வியட்நாமியத் திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியட்நாமியத் திரைப்படம்
ஓ சி மின் நகரத் திரையரங்கம்
திரைகளின் எண்ணிக்கை246 (2012)[1]
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2011)[2]
புனைவு3
அசைவூட்டம்4
ஆவணப்படம்28
Number of admissions (2011)[3]
மொத்தம்13,500,000
நிகர நுழைவு வருமானம் (2012)[4]
மொத்தம்43 மில்லியன் டாலர்

வியட்நாமிய திரைப்படத்துறை (cinema of Vietnam) 1920 களில் தோன்றியது. வியட்நாமியத் திரைப்படம் 1940 களில் இருந்து 1970 கள் வரையில் நடந்த வியட்நாம் போரால் வடிவமைந்ததாகும். பிரெஞ்சு நாட்டில் பயிற்சிபெற்ற வியேத் கியேயு இயக்குநர் திரான் ஆன் குங் அவர்கள் வியட்நாம் மொழியில் இயக்கி வெளியிட்ட சைக்ளோ (Cyclo) பச்சைப் பப்பாளியின் மணம் (The Scent of Green Pappaya) சூரியச் செங்கதிர் (Vertical Ray of the Sun) ஆகியவை பரவலாக அறியப்பட்ட மிகச் சிறந்த படங்களாகும். அண்மையில் அரசின் பரப்புரைப் படங்களைத் தவிர. திரைத்துறை நிகழ்கால வியட்நாம் இயக்குநர்களால் பெரிதும் புதுக்கப்பட்டு பரவலான மக்கள் ஆதரவு பெருகிய பல படங்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் எருமைப் பையன் (The Buffalo Boy), நடன மகளிர் (Bar Girls), வெண்பட்டாடை (The White Silk Dress) ஆகியவை மிகவும் பெயர்பெற்றவையாகும்.

வரலாறு[தொகு]

தொடக்கநிலைத் திரைப்படங்கள்[தொகு]

வியட்நாமிய அறிவாளிகளின் குழுவொன்று 1920 களில் குவாங்கி திரைப்படக் குழுமத்தை கனாய் நகரில் உருவாக்கியது. அது கை தின் பேரரசரின் இறுதிச் சடங்கையும் பாவோ தைய் அரசரின் அரசிழப்பையும் ஆவணப்படங்களாகப் பிடித்து வெளியிட்டது. மேலும், மோத் தோங் கேம் தாவு துவோசு நிகுவா (குதிரைக்கொரு பணம்) எனும் பேசாத படத்தையும் வெளியிட்டது. முதல் பேசும்படங்கள் 1937 முதல் 1940 வரையிலான காலகட்டத்தில் வெளியிடப்பட்டன. திரான் வோய் தின் (காதலில் உண்மையாக), கூசு காய் கோவான் (வெற்றிப் பாடல்) தோயத் சோ மா (தோயத்தின் கமுக்கமான பேய்கள்) ஆகிய படங்களைக் கனாய் நகர ஆசியத் திரைப்படக்குழு கலைஞர் தாம்தன் அவர்களின் பங்களிப்போடு எடுத்து வெளியிட்டது. திரான் தான் கியாவு தலைமையில் இயங்கிய வியட்நாம் திரைப்படக் குழு மோத் புவோய் சியேவு திரேன் சாங் சூவுலோங் (மேக்காங் ஆற்றில் மாலையில்), தாய் பாப் இரவு தோ (செந்தாடி கட்டுவிப்பாளன்) ஆகிய படங்களை வெளியிட்டது.

சான் தோங் மா (பேய் வயல்), திரான் போங் பா (புயல்)எனும் இரண்டு படங்கள் ஆங்காங்கில் 1937 இலும் 1938 இலும் வியட்நாம் நடிகர்களையும் வியட்நாம் உரையாடலையும் கொண்டு எடுக்கப்பட்டன. இவை நிதியீட்ட முடியாமல் தோல்வியுற்றன.

அரசின் தகவல் பரப்புரை அமைச்சகம் 1945 இல் திரைப்படத் துறையை உருவாக்கி இந்தோசீனப் போர்களைத் திரான் மோசு கோவா (மோசு கோவாப் போர்) ஆகிய ஆவணப்படங்களில் 1948 இல் பதிவு செய்தது; பிறகு, திரான் தோங் கே (தோங் கே போர்) ஆவணப்படம் 1950 இலும் சேன் தாங் தாய் பாசு (வடமேற்கு வெற்றி) ஆவணப்படம் 1952 இலும் வியட்நாம் திரேன்துவோங் தாங் இலோய் (வெற்றி நோக்கி வியட்நாம்) ஆவனப்படம் 1953 இலும் தியேன் பியேன் பூ ஆவணப்படம் 1954 இலும் எடுக்கப்பட்டன.

