வடகொரியத் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியோங்யாங் திரைப்பட வளாகத்தின் சுவரோவியம்

வடகொரியத் திரைப்படத்துறை (Cinema of North Korea) என்பது வடகொரிய நாட்டுத் திரைப்படத்துறை ஆகும். இந்த நாட்டில் அரசியல் சூழ்நிலை காரணமாக திரைப்படத்துறை பெரும் வளர்ச்சியை அடையவில்லை. அனைத்து திரைப்பட தயாரிப்புகளும் கொரியாவின் தொழிலாளர் கட்சியால் மேற்பார்வையிடப்பபட்டு பல விதிமுறைகளின் கீழ் இயக்குகின்றது. வடகொரியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் 1949 ஆம் ஆண்டு வெளியான 'மை ஹாம் வில்லேஜ்' என்ற படம் ஆகும்.[1] இங்கு பெரும்பாலும் அரசியல் மற்றும் இராணுவம் சார்ந்த ஆவனத் திரைப்படங்கள் தான் தயாரிக்கப்படுகின்றது.

வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட படங்களின் எண்ணிக்கையை தீர்மானிப்பது மிக கடினம். 1992 ஆம் ஆண்டில் ஆண்டுதோறும் சுமார் 80 திரைப்படங்களைத் தயாரிப்பதாக ஆசியவீக் என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது[2] மற்றும் 2001 ஆம் ஆண்டில் பிபிசி அறிக்கை ஒன்று வட கொரியா ஆண்டுக்கு 60 திரைப்படங்களைத் தயாரிக்கிறது என்பதைக் குறிக்கிறது.[3] வடகொரியா நாட்டில் 1987 ஆம் ஆண்டில் இருந்து பியோங்யாங் சர்வதேச திரைப்பட விழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Fischer, Paul (2016). A Kim Jong-Il Production: Kidnap, Torture, Murder... Making Movies North Korean-Style. London: Penguin Books. பக். 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-241-97000-3. 
  2. Gluckman, Ron (September 1992). "Cinema Stupido". Asiaweek.
  3. Barron, Brian (September 5, 2001). "West snubs North Korea movies". bbc.co.uk. http://news.bbc.co.uk/1/hi/entertainment/film/1526628.stm. பார்த்த நாள்: March 15, 2008.