கம்போடியத் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்போடியத் திரைப்படத்துறை
திரைகளின் எண்ணிக்கை12 (2011)[1]
 • தனிநபருக்கு0.1 ஒன்றுக்கு 100,000 (2011)
முதன்மை வழங்குநர்கள்ரியஸ்மெய் பீன்மீஸ் 35.0%
வெஸ்டெக் மீடியா30.0%
சண்டே 11.0%[2]
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2005-2009)[3]
மொத்தம்38 (சராசரியாக)

கம்போடியத் திரைப்படத்துறை (Cinema of Cambodia) என்பது கம்போடிய நாட்டில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும்.

இந்த திரைப்படத்துறை 1950 களில் தொடங்கியது, மேலும் 1960 களில் பல படங்கள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் திரையிடப்பட்டன அவை கம்போடியத் திரைப்படத்துறையின் 'பொற்காலம்' என்று கருதப்படுகின்றன. கெமர் ரூச் ஆட்சியின் போது கம்போடியத் திரைப்படத்துறை பெரும் வீழ்ச்சியை அடைந்தது. அதன் பிறகு காணொளி மற்றும் தொலைக்காட்சியின் ஆதிக்கம் காரணமாக கம்போடியத் திரைப்படத்துறை சிறிய துறையானது.

வரலாறு[தொகு]

1920 களின் முற்பகுதியில் வெளிநாட்டு திரைப்பட தயாரிப்பாளர்களால் ஆவணப்படங்கள் படமாக்கப்பட்டன. கம்போடியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் 1950 களில் வெளிநாடுகளில் படித்த ரோயூம் சோஃபோன், ஐயு பன்னக்கர் மற்றும் சன் பன் லி போன்ற திரைப்பட தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டன. தற்போது ரியஸ்மெய் பீன்மீஸ், வெஸ்டெக் மீடியா, சண்டே போன்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களால் காதல், திகில் போன்ற வகைத் படங்கள் தயாரிக்கப்படுகின்றது. கம்போடியத் திரைப்படத்துறையில் திகில் த் திரைப்படங்கள் மிகவும் பிரபலமானது. ஆனால் 2007 இன் பிற்பகுதியில் நடைபெற்ற மூன்றாம் கெமர் திரைப்பட விழாவில் திகில் படங்கள் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டன.

வீழ்ச்சி[தொகு]

2007 ஆம் ஆண்டின் இறுதியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிய காரணமாக திரையரங்குகளும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களும் மூடத் தொடங்கின. 1965 மற்றும் 1975 க்கு இடையில் 30 உடன் ஒப்பிடும்போது 13 திரையரங்குகள் மட்டுமே இயங்குகின்றன. மோசமான திரைக்கதை, வசனம் மற்றும் பலவீனமான நடிப்பு மற்றும் குறைத்த உற்பத்தி போன்ற காரணமாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Table 8: Cinema Infrastructure - Capacity". UNESCO Institute for Statistics இம் மூலத்தில் இருந்து 2018-12-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224225516/http://data.uis.unesco.org/?ReportId=5542. 
  2. "Table 6: Share of Top 3 distributors (Excel)". UNESCO Institute for Statistics இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224225508/http://data.uis.unesco.org/. பார்த்த நாள்: 5 November 2013. 
  3. "Average national film production". UNESCO Institute for Statistics இம் மூலத்தில் இருந்து 2013-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131023181712/http://www.uis.unesco.org/culture/Documents/average-film-production-2009.xls. 

வெளி இணைப்புகள்[தொகு]