உள்ளடக்கத்துக்குச் செல்

தோக்ரி திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோக்ரி திரைப்படத்துறை
ஜம்முவில் உள்ள ஹரி திரையரங்கம்
திரைகளின் எண்ணிக்கை100+ ஒற்றைத் திரையரங்குகள் (ஜம்மு மற்றும் இமாச்சலப் பிரதேசம்)

தோக்ரி திரைப்படத்துறை (Dogri cinema) இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள மொழிகளுள் ஒன்றான தோக்ரி மொழித்[1] திரைப்படத்துறையாகும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பகுதியில் அதிகமாகப் பேசப்படும் இம்மொழியில் சில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இந்தியத் திரைப்பட விழாவில் தோக்ரி மொழித் திரைப்படத்திற்காக தேசிய அளவிலான சிறப்பு விருது வழங்கப்படுகிறது. இதுவரையில் ஒரு தோக்ரி மொழித் திரைப்படம் இவ்விருதைப் பெற்றுள்ளது.

கல்லன் ஹேயென் பீட்டியன், மா நி மில்தி, குக்கி மார் துவாரி, தில்லே இச் வாசுய கோய் ஆகிய நான்கு திரைப்படங்களே இதுவரையிலும் வெளியாகியுள்ளன. தில்லே இச் வாசுய கோய் என்னும் திரைப்படம் தோக்ரி மொழித் திரைப்படத்திற்கான 2011 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளது[2] .

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Plea to include Kosli in 8th Schedule of Constitution". தி இந்து. 22 செப்டெம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 24 பெப்பிரவரி 2013.
  2. "59th National Film Awards for 2011 - Feature Films" (PDF). Directorate of Film Festivals. Archived from the original (PDF) on 2013-11-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோக்ரி_திரைப்படத்துறை&oldid=3559716" இலிருந்து மீள்விக்கப்பட்டது