஆவணப்படங்கள் மற்றும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டது.

ஆரம்ப காலத்தில் டச்சு கிழக்கு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியால் இந்தோனேசியாவின் தன்மை மற்றும் வாழ்கை குறித்த ஆவணப்படங்கள் டச்சு அல்லது ஐரோப்பியர்களால் தயாரிக்கப்பட்டது. ஆவணப்படங்களின் உள்நாட்டு உற்பத்தி 1911 இல் தொடங்கியது. டச்சு கிழக்கு இந்திய அரசாங்கம் மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் படம் 1926 ஆம் ஆண்டில் 'லூட்டோங் காசரோங்' என்ற ஒரு ஊமைத் திரைப்படம் ஆகும். இது அதே பெயரில் சுண்டானிய என்ற புராணத்தின் தழுவலாகும். 1926 ஆம் ஆண்டில் பண்டுங் நகரில் ஓரியண்டல் மற்றும் எலிடா என இரண்டு திரைப்பட அரங்குகள் இருந்தன. ஜகார்த்தா நகரின் முதல் திரைப்பட அரங்கம் அல்ஹம்ரா ஆகும். இது 1931 இல் திறக்கப்பட்டது.

இந்தோனேசியத் திரைப்படத்துறை நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை ஆகும்.[4] 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தோனேசியா நாட்டில் திரைப்பட பார்வையாளர்களின் எண்ணிக்கை 42 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது. அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் 100 க்கும் மேற்பட்ட திரைபபடங்கள் தயாரித்து வெளியிடுகிறது.[5] 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தோனேசியாவில் சுமார் 1,700 திரை அரங்குகள் உள்ளன, அவை 2020 ஆம் ஆண்டில் 3,000 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]