போராட்டக் காலத்தில்[தொகு]

இந்தோசீனப் போர் முடிவுற்று, தென்வியட்நாமும் வடக்கு வியட்நாமும் உருவாகிய பிறகு, இரு வியட்நாமியத் திரைப்பட்த் தொழிலகங்கள் கனாயிலும் சாய்கோனிலும் இயங்கின; முன்னது ஆவணப்படங்களிலும் திரைநாடகங்களிலும் கவனம் செலுத்த, பின்னது போர், நகைச்சுவைக் கேளிக்கைப் படங்களிலும் கவனம் செலுத்தியது.

கனாயில் வியட்நாம் திரைப்படக் கலைக்கூடம் 1956 இல் நிறுவப்பட்டது; கனாய்த் திரைப்படப் பள்ளி 1959 இல் திறக்கப்பட்டது. வியட்நாம் மக்கள் குடியரசு முதல் திரைப்படமாக, நிகுயேன் கோங் நிகியால் இயக்கப்பட்ட, சுங் மோத் தோங் சாங் (ஒருங்கே ஒரே ஆற்றில்) வெளியாகியது. மேலும், 1950 இல் தாங் தோய் தாங் சாவோ (நரிக்கான சரியான தண்ட்னை) எனும் அசைவூட்டப் படமும் வெளியாகியது.

வியட்நாம் ஒருங்கிணைப்பின் பிறகு[தொகு]

வியட்நாம் போர் முடிவுற்று, தென்வியட்நாமும் வடக்கு வியட்நாமும் ஒருங்கிணைந்த்தும், முந்தைஅய் தென்வியட்நாமின் கலைக்கூடங்கள் சமவுடைமை நடப்பியல் சார்ந்த திரைப்படங்களை வெளியிட்டன. வியட்நாம் திரைப்படங்கள் எண்ணிக்கையி கூடி, போர்க்காலத்தில் 3 ஆக இருந்த்ந் நிலை மாறி 1978 ஆம் ஆண்டுக்குப் பிறகு, 20 அளவுக்கு உயர்ந்தது.

போருக்குப் பின்னரான திரைப்படங்கள் புரட்சியில் விளைந்த வீரப்பெற்றிகளைக் கொண்டாடின; போர்த்துன்பங்களினை விரிவாக்க் காட்டின; போருக்குப் பிந்தைய மீள்கட்டுமானச் சிக்கல்களை விதந்தோதின. இக்காலத்துக்குப் பின்னரான திரைப்படங்களாக, மூவா கியோசுவோங் (சுறாவளிப் பருவம்) 1978 இலும் சான் தோங் கோவாங் (கடும்வயற் பணி) 1979 இலும் வெளியாகின.

நிகழ்காலத் திரைப்படங்கள்[தொகு]

வியட்நாம் சந்தைப் பொருளியலுக்கு 1986 இல் மாறியதும், வியட்நாம் திரைப்படத் தொழிலை முடக்கியது; அதுமுதல் இத்துறை தொலைக்காட்சி, காணொளித் தொழிநுட்பங்களோடு போட்டியிட நேர்ந்தது. 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திரைப்படங்களின் வெளியீடு வேகமாக வீழ்ச்சி கண்டது.

என்றாலும் கலைச் சுற்றகம் வழியாக பல திரைப்படங்கள் வெளியிடப்பட்டு பார்க்கப்பட்டன. இவற்றில், [திரான் வான் தோயின் Hà Nội trong mắt ai? (கனாய், யார் பார்வையில்?, 1983), Chuyện tử tế (நன்னடத்தையின் கதை, 1987), திரான் ஆன் திராவின் Người công giáo huyện Thống Nhất (தோங் நிகாத் மாவட்டக் கத்தோலிக்கர், 1985), திரான் வூவின் Anh và em (நாற்றுகள், 1986), தாங் நாத் மின் அவர்களின் Cô gái trên sông (ஆற்றங்கரையில் ஓர் இளம்பெண், 1987), நிகுயேன் காசு உலோயின் Tướng về hưu (ஓய்வுபெற்ற படைத்தளபதி), தாங் நாத் மின்னின் Mùa ổi (கொய்யாக்கனி பருவம், 2001) ஆகியன அடங்கும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "State film agency urged to upgrade censorship device". Tuổi Trẻ news. பார்க்கப்பட்ட நாள் 9 November 2013.
  2. "Table 1: Feature Film Production - Genre/Method of Shooting". UNESCO Institute for Statistics. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Berlin 2013: A Company Launches Vietnamese Distribution Arm". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 9 November 2013.
  4. "Vietnamese cinemas earn $43 million in 2012". News VietNamNet. Archived from the original on 9 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 9 November 2013.

வெளி இணைப்புகள்[தொகு]